சம்பளம் வெறும் ரூ15000! அரசு ஊழியருக்கு ரூ.72 கோடி சொத்து, 40 ஏக்கர் நிலம், 24 வீடு, பீரோவில் தங்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கர்நாடகாவில் சில அரசு அதிகாரிகள் முறைகேடாக வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பதாக புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.. அந்தவகையில் கலகப்பா என்பவர் மீதும் புகார் தரப்பட்டது.. அரசு அதிகாரிகள் மீதான புகார்களுக்கிடையில், தினக்கூலி ஊழியரான கலகப்பா மீதும் புகார் தரப்பட்டிருந்தது. அம்மாநிலத்தில் பலரது கவனத்தையும் பெற்றது.. அந்தவகையில் கலகப்பாவையும் அதிகாரிகள் விசாரணையை மேற்கொள்வார்களா? என்ற எதிர்பார்ப்பும் எழுந்தது.. அதன்படியே அதிகாரிகளின் விசாரணையானது, பெரும் அதிர்ச்சியை கர்நாடகாவுக்கு தந்து வருகிறது.

அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்கவே மத்திய அரசு 2013-ல் லோக்பால், லோக்- ஆயுக்தா சட்டத்தைக் கொண்டுவந்தது.

Government employee 40 acres land rs72 crore asset 72

அரசு ஊழியர்களுக்கு எதிரான ஊழல் புகார்களை விசாரிக்கும் இந்த அமைப்பானது, அரசியல் பதவிகளை தவறாகப் பயன்படுத்துதல் மற்றும் அறிவிக்கப்பட்ட வருமான ஆதாரங்களைவிட அதிகமாக சொத்து குவித்தல் போன்றவற்றை தடுப்பதற்கான கருவியாக செயல்பட்டு வருகிறது.

அப்படித்தான், கர்நாடக லோக்ஆயுக்தா அதிகாரிகளும் ஒரு சோதனையை நடத்தப்போய், இன்று அம்மாநிலத்தில் கலகப்பாவால் பெரும் பரபரப்பு நிலவி கொண்டிருக்கிறது.

கூலித் தொழிலாளி கலகப்பா

யாரிந்த கலகப்பா? கொப்பல் மாவட்டத்தில் கர்நாடக கிராமப்புற அடிப்படை வசதிகள் வளர்ச்சி துறையில் பணிபுரிபவர்தான் கலகப்பா.. தினக்கூலி ஊழியராக அதுவும் ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்து வருபவர்..

அதாவது, கர்நாடகா கிராமப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு லிமிடெட் (KRIDL) நிறுவனத்தில் எழுத்தாளராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 6 மாதங்களுக்கு முன்புதான், இந்த அரசு துறையில் ஒப்பந்த ஊழியராக வேலைக்கு சேர்ந்தார்.

கட்டுக்கட்டாக பணம், தங்கம், வெள்ளி

ஆனால், கலகப்பாவுக்கு பல கோடி ரூபாய்க்கு சொத்துகள் இருப்பதாகவும், அத்தனையையும் அவர் சட்டவிரோதமாக சம்பாதித்ததாகவும் பகீர்கள் வெடித்தன. இது தொடர்பான புகாரும், லோக் அயுக்தா போலீசாருக்கு குவிய துவங்கியது..

கூலிதொழிலாளியிடம் கோடிக்கணக்கில் பணமா? என்று அதிர்ந்த லோக் ஆயுக்தா போலீசார் , கலகப்பாவின் வீட்டில் சோதனை மேற்கொள்ள முயன்றனர்.. அப்போதுதான், கலகப்பாவுக்கு ஏகப்பட்ட சொந்த வீடுகள் இருப்பதை அறிந்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.. இதனால் அவரது அத்தனை வீடுகளிலும் அதிரடி சோதனை நடத்தினர்.

பீரோவில் கிலோ கணக்கில் வெள்ளி

அப்போது, அவரது வீட்டில் 350 கிராம் தங்க நகைகளை கண்டு, மீண்டும் அதிர்ச்சியடைந்தனர். அதேபோல, 1.5 கிலோ வெள்ளியும் பீரோவில் இருந்துள்ளன.. 2 கார்கள், 2 பைக்குகள் கலகப்பாவுக்கு உள்ளன..

பிறகு கலகப்பாவிடம் விசாரணை மேற்கொண்டபோது, அவரது மனைவி பெயரில் மட்டுமே மொத்தம் 24 வீடுகளும், 40 ஏக்கர் நிலமும், 4 வீட்டுமனைகள் இருப்பதையும் அறிந்து மீண்டும் அதிர்ச்சியடைந்தனர்.. கலகப்பாவின் மனைவி பெயரில் மட்டுமே கிட்டத்தட்ட ரூ.72 கோடிக்கு சொத்துகள் இருப்பது தெரியவந்துள்ளது.

மாத சம்பளம் வெறும் ரூ.15000

இது தொடர்பான விசாரித்தபோது, கலகப்பாவின் தனது வங்கி கணக்குகளில் கட்டுக்கட்டாக பணம் சேமித்து வைத்திருப்பதை கண்டு, மீண்டும் அதிர்ச்சியடைந்தனர்..

பிறகு தம்பி பெயரிலும் வீட்டுமனைகளை கலகப்பா வாங்கி வைத்திருப்பதற்கான சொத்து ஆவணங்களும் இருந்துள்ளன.. ரூ.30 கோடி மதிப்புள்ள கணக்கில் காட்டப்படாத சொத்துக்கள் கலகப்பாவிடம் இருக்கிறதாம்..

இத்தனைக்கும் கலகப்பா வெறும் ரூ.15,000 மட்டுமே மாத சம்பளமாக வாங்குகிறார். கலகப்பா மீது கொப்பல் லோக் ஆயுக்தா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை நடத்தி கொண்டிருக்கிறார்கள் என்றாலும், தினக்கூலி ஊழியரிடம் இவ்வளவு சொத்துக்களா? எப்படி? எங்கிருந்து வந்தன? என்ற குழப்பத்துடன், போலீசார் நிலைகுலைந்து போயுள்ளனர்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+