நான் அரசியலுக்கு வரேன்னு சொன்னதும்..ரஜினியின் பேச்சை கேட்டு குலுங்கி குலுங்கி சிரித்த எடப்பாடி
சென்னை: சென்னை வானகரத்தில் இன்று முன்னாள் முதல்வர் ஜானகி நூற்றாண்டு விழா நடந்தது. இதில் ரஜினிகாந்த் ஜானகிக்கு வாழ்த்து கூறும் காணொளி ஒளிபரப்பப்பட்டது. அப்போது பேசிய ரஜினிகாந்த், நான் அரசியலுக்கு வர்ரேன்னு சொன்னதும் எனக்கு நிறைய பேர் ஆலோசனை சொன்னதாக கூறினார். இதை பார்த்ததும் எடப்பாடி பழனிசாமி குலுங்கி குலுங்கி சிரித்தார்.
அதிமுக சார்பில் சென்னை வானகரத்தில் முன்னாள் முதல்வர் மறைந்த ஜானகி ராமச்சந்திரனின் நூற்றாண்டு விழா நடந்தது. இந்த விழாவில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். அப்போது விழாவின் போது நடிகர் ரஜினிகாந்த் ஜானகி ராமச்சந்திரனுக்கு வாழ்த்து தெரிவிக்கும் காணொளி ஒளிபரப்பப்பட்டது.

அந்த வீடியோவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் அதிமுகவின் பிரம்மாஸ்திரம் இரட்டை இலை என்றும், தனக்கு அரசியல் வராததால் இரட்டை இலையை ஜெயலலிதாவிடம் வழங்கினார் என்றும் கூறினார். நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து வீடியோவில் பேசியதாவது:-
புரட்சி தலைவர் எம்ஜிஆர் மறைந்த பிறகு, அப்போது சூழல் ஜானகியை அரசியலுக்கு கொண்டு வந்தது. ஆனால் ஜானகிக்கு அரசியலில் துளியும் ஈடுபாடு இல்லை. அப்போதைய சூழல் அவரை அரசியலுக்கு கொண்டு வந்தது. தொடர்ந்து ஜானகி முதல்வர் ஆனார். தமிழ்நாட்டின் முதல் பெண் முதலைமைச்சர் ஆனார் ஜானகி. அடுத்ததாக தேர்தலை சந்திக்கும்போது அது இரண்டு அணியாக பிரிந்தது.
இரட்டை இலை என்னும் பிரம்மாஸ்திரம் அப்போது முடக்கப்பட்டது. அதிமுகவின் பிரம்மாஸ்திரம் இரட்டை இலை. அந்த சின்னம் முடக்கப்பட்டதால் வேறு சின்னத்தில் நின்று போட்டியிட்டு மீண்டும் ஜானகி "தோல்வியடைந்தார். அப்போது அவங்க நிறைய சவால்களை சந்தித்தாங்க..
நான் அரசியலுக்கு வரேன் என்று சொன்னதும் நிறைய பேர் ஆலோசனை சொன்னாங்க.. ஒவ்வொருத்தரும் ஒவ்வொன்றாக நம்மிடம் சொன்னாங்க.. அவங்க சொல்றதையெல்லாம் கேட்டால் அவ்ளோ தான்.. ஆளுக்கொரு கருத்தை சொன்னாங்க.. அவங்க சொல்றத எல்லாம் கேட்டால், நம்மளோட நிம்மதி, பணம் என எல்லாத்தையும் இழந்திட வேண்டியது தான்.. அது தெரிந்து சொல்கிறார்களா.. இல்லை தெரியாமல் சொல்கிறார்களா என்று தெரியாது.. ஒருசிலர் மட்டும் தான் நாம் எடுக்க போகிற முடிவால் மத்தவங்களும் சந்தோஷமாக இருக்கனும் என்று நினைப்பாங்க..
ஒருவர் மட்டும் சந்தோஷம் அடைகிறார்களா அல்லது நிறைய பேர் சந்தோஷம் அடைகிறார்களா.. ஒருவருக்கும் மட்டும் நல்லதா.. இல்ல அந்த முடிவால் நிறைய பேர் பயன் அடைகிறார்களா என்று தான் பார்ப்பார்கள். அப்படித்தான் ஜானகி.. யாருடைய ஆலோசனையும் கேக்காமல் பெரிய முடிவு எடுத்தாங்க.. ரொம்ப தைரியமாக முடிவு எடுக்கக் கூடியவர்.
