தமிழகத்தில் தரமான "சம்பவம்" செய்யும் கூகுள்.. ஆப்பிளுக்கு வந்த செம போட்டி.. ஆனா ஒரு சிக்கல் இருக்கு
சென்னை: தமிழகத்தில் ஏற்கனவே ஐபோன்கள் தயாரிக்கப்பட்டு வரும் நிலையில், அடுத்த கட்டமாகக் கூகுளின் பிக்சல் ஸ்மார்ட்போன்கள் தமிழகத்தில் உற்பத்தி செய்ய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது கூகுள் நிறுவனத்திற்குப் பெரிய பிளஸ் என்றாலும் ஒரு சிக்கல் இருக்கிறதாம்.. இது தொடர்பாக விரிவாகப் பார்க்கலாம்.
தமிழ்நாடு அரசு கடந்த சில ஆண்டுகளாகவே சர்வதேச முதலீடுகளை ஈர்க்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடந்தாண்டு நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் கூட பல முதலீடுகள் ஈர்க்கப்பட்டன.

அதையும் தாண்டியும் பல முதலீடுகளை ஈர்க்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஏற்கனவே தமிழகத்தில் ஐபோன் உற்பத்தி ஆலை செயல்பட்டு வரும் நிலையில், அடுத்த கட்டமாகக் கூகுள் பிக்சல் மொபைல்களின் தயாரிப்பு ஆலையும் இங்கு வர உள்ளது.
கூகுள்: கூகுள் நிறுவனம் ஃபாக்ஸ்கான் உடன் சேர்ந்து, தமிழகத்தில் கூகுள் நிறுவனம் தனது பிக்சல் மொபைலை தயாரிக்க உள்ளது. தமிழக தொழிற்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா கூகுள் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.
திட்டம் என்ன: இந்தியாவில் உற்பத்தியாகும் இந்த ஸ்மார்ட் போன்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. இது குறித்து, "கூகுள் இந்தியாவில் இருந்து ஸ்மார்ட்போன்களை ஏற்றுமதி செய்யும். கூகுளின் சாதனங்களை உருவாக்கும் Compal Electronics உடனான ஒரு ஒப்பந்தத்தின் கீழ் பிக்சல் ஸ்மார்ட்போன்களையும் டிக்சன் தயாரிக்கும். வரும் செப்டம்பரில் இருந்து உற்பத்தியைத் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. உற்பத்தி சீரானதும் ஏற்றுமதி தொடங்கும்" என்று கூறப்பட்டுள்ளது.
அதேநேரம் கூகுள் மற்றும் ஃபாக்ஸ்கான் நிறுவனங்கள் இது தொடர்பாக எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபோன் டூ கூகுள் பிக்சல்.. இனி தமிழ்நாடுதான் எப்பவும் நம்பர் 1.. அடிச்சிக்கவே முடியாது! ஏன் தெரியுமா?
ஸ்மார்ட்போன்கள்: கடந்த மார்ச் வரையிலான காலாண்டின்படி இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் கூகுள் பிக்சல் பங்கு 0.04 சதவீதமாக உள்ளதாக கவுண்டர்பாயிண்ட் ரிசர்ச் தெரிவித்துள்ளது.. இருப்பினும், வரும் ஆண்டுகளில் இது அதிகரிக்கும் என்றும் குறிப்பாக ஆண்டுக்கு 30 சதவிகிதம் விகிதத்தில் வளர்ச்சி இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் கூறப்படுகிறது.
காரணங்கள்: முதலில் கூகுள் நிறுவனம் உள்நாட்டிலேயே பிக்சல் மொபைல் உற்பத்தியைத் தொடங்கியுள்ளதால் அது இறக்குமதி வரிகளைத் தவிர்க்க உதவும்.. மேலும், இதனால் செலவுகளும் கூட கணிசமாகக் குறையும்.
அடுத்து இரண்டாவது முக்கிய காரணம்- இப்போது பலரும் ப்ரீமியம் மொபைல்களை வாங்கவே ஆர்வம் காட்டி வரும் நிலையில், கூகுளின் விற்பனை அதிகரிக்கலாம் எனக் கூறப்படுகிறது. மேலும், பல அதிநவீன ஏஐ வசதிகளைக் கொண்ட ஸ்மார்ட்போனாக கூகுள் இருப்பதால்.. விலை குறைந்தால் இளைஞர்கள் ஆர்வம் கூகுள் பக்கம் திரும்பலாம்.
வல்லுநர்கள் சொல்வது என்ன: இது தொடர்பாக துறை சார்ந்த வல்லுநர்கள் கூறுகையில், "கூகுள் நிறுவனம் ஒரு வழியாக இந்தியச் சந்தையில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளது.. இந்தியாவில் உற்பத்தி செய்வது இந்தியச் சந்தையை விரிவுபடுத்த மட்டுமின்றி ஏற்றுமதிக்கும் பெரியளவில் பூஸ்டாக இருக்கும். இப்போது இளைஞர்கள் பலரும் ப்ரீமியம் ஸ்மார்ட்போன் பக்கம் திரும்பும் நிலையில், கூகுள் நிறுவனத்திற்கு இது சாதகமாக அமையலாம்.
சிக்கல்: அதேநேரம் அடுத்து மார்க்கெட்டிங்கில் கூகுள் கவனம் செலுத்த வேண்டும். மேலும், விற்பனைக்கு பிந்தைய சர்வீஸ் ஆகியவற்றின் கட்டமைப்பைக் கூகுள் நிறுவனம் வலுவாக உருவாக்க வேண்டும். கூகுள் நிறுவனம் இப்போது இதில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும். அப்போது தான் இந்தியாவில் மற்ற ஸ்மார்ட்போன் நிறுவனங்களைப் போல வெற்றியடைய முடியும்" என்றார்.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
ஐபிஎல் முடிந்தது.. அடுத்த வேலையை பாருங்க.. உதய் கோட்டக் ட்வீட் கொடுத்த ஷாக் -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications