Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இலவச ஸ்கூட்டர் திட்டம் பயனாளிகள்: மாற்று திறனாளிகளுக்கு இன்சூரன்ஸ், நம்பர் பிளேட் அரசு வழங்க தாமதம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சார்பில், 60 சதவீதத்திற்கும் மேல் உடல் குறைபாடுடைய நபர்கள் வேலைவாய்ப்பு, கல்வி மற்றும் சுயதொழில் நிமித்தமாகத் தடையின்றி வெளியே சென்று வர ஏதுவாக, இணைப்பு சக்கரம் பொருத்திய இணைப்பு சக்கரம் பொருத்திய ஸ்கூட்டர்கள் இலவசமாக வழங்கப்பட்டு வரும் நிலையில், ஒரு முக்கிய சிக்கல் ஒன்று எழுந்துள்ளது.. இது குறித்த கோரிக்கையும் அரசுக்கு சென்றுள்ளது..

தமிழ்நாடு அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத் துறை மூலம், 60 சதவீதத்திற்கும் மேல் உடல் ரீதியான குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள், வேலைவாய்ப்பு, சுயதொழில் அல்லது கல்வி நிமித்தமாகத் தடையின்றி வெளியே சென்று வருவதற்கு வசதியாக, இலவசமாக இணைப்பு சக்கரம் பொருத்திய ஸ்கூட்டர்கள் அதாவது Motorized Tricycles வழங்கும் திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

Free Scooter Scheme TamilNadu Government Differently Abled Insurance Number Plate

இலவச ஸ்கூட்டர் திட்டம்

இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் நபர்கள் 18 முதல் 45 வயதுக்கு உட்பட்டவராகவும், இரு சக்கர வாகனத்தை ஓட்டுவதற்கான செல்லுபடியாகும் டிரைவிங் லைசென்ஸ் பெற்றவராகவும் இருத்தல் வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் தகுதியான மருத்துவக் குழுவினால் வழங்கப்பட்ட 60% அல்லது அதற்கு மேற்பட்ட குறைபாட்டிற்கான சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும், அரசு நிர்ணயித்துள்ள வருமான வரம்பிற்குள் இருக்க வேண்டும் மற்றும் வேலை அல்லது சுயதொழில் செய்துகொண்டிருப்பவராகவோ அல்லது படித்து கொண்டிருப்பவராகவோ இருத்தல் அவசியம். தகுதியுடைய நபர்கள் தங்களின் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை அணுகி விண்ணப்பிக்கலாம்; விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, முன்னுரிமை அடிப்படையில் தகுதியானவர்களுக்கு வாகனங்கள் வழங்கப்படும்.

தமிழக அரசு

இதனால் ஏராளமானோர் பயன் பெற்று வருகிறார்கள்.. இந்த 3 சக்கர வாகனம் எனப்படும் பெட்ரோல் ஸ்கூட்டர் உதவியால மாற்று திறனாளிகள் எங்கும் செல்ல முடிகிறது.. வேலைக்கோ அல்லது வேறு இடங்களுக்கோ செல்ல யாருடைய உதவியும் இல்லாமல் சுதந்திரமாகப் பயணிக்கலாம்.

மாணவர்கள், சுய தொழில் செய்வோர், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிவோர் எனப் பல்வேறு பிரிவினரைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் இந்தத் திட்டத்தின் மூலம் பயன்பெற்று வருகின்றனர்.. அரசுத் தரப்புத் தகவல்களின்படி, கடந்த 2024 ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 9,000 பேருக்கும், கடந்த ஆண்டில் 10,000-க்கும் மேற்பட்டோருக்கும் இந்த இலவச ஸ்கூட்டர்கள் வழங்கப்பட்டுள்ளன..

இப்படி இந்த திட்டம் பல மாற்றுத்திறனாளிகளின் வாழ்வில் ஒளியேற்றி வைத்திருந்தாலும், தற்போது வழங்கப்பட்ட வாகனங்களுக்கான இன்சூரன்ஸ், ஆர்சி புக், நம்பர் பிளேட் போன்ற அத்தியாவசிய ஆவணங்களை வழங்காமல், அரசு மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் இழுத்தடித்து வருவதாகக் கடும் அதிருப்தியும் குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன..

நம்பர் பிளேட், ஆர்சி புக்

ஆவணங்கள் இல்லாததால், இந்த வாகனங்களைச் சாலையில் பயன்படுத்துவதற்கு மாற்றுத்திறனாளிகள் மிகுந்த அச்சமடைந்து வருகின்றனர்.. ஆவணங்கள் இல்லாமல் வாகனம் ஓட்டும்போது போக்குவரத்து போலீசாரால் அபராதம் விதிக்கப்படலாம் என்ற பயம் எழுகிறதாம்..

இது குறித்து அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் திண்டுக்கல் மாவட்ட செயலாளர் பகத்சிங் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.. அதில், மாற்றுத்திறனாளிகளுக்கான ஸ்கூட்டர்களுக்கு காப்பீடு உட்பட தேவையான ஆவணங்களை, சம்பந்தப்பட்ட காப்பீடு நிறுவனங்கள் விரைந்து வழங்குவதில்லை. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளும் காப்பீடு நிறுவனங்களிடம் இவற்றை முறையாகக் கேட்டுப் பெறுவதில்லை.. இதனால் பயனாளிகள் அலைக்கழிக்கப்படுகிறார்கள்.

ஆவணங்கள் இழுத்தடிப்பு

திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் கடந்த ஆண்டு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் ஸ்கூட்டர்கள் பெற்ற பலர், இன்று வரை எந்த ஆவணமும் இல்லாமல் வாகனங்களைப் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளனர்..

அதிகாரிகள் ஆவணங்களை முழுமையாகத் தயார் செய்துவிட்டு, அதன் பின் வாகனம் வழங்கும் விழாவை நடத்த வேண்டுமே தவிர, விழாவிற்காக வாகனங்களை மட்டும் வழங்கிவிட்டு ஆவணங்களை இழுத்தடிப்பதை உடனே நிறுத்த வேண்டும் . அரசு இதில் தலையிட்டு விரைந்து ஆவணங்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்..

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+