அரசு ஊழியர்களுக்கு முழு சம்பளம்.. மாத மாதம் வரி பிடித்தம்? தமிழக அரசு அதிரடி! பான் கார்டு இருக்குல்ல
சென்னை: தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, வருமான வரி பிடித்தம் குறித்த தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.
தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, கட்டாயமாக மாதந்தோறும் வருமான வரி பிடித்தம் செய்யும் புது நடைமுறையாக உள்ளது.. இந்த மாதம் முதல் அமலுக்கு வருகிறது. விருப்பம் போல வருமான வரி பிடித்தம் செய்யும் நடைமுறையை தமிழக அரசு கைவிடுகிறது.

புதிய நடைமுறை: தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான ஊதியப்பட்டியல் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை மென்பொருளான "ஐஎப்எச்ஆர்எம்எஸ்" என்ற நிதித்துறையின் சாஃப்ட்வேர் வாயிலாக தயாரிக்கப்பட்டு, அதன்படியே வழங்கப்பட்டும் வருகிறது..
இந்த சாஃப்ட்வேரை பயன்படுத்தியே, இந்த வருடம் முதல் வருமான வரிப்பிடித்தமும் கணக்கிடுவதுடன், சம்பளமும் பிடித்தம் செய்யப்படுகிறது.. இப்படிப்பட்ட சூழலில், கடந்த மாதம், இந்த IFHRMS சாப்ட்வேர் மூலம் தயாரிக்கப்பட்ட சம்பளப் பட்டியலில், அதிகளவில் வருமான வரிப்பிடித்தம் செய்யும் வகையில் தொகை குறிப்பிடப்பட்டிருந்ததாம்.
அதிகரிக்குமா?: அதாவது, கடந்த வருடம் ரூ.40 ஆயிரம் வரி செலுத்தியிருந்தால், இந்த வருடம் இது அதிகரிக்க வாய்ப்புள்ளது.. கடந்த ஏப்ரல் மாதம் முதல் இந்த நடைமுறை அமலுக்கு வந்தது.
ஆனால், மாதம் ரூ.9 ஆயிரம் வீதம் வரியை பிடித்தம் செய்யும் வகையில் அந்த சாப்ட்வேரில் கணக்கு வந்திருப்பதாகவும், இதைப்பார்த்து அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும், பதறிப்போய்விட்டார்களாம். எனவேதான் இதுகுறித்து நிதித்துறை செயலரிடம் கடந்த மாதம் புகாராக கொண்டு சென்றிருந்தனர். தலைமை செயலக சங்கம் சார்பில் அதன் தலைவர் கு.வெங்கடேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் தமிழக நிதித்துறை செயலாளர் உதயசந்திரனிடம் இது தொடர்பாக மனு அளித்திருந்தனர்.
மனிதவளம்: தற்போது, ஐ.எப்.எச்.ஆர்.எம்.எஸ்., எனப்படும் நிதி மற்றும் மனிதவள மேலாண்மை மென்பொருள் வழியே வருமான வரியை கணக்கிட்டு, மாதந்தோறும் சம்பளத்தில் பிடிக்கும் முறையை அமல்படுத்த அரசு முடிவெடுத்து உள்ளது... மாதந்தோறும் வருமான வரி பிடிக்கும் புதிய நடைமுறை, மே மாதம் முதல் அமலுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, கருவூல கணக்குத்துறை சார்பில், அனைத்து துறைகளிலும் சம்பள பட்டியல் தயாரிக்கும் அலுவலர்களுக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டிருக்கிறது.
கடிதம்: அந்த கடிதத்தில், "வருமான வரி செலுத்த தகுதி படைத்த ஊழியர்கள் அனைவருக்கும், அவர்கள் பெறும் சம்பளத்தின்படி, செலுத்த வேண்டிய வருமான வரி கணக்கிடப்படும். அந்தத் தொகைக்கு எவ்வளவு பிடிக்கலாம் என கணக்கிட்டு, மாதந்தோறும் கட்டாயம் பிடிக்கப்படும். இந்த நடைமுறை இம்மாதம் முதல் அமலுக்கு வருகிறது. "பான் கார்டு" எனப்படும் நிரந்தர கணக்கு எண் இல்லாத ஊழியர்கள், அதை பெற்று, அந்த எண்ணை தெரியப்படுத்த வேண்டும்.
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், தாங்கள் செலுத்த வேண்டிய வருமான வரியை, வருமான வரித்துறை அறிவித்துள்ள, "Old Regime" எனப்படும் பழைய முறையில் கணக்கிட்டு பிடிக்க வேண்டுமா அல்லது "New Regime" எனப்படும் புது நடைமுறைப்படி பிடிக்க வேண்டுமா என்பதை தெரிவிக்க வேண்டும்.
வரிப்பிடித்தம்: எந்த முறையில் வருமான வரி பிடிக்க வேண்டும் என்பதை, ஒரு முறை தேர்வு செய்த பிறகு, எதிர்காலத்தில் மாற்ற முடியாது. எனவே, கவனமாக தேர்வு செய்யவும். வருமான வரித்துறையின் பழைய கணக்கீட்டு நடைமுறையின்படி வருமான வரி செலுத்துவோர், தங்கள் சேமிப்பு விபரங்களை வரும் 15ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, நடப்பு நிதியாண்டிலிருந்து, புதிய மென்பொருள் வழியே வருமான வரி பிடித்தம் செய்வதை முற்றிலுமாக கைவிட வேண்டும் என்று முதல்வருக்கு தலைமை செயலக சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது மிகுந்த கவனத்தை பெற்றுவருகிறது.












Click it and Unblock the Notifications