அப்படிப்பட்ட அரசியல் சூழலில் ஜெயலலிதாவை கூப்பிட்டு, "எனக்கு அரசியல் எல்லாம் வராது.. எனக்கு சரிபட்டு வராது.. நீங்க தான் அதுக்கு கரெக்ட்டு.. திறமை இருக்கு.. தைரியம் இருக்கு.. உங்கக்கிட்ட தான் அந்த பக்குவம் இருக்கு.. அதிமுக என்ற கழகத்தை இன்னும் பெரிதாக்க உங்களால் தான் முடியும்.. என்னால் முடியாது என்று ஜெயலலிதாவிடம் ஜானகி கூறினார்.
மேலும் எங்கே கையெழுத்து போடனும் சொல்லுங்க.. நான் போடுறேன் என்று சொன்னவர் தான் ஜானகி.. எவ்வளவு பெரிய மனம்.. அப்படி சொல்றதற்கு.. இப்போது அவங்களுக்கு நூற்றாண்டு விழா ஏற்பாடு செய்து விமர்சியாக கொண்டாடி வருவதற்கு எல்லாருக்கும் வாழ்த்துக்கள். எடப்பாடி பழனிசாமிக்கு என் வாழ்த்துக்கள். மனப்பூர்வமாக எல்லாருக்கும் வாழ்த்துக்கள் சொல்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக நடிகர் ரஜினிகாந்த், நான் அரசியலுக்கு வர்ரேன்னு சொன்னதும் எனக்கு நிறைய பேர் ஆலோசனை சொன்னாங்க.. ஆளுக்கொரு கருத்தை சொன்னாங்க.. இப்படி பேசும்போது, எடப்பாடி பழனிசாமி குலுங்கி குலுங்கி சிரித்தார். இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் ட்ரெண்ட் ஆகி உள்ளது.
-
ராமதாஸின் விஸ்வாசிக்கு வலைவீசும் விஜய்.. தவெகவில் இணையும் அதிமுக மாஜி அமைச்சர் செல்லப்பாண்டியன்? -
திமுகவின் ஆபரேஷன் சென்னை.. கையிலெடுத்த சேகர்பாபு.. அதிமுக மாஜி பெஞ்சமினுடன் திடீர் சந்திப்பு! -
அதிகரித்த மின்வெட்டு! அவதியான மக்கள்! வேடிக்கை பார்க்கும் பொய்க்கால் குதிரை அரசு! விளாசிய எடப்பாடி -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அதிமுக உடன் இணைகிறதா அமமுக? காட்டுத்தீயாகப் பரவும் தகவலுக்கு டிடிவி தினகரன் விளக்கம்! -
காலை தொட்டு கேட்கிறோம்.. எங்களை சேர்த்துக்கோங்க.. தவெகவினரிடம் மேடையில் கெஞ்சிய அதிமுக நிர்வாகி -
ஒரு மணி நேரம் நடந்த மீட்டிங்.. ரஜினிகாந்த் மருமகனுக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுக்கும் அண்ணாமலை! -
அவரா? பெரிய தலைக்கட்டாச்சே! தவெகவுக்கு தாவும் ஜெயக்குமார்! எடப்பாடி அடுத்த தலைவலி! பரபர பாலிடிக்ஸ் -
ஒருகாலத்துல எப்படி இருந்த மனுஷன்? விழுப்புரத்தில் ஓரம் கட்டப்பட்ட சிவி சண்முகம்! கண்முன் 3 சான்ஸ்? -
ரஜினிகாந்த் மருமகனுக்கு பெரிய பொறுப்பு.. அப்படியே தூக்கி கொடுக்கும் அண்ணாமலை! விசாகன் வருவாரா? -
யாரை நம்பி நான் பொறந்தேன்.. விரக்தியான எடப்பாடி! இலைக் கட்சியின் 10 மா.செ.க்கள் தவெகவுடன் பேச்சு? -
உன் நடிப்பு பிடிக்காதுன்னு பாரதிராஜா சொல்லுவாரு.. கடைசிவரை நான் நினைச்சது நடக்கல! ரஜினிகாந்த் உருக்கம்












Click it and Unblock the Notifications