கைமாறும் "ஸ்வீட்பாக்ஸ்".. வந்துட்டாரு "வலது கை".. காலரை தூக்கிவிடும் எடப்பாடி.. கவனிக்கும் திமுக

எடப்பாடி பழனிசாமி, ஈரோடு கிழக்கு தொகுதி பிரச்சார வியூகம் குறித்து முக்கிய அசைமென்ட் தந்துள்ளாராம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடக்க போகும் இடைத்தேர்தலில் எப்படியும் மெஜாரிட்டி வாக்கு சதவீதத்தை எட்டிவிடுவோம் என்று உறுதியாக நம்புகிறாராம் எடப்பாடி பழனிசாமி.. இதற்காக சில வியூகங்களையும் கையில் எடுத்து, அந்த பணிகளை முக்கிய நபர்களுக்கு அசைன் செய்துள்ளாராம்.

வலுவான அணியாகவும், தீயான பிரச்சாரத்தையும் திமுக மேற்கொண்டு வருகிறது.. கடந்த வாரம்வரை, அதிமுகவில் வேட்பாளர் யார் என்றே முடியாகவில்லை.. பாஜக ஆதரவு தருமா என்றும் தெரியவில்லை.. சின்னம் கிடைக்குமா? என்பதும் உறுதியாகவில்லை.

இதற்கு பிறகுதான் அதிமுகவின் க்ளைமேட்டே மாறியது.. இலை கிடைத்துவிட்டது.. ஓபிஎஸ் ஒதுங்கிவிட்டார்... பாஜக ஆதரவு தந்துவிட்டது. இதுபோக கூட்டணிகளின் பெருவாரியான சப்போர்ட்டும் கிடைத்துவிட்டது.

செங்கோட்டையன்

செங்கோட்டையன்

இதனால், டக்குனு ஒரே நாளில் எடப்பாடியின் கிரேப் எகிறிவிட்டது.. ஆதரவும் கூடிவிட்டது.. இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்தே, அதிமுக 10 நாட்களுக்கு கூடி, கூடி ஆலோசனை நடத்தியது.. இதில் முக்கிய பங்காற்றியது மூத்த தலைவர் செங்கோட்டையன் என்றே சொல்ல வேண்டும்.. செங்கோட்டையனுடன் நேரடியாகவே எடப்பாடி பழனிசாமியும் ஆலோசனையில் கலந்து கொண்டார்.. பின்னர். தேர்தல் பணிக்குழு தலைவராக செங்கோட்டையன்தான் நியமிக்கப்பட்டுள்ளார்.. எனினும், வேறு அசைன்மென்ட்களையும் முக்கிய நபர்களுக்கு எடப்பாடி பழனிசாமி ஒதுக்கி உள்ளாராம்.

 அசைன்மெண்ட்

அசைன்மெண்ட்

அதில் முக்கியமானவர் தன்னுடைய வலதுகரமான சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் கூட்டுறவு இளங்கோவன் ஆவார்.. தேர்தல் பணிகளில் கூடுதலாக கவனம் செலுத்த இளங்கோவனுக்கு தரப்பட்டுள்ளதாம். அதேபோல, அனைத்து பிரச்சார பணிகளும் சரியாக நடக்கிறதா என்பதை ரகசியமாக கண்காணிக்க மேற்கு மண்டல எம்எல்ஏ ஒருவருக்கும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாம்... இதனால், ஆளுக்கு ஒருபக்கம் தீயாக இறங்கி, திமுகவுக்கு செக் வைக்கும் வகையில் செயல்பட்டு வருகிறார்களாம்.. இதை ஈவிகேஎஸ் தரப்பும் உற்று கவனித்து வருவதாக சொல்கிறார்கள்.

