ஈசிஆர் ரோட்டில் பெரிய சேஞ்ச்.. அதுவும் சென்னை டூ தூத்துக்குடி நான்கு வழிச்சாலை.. ஸ்பீடு எடுத்தாச்சு

Subscribe to Oneindia Tamil

சென்னை: கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்க திட்டம் குறித்து முக்கிய செய்தி ஒன்றுவெளியாகி உள்ளது.. இது தமிழக மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

மாமல்லபுரத்தில் இருந்து கன்னியாகுமரி வரை கிழக்கு கடற்கரை சாலையை விரிவுபடுத்த பிரம்மாண்ட திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்காக 24 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்படும் என்றும் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்திருந்தார்.

Good work and nhai plans to complete the expansion works on ECR east coast road by july 2024

நாகப்பட்டினம்: இந்த பணிகள் தற்போது வேகமாக நடந்து வரும்நிலையில், அடுத்த வருடம் நவம்பரில் முடியும் என தெரிகிறது.. அதேபோல, நாகப்பட்டினம்-தூத்துக்குடி இடையே 332 கி.மீ நீளமுள்ள கிழக்கு கடற்கரைச் சாலை ரூ.7000 கோடி மதிப்பீட்டில் நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட உள்ளதாக இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் (NHAI) திட்ட இயக்குநர் கடந்த வருடம் தெரிவித்திருந்தார்.

நெடுஞ்சாலைத்துறை: நாகப்பட்டினம்-தூத்துக்குடி பிரிவு (NH-32), கடலோர மாவட்டங்களான நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி வழியாக செல்கிறது. தூத்துக்குடி - கன்னியாகுமரி ஈசிஆர் 126 கிமீ நீளம் கொண்ட பாதையை சமீபத்தில் NHAI தமிழக அரசிடம் ஒப்படைத்திருந்தது..

இந்நிலையில், சென்னையில் இருந்து தூத்துக்குடியை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 32 (NH-32)ஐ அகலப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதாவது, ஏற்கனவே உள்ள இரு வழிச்சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றப்படுகிறது. இதற்கான நடவடிக்கைகளில் தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையம் (NHAI) துரிதமாக இறங்கி உள்ளது.

சிக்கல்கள்: எனினும் இந்த திட்டத்தை குறிப்பிட்ட காலத்துக்குள் முடிக்க முடியவில்லை.. காரணம், போதிய நிதி கிடைக்கவில்லை.. அத்துடன், நிலம் கையகப்படுத்துவதிலும் சிக்கல்கள் எழுந்ததால், பணிகள் தாமதமாகி கொண்டே வருகின்றன.. போதாக்குறைக்கு வடகிழக்கு பருவமழையும், கடலோர மாவட்டங்களில் கொட்டித் தீர்த்துவிட்டதால், இந்த பணிகள் மேலும் சுணங்கியது.. அதாவது, கடந்த பிப்ரவரி மாதம்வரை, வெறும் 17 சதவீதம் மட்டுமே முடிவடைந்திருப்பதாக சொல்கிறார்கள்.

Good work and nhai plans to complete the expansion works on ECR east coast road by july 2024

இப்போது, கடலூர் மாவட்டம் கடவச்சேரி முதல் காரைக்கால் மாவட்டம் வாஞ்சூர் வரையிலான 55 கிலோமீட்டர் தூரத்திற்கு சாலை விரிவாக்கப் பணிகள், 2,661.75 கோடி ரூபாய் செலவில் நடந்து கொண்டிருக்கின்றன.. விழுப்புரம் முதல் சிதம்பரம் வரையிலான பணிகள் 65 சதவீதம் முடிவடைந்துள்ளதாகவும், மீதமுள்ள பணிகள் அடுத்த வருட தொடக்கத்தில் நிறைவு பெறும் என்றும் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்..

ஜரூர் பணிகள்: மற்றொருபுறம், ஏப்ரல் மாத தொடக்கத்தில் இருந்து மயிலாடுதுறை - காரைக்கால் இடையிலான சாலை விரிவாக்கப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. அதேபோல, கொள்ளிடம் ஆற்றின் மீது, நான்கு வழிச்சாலையுடன் கூடிய மேம்பாலம் கட்டப்பட உள்ளதாம்.. இந்த பணிகள் பணிகளும் எல்லாமே விரைவாக முடிக்கப்பட்டு, வரும் ஜூலை மாதம் 2024ல் பயன்பாட்டிற்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது...

பொதுவாக, தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதியை ஒட்டியுள்ள மிகநீண்ட வழித்தடமானது, வர்த்தகத்தில் முக்கிய பங்காற்றி கொண்டிருக்கிறது.. சென்னை, தூத்துக்குடி, காரைக்கால் போன்ற துறைமுகங்களை இணைப்பதால், வர்த்தகத்துக்கு பெரிய பலன் கிடைக்கிறது.. இதனால், கிழக்கு கடலோரப் பகுதிகளின் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுவதுடன், புதிய வேலைவாய்ப்புகளுக்கும், வருவாய்க்கும் வழிவகை செய்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+