இந்தியாவின் முதல் பெண் மருத்துவருக்கு கூகுள் டூடுல் கெளரவம்!
சென்னை: இந்தியாவின் முதல் பெண் மருத்துவரான டாக்டர் முத்துலெட்சுமி அம்மையாருக்கு கூகுள் தனது டூடுல் மூலம் மரியாதை செய்துள்ளது. தமிழக அரசு அவரது பிறந்த தினத்தை மருத்துவமனை தினமாக கொண்டாடியது.
அடுப்படியில் உழலும் பெண்களுக்கு படிப்பெதற்கு என்று பெண்களை தூற்றிய காலத்தில் பல்வேறு சோதனைகளை சந்தித்து அவற்றை வெற்றியுடன் கடந்து இந்தியாவின் முதல் பெண் மருத்துவரான முத்து லெட்சுமி அம்மையாரின் 133வது பிறந்த நாள் இன்று. தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 1886ஆம் ஆண்டு, ஜூலை மாதம் 30 ம் தேதி பிறந்த முத்துலெட்சுமி அம்மையார் பிறக்கும்போது நோயோடு பிறந்தார். பள்ளியில் படிக்கும்போது கண் பார்வை குறைபாடு, கல்லூரி சென்றபோது ஆஸ்துமா பிரச்சனை என்று வளர்ந்ததும் பிரச்சனைகளோடுதான் வளர்ந்தார்.
ஆண்கள் மட்டுமே படிக்கப் பிறந்தவர்கள் என்றிருந்த காலத்தில் இந்தியராக மருத்துவக் கல்லூரி சென்று மருத்துவம் படித்தவர் முத்துலெட்சுமி. இவரோடு படித்தவர்கள் பெரும்பாலும் ஆண்கள், இருந்த ஒரு சில மாணவிகளும் ஆங்கிலேயர்கள். இவர் படித்த கல்லூரிப் பேராசிரியர் கர்னல் ஜிப்போர்டு, தனது வகுப்பில் மாணவிகளை உட்காரவே விட மாட்டார். அறுவைச்சிகிச்சை பாடத்தில் முழு மதிப்பெண்ணை முத்துலட்சுமி பெற்ற பிறகுதான் பெண்களும் தனது வகுப்புக்குள் வரலாம், உட்காரலாம் என்று மனம் மாறி இருக்கிறார். முத்துலட்சுமி மருத்துவப் பட்டம் பெற்றபோது, 'சென்னை மருத்துவக் கல்லூரியின் வரலாற்றில் இது பொன்னான நாள்' என்று எழுதினார் கர்னல் ஜிப்போர்டு.
எழும்பூர் மருத்துவ மனையில் அதுவரை பெண் மருத்துவரே இல்லை. முதல் பெண் மருத்துவராக முத்துலட்சுமி உள்ளே நுழைந்தார். மெட்ராஸ் மெடிக்கல் கல்லூரியில் முதல் இந்திய மாணவியாக மருத்துவம் படித்த அவர் படிப்பு முடிந்து இந்தியாவின் முதல் பெண் மருத்துவராக 1912ல் இருந்து பணியாற்றினார். பின்னர் சென்னை அரசு தாய்சேய் மருத்துவமனையின் முதல் பெண் அறுவை சிகிச்சை மருத்துவராக பணியாற்றினார் .

இந்தியாவின் முதல் பெண் சட்டப்பேரவை உறுப்பினர் என்ற பெருமையும் முத்து லெட்சுமிக்கு உண்டு. தேவதாசி முறை ஒழிக்கப்பட்டது இவரது முயற்சியால்தான். தேவரடியார், பதியிலார், வேசையர், தாசிகள், கணிகைகள், நர்த்தகி, நடன மங்கை எனப் பல்வேறு பெயர்கள் சூட்டப்பட்ட பரிதாபப் பெண்கள் கோயில்களுக்கு அர்ப்பணிக்கப் பட்டார்கள்.
இந்தப் பெண்களுக்கு உடலில் திரிசூலம், ரிஷபகாளை, சங்கு, சக்கரம் போன்ற ஏதாவது ஒரு முத்திரை பதிக்கப்படும். கடவுள் முன் உட்கார்ந்து தாலியை கட்டிக்கொள்வார்கள். கி.பி. நான்காம் நூற்றாண்டில் இருந்து இந்தப் பழக்கம் இருந்தது. எட்டு, ஒன்பது வயதுப் பெண்கள் இப்படி பழக்கப்பட்டார்கள். இத்தகைய கொடுமையான தேவதாசி பழக்கத்தை ஒழிக்க, தேவதாசி ஒழிப்புச் சட்டத்தைக் கொண்டு வர முத்துலட்சுமி முயன்றார். 1927-ம் ஆண்டு நவம்பர் 5-ம் நாள் தீர்மானம் கொண்டு வந்தார். இதை சட்டமன்றத்தில் கொண்டு வந்தபோது கடுமையாக எதிர்த்தார்கள். அப்போது முத்துலெட்சுமி 'உங்களுக்கு அக்கா, தங்கைகள் இல்லையா? பெண்கள் இல்லையா? மனைவி இல்லையா? உங்கள் குடும்பத்தில் இருந்து எந்தப் பெண்களையாவது இதுபோன்ற தொழிலுக்கு அனுப்புவீர்களா?" என்று சட்டசபையில் தான் கேட்டதாகவும், அப்போது சட்டசபையே ஸ்தம்பித்து நின்றுவிட்டது என்றும் ஆண் சகோதரர்களும் தலைகுனிந்துவிட்டார்கள் என்றும் முத்துலட்சுமி எழுதி உள்ளார்.
இப்படி எல்லாம் பாடுபட்டாலும் அவரால் ராஜாஜி காலத்தில் இந்த தேவதாசி முறையை ஒழிக்க முடியவில்லை. மாறாக ஓமந்தூர் ராமசாமி அமைச்சரவையில்தான் 1947-ம் ஆண்டு இந்தச் சட்டம் அமல் ஆனது. அடுத்ததாக சென்னையில் புற்றுநோய் மருத்துவமனை ஒன்றை அமைக்க முத்துலட்சுமி ரெட்டி பலவிதங்களிலும் பாடுபட்டார். பல்வேறு இடங்களில் நிதி திரட்டினார் தொடர்ந்து அப்போதைய பிரதமர் நேரு 1952-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் அடையாறு கேன்சர் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார்.
1954ல் கேன்சர் இன்ஸ்டிடியூட் செயல்பாட்டுக்கு வந்தது. 1956ல் இவருக்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது. இவருக்கு இரண்டு மகன்கள். மூத்த மகன் ராம்மோகன் திட்டக்குழுவின் இயக்குநராகப் பணியாற்றினார். இரண்டாவது மகன் கிருஷ்ணமூர்த்தி, தாய், தந்தையைப் போல மருத்துவரானார். புற்றுநோய் நிபுணராக அடையாறு புற்றுநோய் மருத்துவமனையை நிர்வகித்து வருகிறார். முத்துலட்சுமி ரெட்டி தன்னுடைய 81வது வயதில் 1968ல் காலமானார்.
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications