அரசு பஸ்ஸில் கண்டபடி தொட்டு சீண்டல்? பறிபோன தீபக் உயிர்.. ஷிம்ஜிதாவுக்கு 10 ஆண்டுகள் சிறை சாத்தியமா
சென்னை: கேரளா மாநிலம் கோழிக்கோட்டில் கடந்த வாரம் நடந்த சம்பவம் மக்கள் மனதை அதிர வைத்து வருகிறது.. பொய்யான பாலியல் குற்றச்சாட்டை தெரிவித்த பெண் தற்போது கைதாகி உள்ளார்.. அவருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் கிடைத்துள்ளது.. இதுதொடர்பான குற்றம் நிரூபிக்கப்பட்டால் எப்படியும் அப்பெண்ணுக்கு 10 ஆண்டு சிறையாவது கிடைக்கும் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன.
கோழிக்கோட்டை சேர்ந்தவர் 42 வயதுடைய தீபக், இவர் ஜவுளி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.. கடந்த வெள்ளிக்கிழமை வேலை விஷயமாக, கண்ணூருக்கு அரசு பஸ்ஸில் பயணம் செய்தார்.

ஷம்ஜிதா - தீபக்
அப்போது கூட்டம் அதிகமாக இருந்ததால், பஸ்ஸின் நடுப்பகுதியில் தீபக் நின்று கொண்டே பயணம் செய்துள்ளார். அவருக்கு அருகில் சில பெண்களும் நின்று கொண்டிருந்துள்ளனர். அப்போது 35 வயது இளம் பெண் ஷிம்ஜிதா முஸ்தபா என்பவரும் அதே பஸ்ஸில் வந்தார்..
பயணத்தின்போது நடந்த சம்பவத்தை ஷிம்ஜிதா சமூக ஊடகங்களில் வீடியோவாக வெளியிட்டார். அந்த வீடியோவில் தீபக் அவரை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாகக் குற்றம்சாட்டினார்... மேலும், அவரது தொடுதல் தற்செயலாக நடந்ததல்ல, பாலியல் வரம்பை மீறியது என்றும் ஷிம்ஜிதா கூறியிருந்தார்.
அப்பாவி தீபக்
இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி, பல லட்சக்கணக்கான பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தது.,, இது தீபக்கின் மனதை கடுமையாக பாதித்தது.. தன் மீது எந்த தவறும் இல்லை என்று அனைவரிடமும் மன்றாடினார்.. உண்மையிலேயே அப்பாவியான தீபக், பெண்களிடம் அநாகரீகமாக நடந்து கொள்ளும் நபர் கிடையாது..
ஆனால் இந்த வீடியோ வெளியானதும், உலகம் முழுவதும் அவர் குற்றவாளியாக காட்டப்பட்டதால் மன அழுத்தத்துக்கு ஆளானார்.. இறுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தீபக் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
முன்னதாக, அவரது குடும்பத்தார் கதவைத் தட்டியும், வெகு நேரம் திறக்காததால் சந்தேகமடைந்து கதவை உடைத்து உள்ளே நுழைந்த போதுதான், தீபக் சடலமாகி கிடப்பதை கண்டனர்.. வீடியோ வெளியான பிறகு ஏற்பட்ட மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்டதை நினைத்து குடும்பத்தினர் கதறி கதறி அழுதனர்..
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.. அப்போது ஷிம்ஜிதா வடகராவில் உள்ள தனது உறவினர் வீட்டில் பதுங்கியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து நேற்றைய தினம் கோழிக்கோடு போலீஸார் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள்..
10 வருட சிறை?
இதையடுத்து, அவருக்கு 14 நாட்கள் சிறைத் தண்டனை வழங்க கோர்ட் உத்தரவிட்டதையடுத்து, அவரிடம் காவல் துறையின் விசாரணை தொடர்கிறது. ஷிம்ஜிதாவுக்கு எதிராக தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஒருவேளை இந்த குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக சொல்கிறார்கள்..
