Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முதல்வர் ஸ்டாலினுக்கு வந்த சிக்கல்.. 5 மாதம் ஆகியும் செய்யலையே.. அரசு டாக்டர்கள் போராட்டம் அறிவிப்பு

சம்பள உயர்வு கோரி டாக்டர்கள் போராட்டம் அறிவித்துள்ளனர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு அரசுக்கு எதிராக அரசு மருத்துவர்கள் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.. அரசு மருத்துவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், அடுத்த மாதம் 10ம் தேதி உண்ணாவிரதம் நடத்தப் போவதாக, அரசு மருத்துவர்களுக்கான சட்ட போராட்டக் குழு அறிவித்துள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு, ஊதிய உயர்வு, நோயாளிகளின் எண்ணிக்கை அடிப்படையில் மருத்துவ பணியிடங்களை உருவாக்குதல் உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் சங்கம் சார்ப்பில் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடந்தது.

பதவி உயர்வு, நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப பணியிடங்களை உருவாக்குவது போன்ற கோரிக்கைகளையும் வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசு டாக்டர்கள் போராட்டம் நடத்தினார்கள்.. கிட்டத்தட்ட ஒரு வாரத்துக்கும் மேலாக இந்த போராட்டம் நடந்தது.

 அதிமுக அரசு

அதிமுக அரசு

இதனால் மருத்துவமனைகள் ஸ்தம்பித்தன.. டாக்டர்கள் பணிக்கு வராததால், நோயாளிகள் அவதிக்குள்ளானார்கள்.. ஐசியு உள்ளிட்ட எமர்ஜென்சி மருத்துவர்கள் பணியில் ஈடுபட்டிருந்தாலும், பெரும்பாலான நோயாளிகள் பாதிப்புக்கு உள்ளானார்கள்.. ஆனால், இவர்களின் கோரிக்கையை அப்போதைய அதிமுக அரசு பரிசீலிக்கவில்லை.. சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த விஜயபாஸ்கர் நேரடியாக சென்று பேசி பார்த்தார்.. ஒன்றும் பலனில்லை.. இதையடுத்து எடப்பாடி பழனிசாமி நேரடியாக வார்னிங் தந்தார்..

 வேடிக்கை - பிடிவாதம்

வேடிக்கை - பிடிவாதம்

"மக்களுக்கு சிகிச்சை அளிக்க மறுப்பவர்கள், பணிக்கு வரமாட்டோம் என்று பிடிவாதமாக இருந்தால் அதை அரசு வேடிக்கை பார்த்து கொண்டு இருக்காது.. இதுக்கு பிறகும், பிடிவாதம் காட்டும் டாக்டர்களை அரசு வேடிக்கை பார்க்காது... போராட்டம் தொடர்ந்தால் டாக்டர்கள் மீது நடவடிக்கை பாயும்.. ஒரு டாக்டரை உருவாக்க மக்கள் பணத்தில் இருந்து ஒரு கோடி 24 லட்சம் ரூபாய் செலவிடப்படுகிறது... அதனால் போராடும் டாக்டர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும்... இல்லாவிட்டால், அவர்களுக்கு பதிலாக வேறு டாக்டர்கள் நியமிக்கப்படுவார்கள்" என்று எச்சரித்திருந்தார்.

 பிரச்சனை

பிரச்சனை

இந்த சூழலில்தான், திமுக தலைவரான ஸ்டாலின், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த டாக்டர்களை நேரில் சென்று சந்தித்தார்... டாக்டர்களுடன் தரையில் உட்கார்ந்து அவர்களின் பிரச்சனையை கேட்டார்.. பிறகு, "அடுத்து நமது ஆட்சி தான்... அப்போது உங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்" என்று உறுதி தந்தார்.. பிறகு செய்தியாளர்களிடம் பேசும்போது, "டாக்டர்கள் இப்படி உடலை வருத்திக்கொண்டு போராட வேண்டாம்... எல்லா எதிர்க்கட்சிகளும் இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும்" என்றார்.