முறியடிப்பு

முறியடிப்பு

இரண்டாவதாக, திமுகவுக்கு எதிரான பிரச்சாரத்தை, சரியான வடிவில் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்பதில் எடப்பாடி டீம் தெளிவாகவும், உறுதியாகவும் இருக்கிறதாம்.. வழக்கம்போல் ஆளும்கட்சி மீதான விமர்சனங்களை எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் என்றாலும், இந்த முறை எடப்பாடி டீம், திமுக அரசுக்கு எதிரான விஷயங்களை எல்லாம் லிஸ்ட் போட்டு கையில் வைத்துள்ளதாம்.. இவைகளை அம்மக்களிடம் கொண்டு செல்லும்போது, இதன் மூலம் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவனுக்கு கடுமையான போட்டியை ஏற்படுத்த முடியும் என்றும் கணக்கு போட்டு வருகிறதாம்.

 பர்ச்சேஸ்

பர்ச்சேஸ்

மூன்றாவதாக, இரட்டை இலை சின்னம் கிடைத்திருப்பதால் கையை ஜெயிப்பது பெரிய விஷயம் இல்லை என்று நினைக்கிறாராம் எடப்பாடி.. அதனால்தான் "ஓட்டுகளை பர்ச்சேஸ் செய்ய நினைப்பவர்களின் திட்டத்தை தடுத்து நிறுத்தினால் போதும். நாம் ஜெயித்துவிடலாம், அத்துடன் ஓட்டு சேகரிப்பை நாம் சரியாக செய்தாலே போதும்" என்றும் நம்பிக்கையை தந்துள்ளதாக தெரிகிறது.. இதையடுத்துதான், தொகுதியில் ஒவ்வொரு பூத்துக்கும் அதிமுக சார்பில் 50 பேர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த 50 பேரும் ஆளுக்கு 4 அதிமுகவினர் அல்லாதவரின் வாக்குகளை கொண்டுவர வேண்டும் என்றும் டார்கெட் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.

கேன்வாஸ்

கேன்வாஸ்

அதாவது, தனி நபர்களை, தனிப்பட்ட முறையில் கேன்வாஸ் செய்ய வேண்டும் என்பதுதான், முக்கிய அசைன்மென்ட்டாக தரப்பட்டுள்ளது. இதற்காக ஒவ்வொரு வீடுகளுக்கும் அவர்களிடம் தண்ணீர் வாங்கி குடித்து, அக்கறையுடன் பேசி, நெருங்கி பழகி, ஒரு அன்னியோயத்தையும் ஏற்படுத்தி கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாம்.. இது எல்லாவற்றிற்கும் மேலாக, ஆளுங்கட்சியின் அதிருப்தியாளர்களை தங்கள் பக்கம் இழுத்து கொண்டுவருவதுடன் மொத்தமுள்ள 37 வார்டுகளில் ஸ்வீட் பாக்ஸ் விநியோகம், தங்குதடையின்றி நடக்க வேண்டும் என்றும் அதிமுக தரப்புக்கு உத்தரவுகள் மறைமுகமாக பறந்துள்ளதாம்..!

டபுள் ஸ்கோர்

டபுள் ஸ்கோர்

இந்த தேர்தலில் 3 விதமான ஐடியாக்களுடன் காய்நகர்த்தி வருகிறாராம் எடப்பாடி.. ஏற்கனவே கொங்கு மண்டலத்தில் வலுவாக உள்ள நிலையில், மேலும் அதிகப்படியான வாக்கு வங்கியை பெற்றுவிடுவது, எம்பி தேர்தலுக்கு அடித்தளமாக இருக்கும் என்று நம்புகிறாராம்.. மேலும், அதிமுகவுக்கு ஒரே தலைவர் தான் மட்டுமே என்பதுடன், நிரந்தர பொதுச்செயலாளர் என்ற புள்ளியை நோக்கி நகரவும் இந்த வாக்கு வங்கியானது உதவும் என்று நம்புகிறாராம்.. அத்துடன் ஓபிஎஸ்ஸின் குடைச்சலுக்கும் ஒரு முடிவுக்கட்ட இந்த இடைத்தேர்தலை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றும் நினைக்கிறாராம்.. அதனாலேயே, எடப்பாடியின் பிரச்சார வியூகம் இந்த முறை புதுமாதிரியாக இருக்க போகிறது என்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+