இதனிடையே, தீபக்கின் மரணம் கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது.. பொய்யான குற்றச்சாட்டுகளால் ஒருவர் வாழ்க்கை எவ்வளவு பாதிக்கப்படுமோ அதற்கான உண்மையான விளைவுகளை இந்த சம்பவம் வெளிக்காட்டுவதாக கவலையுடன் கூறுகிறார்கள்..
போலீசுக்கு போக வேண்டியதுதானே
தனக்கு நியாயம், நீதி கிடைக்கவேண்டுமானால், சம்பந்தப்பட்ட பெண், இந்த வீடியோவை, சமூக ஊடகங்களில் பதிவு செய்வதற்குப் பதிலாக அதையே ஆதாரமாக வைத்து போலீசுக்கு போயிருக்க வேண்டியதுதானே? என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்..
ஷம்ஜிதா பதிவிட்ட வீடியோவை பார்க்கும்போது தற்செயலாக இந்த தொடுதல் நிகழ்ந்திருப்பது போலிருப்பதாகவும், விளம்பரத்திற்காக செய்யப்பட்டுள்ள செயலாகத் தெரிவதாகவும் பலரும் கூறி வருகிறார்கள்... எனவே இதுகுறித்து முழுமையாக விசாரணை நடத்த வேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ளனர்..
விவாகரத்து பெற்றவர் தீபக்
குற்றச்சாட்டுகள் உண்மையானதா என்பதை உணர்ந்து, குற்றம் நிரூபிக்கப்படும் வரை யாரையும் முன்னதாகத் தீர்மானிக்கக் கூடாது என்றும் சோஷியல் மீடியாவில் எந்த தகவல்களையும் ஷேர் செய்வதற்கு முன்பு முறையாக பரிசீலிக்க வேண்டும் என்றும் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்..
தற்கொலை செய்து கொண்ட தீபக், மீது இதுபோன்று எந்த குற்றச்சாட்டும் இதுபோன்று வந்ததில்லையாம்.. தீபக்குக்கு திருமணமாகி ஓராண்டிலேயே தம்பதி பிரிந்துவிட்டனர்.. இருவருக்கும் குழந்தைகள் ஏதுமில்லை. பி.காம் படித்துவிட்டு மார்க்கெட்டிங் செய்து கொண்டிருந்த தீபக்குக்கு, 3 வருடங்களுக்கு முன்பே விவாகரத்தும் ஆகிவிட்டதாம்.. ஒரே பிள்ளை என்பதால் பெற்றோரும் தீபக் மீது உயிரையே வைத்திருந்துள்ளனர்.. இப்போது மகனை இழந்து தவித்து வருவது காண்போரை கவலைக்குள்ளாக்கி வருகிறது..
பெண்ணை குற்றம் சொல்வது சரியா?
அதேசமயம் ஒரு நபர் தற்கொலை செய்து கொண்டு இறந்துவிட்டதாலேயே அவர் மீது நியாயம் உள்ளதாக பேச முடியாது.. ஷாஜிதா தொடர்பான விவகாரத்தில், சட்டப்படி குற்றம் நிரூபிக்கப்படும் வரை அவர்மீது குற்றம் சுமத்த முடியாது என்று சட்ட நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
சமூக வலைதளங்களில் பரவும் குற்றச்சாட்டுகள் மற்றும் ஊகங்கள் சட்டரீதியான ஆதாரமாகக் கருதப்படாது என்றும் கூறப்படுகிறது... விசாரணை முடிந்து, நீதிமன்றத்தில் குற்றம் உறுதி செய்யப்படும் நிலையில்தான் நடவடிக்கை எடுக்க முடியும் என விளக்கப்பட்டுள்ளது. அதுவரை, தனிநபர் மீது குற்றம் சுமத்துவது தவறானது என சட்ட வட்டாரங்கள் வலியுறுத்துகின்றன... எனவே இந்த விவகாரத்தில் உண்மையை வெளிக்கொணர வேண்டியது காவல்துறையும், நீதிமன்றமும்தான்...!!!












Click it and Unblock the Notifications