மைக்கை பிடித்த மைதிலி.. "அந்த" ஒரு வார்த்தை.. டக்கென திரும்பி பார்த்த ஸ்டாலின்.. அதிர்ந்த அரங்கம்..!
முதல்வர் ஸ்டாலினை புகழ்ந்து மைதிலி வினே பேசிய பேச்சு, பாஜகவில் உற்று கவனிக்கப்பட்டது
சென்னை: மைதிலி வினோ, பாஜகவில் இருந்து திமுகவுக்கு தாவி உள்ள நிலையில், அவரது பேச்சுக்கள் இணையத்தை, இந்த 2 நாட்களாகவே ஆக்கிரமித்து வருகின்றன..
கடந்த சில நாட்களுக்கு முன்பு அமைச்சர் செந்தில் பாலாஜியை, பாஜகவின் முன்னாள் மகளிரணி செயலாளராக இருந்த மைதிலி வினோ நேரில் சந்தித்து பேசியிருந்தார்.
இது அப்போதே சர்ச்சையான நிலையில், கோவை பாஜக அதிர்ந்தது.. மைதிலி விரைவில் திமுகவில் இவர் இணைய போவதாகவும் தகவல்கள் கசிந்தன..

ஆதங்கங்கள்
இதையடுத்து, 2 நாட்களுக்கு முன்பு, மைதிலி வினோவை கட்சியில் இருந்து நீக்கி தமிழக பாஜக உத்தரவிட்���து.. இந்த உத்தரவையடுத்து, பாஜக கோவை மாவட்ட தலைவர் உத்தம பாலாஜிக்கு மைதிலி வினோ ஒரு கடிதம் எழுதியிருந்தார்... அந்த கடிதத்தில் தன்னுடைய ஆதங்கங்களையும், மனக்குமுறல்களையும் கொட்டி, சில கேள்விகளையும் எழுப்பியிருந்தார்.. அந்த கடிதமும் இணையத்தில் வைரலாகி, கோவை பாஜகவுக்கு அதிர்ச்சியை தந்தது.

கருகும் தாமரை
பிறகு நேற்று முன்தினம், ஒரு யூடியூப��� சேனலுக்கு மைதிலி பேட்டி தந்திருந்தார்.. அதில், பாஜகவை சரமாரியாகவும், கடுமையாகவும் விமர்சித்திருந்தார்.. பணம் வைத்திருப்பவர்கள் கட்சிக்கு வந்தால், உடனே பதவி வழங்கப்படுகிறது, ஆனால் பல வருடமாக கட்சிக்கு உழைத்தவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள்.. கட்சிக்கு களங்கம் ஏற்படுத்திவிட்டதாக ஏன் சொல்கிறார்கள்? நான் என்ன கட்சிப் பணத்தை கையாடல் செய்துவிட்டு, களங்க��் ஏற்படுத்திவிட்டேனா? இதற்கு பாஜக சரியான விளக்கத்தை அளிக்க வேண்டும்..

20 ஆயிரமா?
பாஜக என்ற கட்சி என்னைக்குமே ஜெயிக்காது என்று தெரிந்திருந்தும், நாங்கள் வேட்பாளராக களம் இறங்கி பணத்தை செலவு செய்திருக்கிறோம்.. பாஜகவில் மாநில பொறுப்பு பெற வேண்டுமென்றால், அவர்கள் மாதம் 50 ஆயிரம் ரூபாய் செலவு செய்ய வேண்டும்.. மாவட்ட பொறுப்பு என்றால் மாதம் 20 ஆயிரம் செலவு செய்ய வேண்டும்.. மண்டல பதவிகள் என்றால் 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் ரூபாய் செலவு செய்ய வேண்டும்.. அப்படி என்றால் இவர்களின் கொள்கை எங்கே போனது? நான் இப்போ சொல்கிறேன், தமிழகத்தில் தாமரை எந்த காலத்திலும் மலராது என்று திடமாக மைதிலி கூறியிருந்தார்.

வணக்கம் + இணக்கம்
இந்நிலையில், நேற்றைய தினம், திமுகவில் தன்னை முறைப்படி இணைத்துக் கொ���்டார் மைதிலி.. நிகழ்ச்சியில் மேடையில் அவருக்கு உட்கார இடம் தரப்பட்டது.. பிறகு, பேசுவதற்கும் வாய்ப்பும் தரப்பட்டது.. இவரது பெயரை அறிவித்ததுமே, பேசுவதற்காக எழுந்து சென்றார்.. அப்போது முதல்வர் ஸ்டாலினுக்கு வணக்கம் சொல்லியபடி சென்று, மைக்கை பிடித்தார். தம்மை யார் என்று அறிமுகம் செய்து கொண்ட மைதிலி, ஓரிரு வார்த்தைகள் பேசினார்.. அந்த வார்த்தைகள் அரங்கையே அதிர வை��்ததுதான் ஹைலைட்.

சூரியன், உதயசூரியன்
"தளபதி ஐயா அனுமதியுடன்".. என்று சொல்லிவிட்டு பேச்சை துவங்கினார்.. "ஐயா, நான் கடந்த 1999-ல் பாஜகவில் இணைந்தேன்.. அப்போது நான் மாவட்ட மகளிர் அணி பொதுச்செயலாளர்.. என்னுடைய கடின உழைப்பால் இந்த பதவியை பெற்றேன்... ஆனால், கடந்த ஒரு வருட காலமாக பாஜகவில் பணம் கொழுத்தவர்களுக்கே பதவி என்று மாறிவிட்டது.. அந்த சமயத்தில், நான் கட்சியில் இருந்து வெளியேறினேன்.. தளபதி ஐயா, மகளிருக்காக பல திட்டங்களை அறிவித்திருக்கிறார்.. நான் திமுகவில் இருந்து பெண்கள் முன்னேற்றத்திற்காக பாடுபடுவேன் என இந்த சமயத்தில் உறுதி கூறுகிறேன்.. ஐயா, உலகத்திற்கு எப்படி ஒரு சூரியனோ, இனிமேல் தமிழ்நாட்டுக்கு ஒரு உதயசூரியன் மட்டும்தான்" என்றார்.

ஸ்மைல் + கரகோஷம்
மைதிலி இப்படி சொன்னதுமே, அரங���கமே கூடி கைகளை தட்டியது.. மேடையில் உட்கார்ந்திருந்த செந்தில் பாலாஜி உள்ளிட்டோரும் கைகளை தட்டி வரவேற்றனர்.. இந்த பேச்சுக்கள் அனைத்தையும் கவனித்த, ஸ்டாலின் மெல்லிதாக ஒரு புன்னகையை வீசி கொண்டிருந்தார்.. வழக்கமாக, திமுக மீது ஊழல் புகார்களை சொல்லும் பாஜக மீதே, மைதிலி ஊழல் புகார் சொல்லி உள்ளது, 2 நாட்களாகவே அக்கட்சிக்கு கடுப்பை தந்து வருகிறது.. போதாக்குறைக்கு, ���ேடையிலேயே பாஜகவில் பணம் கொழுத்தவர்களுக்கே பதவி என்ற விஷயத்தையும் ஓபனாகவே சொல்லிவிட்டது, மேலும் கடுப்பை தந்து வருகிறதாம்..!












Click it and Unblock the Notifications