 கோரிக்கைகள்

கோரிக்கைகள்

இந்நிலையில், திமுக ஆட்சிக்கு 5 மாதங்கள் ஆகியும், தங்கள் கோரிக்கைகள் பரிசீலிக்கவில்லை என்று டாக்டர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.. தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் அக்டோபர் 20ம் தேதி மதுரையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டமும், நவம்பர் 10ஆம் தேதி சென்னையில் உண்ணாவிரத போராட்டமும் நடைபெறும் என்று அறிவித்துள்ளனர்.

பாதிப்பு

பாதிப்பு

அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக் குழு தலைவர் டாக்டர் எஸ்.பெருமாள் பிள்ளை இது தொடர்பாக கூறும்போது, "முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றபோது, தினசரி கொரோனா தொற்று, 36 ஆயிரமாக இருந்தது... அந்த அசாதாரண சூழலில் இருந்து, 1,500 என்ற அளவில் தினசரி பாதிப்பை குறைத்துள்ளோம். கொரோனா தடுப்பு பணி, தடுப்பூசி பணி என அனைத்திலும் அர்ப்பணிப்போடு, மருத்துவ துறை பணியாற்றுகிறது.

தமிழகம்

தமிழகம்

அதனால் தான், சுகாதாரத் துறையில் முன்னணி மாநிலமாக, தமிழகம் உள்ளது... ஆனாலும், டாக்டர்களுக்கு மிகக்குறைந்த ஊதியமே வழங்கப்படுகிறது... இதற்காக 2019ம் ஆண்டு நடந்த போராட்டத்திற்கு, ஸ்டாலின் ஆதரவு தெரிவித்ததுடன், தம் ஆட்சி அமைந்ததும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று சொன்னார்.. அரசு டாக்டர்களின் ஊதியத்தை உயர்த்த, வருடத்துக்கு 300 கோடி ரூபாய் மட்டுமே கூடுதலாக தேவை... அதிலும், பெரும் பகுதி காப்பீட்டின் வாயிலாகவே அரசுக்கு வருவாயாக கிடைக்கும்.

 உண்ணாவிரதம்

உண்ணாவிரதம்

அதேபோல, கொரோனாவால் உயிரிழந்த அரசு டாக்டர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் உள்ளிட்ட கோரிக்கைகள் இன்னமும் நிறைவேற்றப்படவில்லை... அதனால்தான் இப்படி வேறு வழியின்றி போராட்டத்துக்கு தள்ளப்பட்டுள்ளோம்... முதலில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டமாக, வரும் 20ம் தேதி காலை 10 மணி முதல் மதுரையில் தர்ணா போராட்டம் நடத்த உள்ளோம்... அதற்கு பிறகும் எங்கள் கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால், அடுத்த மாதம் 10ம் தேதி, சென்னையில் ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் நடத்த உள்ளோம்" என்றார்.

 என்னாகும்?

என்னாகும்?

திமுக அரசு ஆரம்பித்து இந்த 5 மாத காலத்தில், பெரிய அளவுக்கு எதிர்ப்புகள் எங்குமே எழவில்லை.. அதேபோல, அரசுக்கு எதிரான போராட்டங்கள் பெரியளவிலும் நடக்கவில்லை.. வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை என்று அதிமுக தரப்பில் நடத்திய ஆர்ப்பாட்டமும் பெரிதாக பேசப்படவில்லை.. இந்நிலையில்தான் அரசு மருத்துவர்கள் போராட்டத்தை அறிவித்துள்ளன. இதை முதல்வர் ஸ்டாலின் எப்படி கையாள போகிறார்? மருத்துவர்களின் போராட்டம் நடக்குமா? அல்லது அதற்கு முன்பாகவே அவர்களை அழைத்து தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்துமா என்று தெரியவில்லை.. பார்ப்போம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+