பாஸ்போர்ட் இருக்கா? வெளிநாடு போகணுமா? தமிழக அரசு ஊழியர்களுக்கு டபுள் சந்தோஷம்.. குட்நியூஸ்
சென்னை: 23 ஆண்டுகளாக போராடி வந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீட்டமைக்க தமிழக அரசு உத்தரவிட்டதில் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.. இந்த நேரத்தில் இந்த மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும் வகையில் மற்றொரு சர்ப்ரைஸ் செய்தி அரசு ஊழியர்களுக்கு வந்துள்ளது.. அது என்ன தெரியுமா?
வெளிநாடு பயணிக்கும் எந்த ஒரு நபரும், பாஸ்போர்ட் வைத்திருக்க வேண்டும். இதை பெறுவதற்கு ஒவ்வொரு அரசும் பிரத்யேக நடைமுறைகளை வைத்திருக்கின்றன.

அதன்படி, இந்திய அரசு பிரத்யேக இணையதளமான பாஸ்போர்ட் சேவா கேந்த்ரா, பாஸ்போர்ட் அலுவலகங்கள் மூலம் விண்ணப்பிக்கப்பட்டு வருகின்றன.. இதில் அரசு ஊழியர்கள் பாஸ்போர்ட் பெறுவதற்கும், வெளிநாடு செல்வதற்கும் தடையில்லா சான்று கட்டாயம் பெற வேண்டும்.
அரசு ஊழியர்கள் - பாஸ்போர்ட்
ஆனால், இதுவரை இந்த நடைமுறை சிக்கலானதும், நேரம் அதிகமாகும் வகையிலும் இருந்தது. பல ஊழியர்கள் இதனால் சிரமப்பட்டனர்.
இந்நிலையில், தமிழக அரசு அரசு ஊழியர்களுக்கு சிரமமின்றி பாஸ்போர்ட் விண்ணப்பித்து, தடையில்லா சான்றை எளிதாக பெற அரசாணை வெளியிட்டுள்ளது. இதன் மூலம், முன்பு கடுமையாக இருந்த விதிமுறைகள் எளிதாக்கப்பட்டு, ஊழியர்களுக்கு பாதுகாப்பான, விரைவான மற்றும் நடைமுறைசார்ந்த வசதிகள் கிடைக்கும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, தமிழகத்தில் அரசு ஊழியர்கள் இனிமேல் நினைத்த நேரத்தில் வெளிநாட்டு பயணம் மேற்கொள்ளலாம் என்று கூறி, விதிமுறைகளை எளிதாக்கி தமிழக அரசு புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழக அரசு சர்ப்ரைஸ்
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள புதிய உத்தரவில் கூறியிருப்பதாவது, "அரசு ஊழியர்கள் பாஸ்போர்ட் பெறுவதற்கும், வெளிநாடு செல்வதற்கும் NOC எனப்படும் தடையில்லா சான்று பெறுவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் இருந்தன..
அரசு ஊழியர்கள் பாஸ்போர்ட் பெறுவதற்கு அல்லது புதுப்பிப்பதற்கு தங்கள் துறையின் உயர் அதிகாரியிடம் தடையில்லா சான்று (No Objection Certificate NOC) வேண்டும். இந்த சான்று, ஊழியருக்கு எதிராக எந்தவொரு ஒழுங்கு நடவடிக்கையும் இல்லை என்பதை உறுதி செய்கிறது.
தடையில்லா சான்று - வெளிநாடு அனுமதி
பாஸ்போர்ட் பெறுவதற்கு முன் அனுமதி தேவையில்லை என்றாலும், வெளிநாடு செல்வதற்கு துறை தலைமையகத்தின் முன் அனுமதி பெற வேண்டும். இந்த அனுமதி, பயணத்தின் நோக்கம், செல்லும் நாடு மற்றும் கால அளவு ஆகியவற்றின் அடிப்படையில் வழங்கப்படுகிறது.
இது போன்ற கட்டுப்பாட்டால் அரசு ஊழியர்கள் வெளிநாடு செல்வதில் சிக்கல் இருந்து வந்தது. இந்நிலையில் தமிழக அரசின் புதிய அரசாணையின்படி, SimpleGov முயற்சியின் கீழ் பாஸ்போர்ட் பெறுவதற்கும் புதுப்பிப்பதற்கும் நடைமுறைகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது.
சிக்கலான நடைமுறைகள் குறைக்கப்பட்டு, எளிய முறையில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். பாஸ்போர்ட் பெறுவதற்கு இந்திய அரசின் அதிகாரப்பூர்வ இணையதளம் (www.passportindia.gov.in) (www.passportindia.gov.in) அல்லது பாஸ் போர்ட் சேவா கேந்திரங்கள் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். தேவையான ஆவணங் களை (அடையாளச் சான்று, முகவரிச் சான்று, NOC) டிஜிட்டல் முறையில் சமர்ப்பிக்கலாம்.
புதிய பாஸ்போர்ட் விண்ணப்பம்
அதன்படி முதலில், மத்திய அரசு நிர்ணயித்துள்ள முறைப்படி ஐ.எப்.எச்.ஆர்.எம். எஸ்., மூலம் அரசால் நிர்ணயிக்கப்பட்ட அதிகாரிக்கு தகவல் கடிதம் அனுப்ப வேண்டும். அதன் பின்னர் புதிய பாஸ்போர்ட் அல்லது புதுப்பித்தலுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அவசர நிலை என்றால் மட்டும் அதற்கான விண்ணப்பத்தை ஏற்று, நிர்ணயிக்கப்பட்ட அதிகாரியே அடையாளச் சான்றிதழ் அல்லது பாஸ்போர்ட் பெறுவதற்கான தடை யில்லா சான்றிதழை வழங்குவார்.
டபுள் சந்தோஷத்தில் தமிழக அரசு ஊழியர்கள்
நிர்ணயிக்கப்பட்ட அதிகாரியிடம் தடையில்லா சான்றிதழை பெற்ற பிறகே வெளிநாட்டிற்கு அரசு ஊழியர் பயணம் செல்ல முடியும்.. அதே நேரம் அரசு ஊழியர் வெளிநாட்டிற்கு சென்றுவிட்டு, அரசின் அனுமதி பெறாமல் அங்கு வேலை தேடக்கூடாது" என்று அறிவிப்பில் தமிழக அரசின் தலைமை செயலாளர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே 23 ஆண்டுகளாக போராடி வந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீட்டமைக்க தமிழக அரசு பிறப்பித்த உத்தரவில் பெரு மகிழ்ச்சியில் உள்ளனர்.. இப்போது, பாஸ்போர்ட் வசதிகள் எளிதாக்கப்பட்டு, வெளிநாடு பயணம் சுலபமாகும் அறிவிப்பு வெளியிடப்பட்டதால், ஊழியர்கள் இரட்டிப்பு சந்தோஷத்தில் இருக்கிறார்கள்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications