அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. அப்பாடா, இனிமேல் கவலையேயில்லை.. மத்திய அரசின் சலுகையை பாருங்க
சென்னை: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியையும் தந்து வருகிறது.
கொரோனா தொற்று உச்சத்தில் இருந்தபோது, நிறைய நிதி நெருக்கடி மத்திய அரசுக்கு ஏற்பட்டது. மக்களை பாதுகாக்கவும், மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யவும் வேண்டியிருந்தது.

அதனால்தான், அரசு ஊழியர்களுக்கு சில சலுகைகள் தற்காலிகமாக மறுக்கப்பட்டன. அதில் ஒன்றுதான் விமான பயணம்.. இதுகுறித்து மத்திய அரசு அப்போதே ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தது..
விமான பயணம்: "அரசு ஊழியர்கள் அரசு முறை பயணமாக விமானத்தில் பயணிக்க வேண்டுமானால், தங்களின் பயணத்துக்கு அங்கீகரிக்கப்பட்ட வகுப்பில் குறைவான கட்டணத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். 21 நாள் முன்பே டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும். அப்போதுதான் அரசுக்கு செலவு மிச்சமாகும்" என்பது உட்பட, பல உத்தரவுகள் போடப்பட்டிருந்தன.
பொது மாறுதல்: தமிழக அரசும் தேவையற்ற செலவை குறைப்பதற்காக இப்படியான உத்தரவுகளை பிறப்பித்திருந்தது.. அதாவது, நிதிச்சுமையை குறைக்க அரசு அதிகாரிகளுக்கு இப்படியான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.. 2020-21 ஆண்டு காலகட்டத்தில் நிதி பற்றாக்குறையை சமாளிக்க அரசு அதிகாரிகளின் செலவை 50% தமிழ்நாடு அரசு குறைத்தது. முக்கியமாக, அரசு அதிகாரிகள் விமான பயணம் தடை செய்யப்பட்டிருந்தது.
எனினும், இப்போது தமிழக அரசின் நிதி நிலைமை ஓரளவு சீராகிவிடவும், கொரோனா காலத்தில் விதிக்கப்பட்ட செலவு கட்டுப்பாடுகளில் ஒருசிலது மட்டும் தற்போது தளர்த்தப்பட்டு வருகின்றன..
முக்கியமாக, அரசு ஊழியர்கள் பயணப்படி, தினப்படி, விமானப் பயணம் ஆகியவற்றுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள், திரும்பப்பெறப்பட்டிருக்கின்றன. அதேபோல, அரசு ஊழியர்கள் பொது மாறுதலுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவும் திரும்பப் பெறப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக, சில நாட்களுக்கு முன்பு உதயசந்திரன் ஐஏஎஸ் பதிவு செய்திருந்தார்.
விதிகளில் மாற்றம்: இப்படிப்பட்ட சூழலில், மத்திய அரசு ஊழியர்களுக்கும் ஒரு மகிழ்ச்சி செய்தி வந்துள்ளது.. விடுப்பு பயண சலுகை விதிகளில் ஒருசில மாற்றங்களை செய்ய மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. குறிப்பாக, 7வது ஊதிய குழுவின் கீழ் சம்பளம் பெறும் ஊழியர்களுக்கான விடுப்பு பயண சலுகை விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது... இது குறித்து DoPT எனப்படும் பணியாளர் மற்றும் பயிற்சித்துறை, ஒரு விளக்கத்தையும் தந்துள்ளது.

அதில், "மத்திய அரசு ஊழியர்கள் எல்டிசி (LTC)ன் கீழ் ரயில் பயணம் மற்றும் விமான டிக்கெட் முன்பதிவு செய்யும்போது சில சலுகைகள் வழங்கப்படுகிறது. இதில், மத்திய சிவில் சேவைகள் விதிகள் 1988ன் கீழ் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்த அலுவலக குறிப்பாணையும் வெளியிடப்பட்டுள்ளது.
மகிழ்ச்சி: இனிமேல் விடுப்பு பயண சலுகையின்கீழ் முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்களில் கேட்டரிங் கட்டணத்தை மத்திய அரசு ஊழியர்கள் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.
மேலும், விமான நிறுவனங்கள் விதிக்கும் ரத்து கட்டணங்கள் மற்றும் 3 அங்கீகரிக்கப்பட்ட பயண முகவர்கள் (IRCTC, BLCL, ATT) தங்கள் தளத்தை பயன்படுத்துவதற்காக விதிக்கப்படும் ரத்து கட்டணங்களையும் திருப்பி செலுத்தும் வசதியையும் மத்திய அரசு வழங்கி உள்ளதாம். இந்த அறிவிப்பானது அரசு ஊழியர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்து வருகிறது.












Click it and Unblock the Notifications