சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை அரசே நினைத்தாலும் ஆக்கிரமிக்க முடியாது.. அதிரடி காட்டிய ஐகோர்ட்
சென்னை: சென்னை காரப்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கரணை சதுப்பு நிலங்களில் எந்த விதமான ஆக்கிரமிப்புகளையும் அனுமதிக்க கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலங்கள் ஈர நிலங்கள் ஆகும்.. அதாவது ஸ்பான்ச் போல் செயல்பட்டு எவ்வளவு தண்ணீர் வந்தாலும், வெள்ளம் வந்தாலும் உறிஞ்சு தனது நிலத்தில் சேகரிக்கும் தன்மை உடையவை. வெள்ளத்தில் இருந்து தென்சென்னையை பாதுகாக்கும் நிலம் ஆக உள்ளது. உலகின் மிக அபூர்வமான நன்னீர் சதுப்பு நிலமும் பள்ளிக்கரணையாகும்.

1965-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 5 ஆயிரத்து 500 ஹெக்டேராக இருந்த பள்ளிக்கரணை சதுப்பு நிலம், 2013 ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 600 ஹெக்டேராக சுருங்கி விட்டதாக சொல்லப்படுகிறது. பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை மத்திய, மாநில அரசு நிறுவனங்கள், 100 ஏக்கருக்கும் மேல் ஆக்கிரமித்துள்ளதாகவும், மேலும் 1,085 தனியார் குடியிருப்புகள் ஆக்கிரமித்துள்ளதாகவும் சென்னை உயர்நீதிமன்றத்தின் ஒரு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையின் ஒரு பகுதியான தென் சென்னையில் மத்திய கைலாசம் முதல் மேடவாக்கம் வரை 5,000 ஹெக்டேர் பரப்பளவுக்கு விரிந்து இருந்த பள்ளிக்கரணை சதுப்பு நிலம் தற்போது பெருங்குடிக்குப் பக்கத்தில் வெறும் 500 ஹெக்டேர் பரப்பளவு என்கிற அளவில் சுருங்கி இருக்கிறது. பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் ஏராளமான ஆக்கிரமிப்புகள் வந்த பின்னர், ஒரு கட்டத்தில் சென்னை உயர்நீதிமன்றமே நேரடியாக களம் இறங்கி அதை காப்பாற்ற தொடங்கியது.. இப்போதைய நிலையில் புதிதாக பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை ஆக்கிரமிக்க அரசே நினைத்தாலும் முடியாது.. அந்த அளவிற்கு கறாராக உயர்நீதிமன்றம் இருக்கிறது. மேலும் பள்ளிக்கரணையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும் உத்தரவிட்டு வருகிறது. அந்த வகையில் புதிய உத்தரவினை உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
சென்னை காரப்பாக்கத்தில் பக்கிங்காம் கால்வாயை ஒட்டிய 38 ஏக்கர் நிலத்தை, சதுப்பு நிலம் என தமிழ்நாடு வருவாய் துறை வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதில் 8 ஏக்கர் நிலத்தை, தரமணியில் செயல்பட்டுவரும் மத்திய அரசின் இந்திய புள்ளியியல் நிறுவனத்திற்கு வழங்கி கடந்த 2014-ம் ஆண்டு மே 16-ந்தேதி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.
இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில், ஈஞ்சம்பாக்கத்தை சேர்ந்த சேகர் என்பவர் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில், "சதுப்பு நிலத்தை பாதுகாக்க வேண்டிய அரசே, அதை இந்திய புள்ளியியல் நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது. எனவே, அந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும்'' என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.வி. கங்கா புர்வாலா, நீதிபதி டி. பரத சக்கரவர்த்தி ஆகியோர், "சதுப்பு நிலத்தை இந்திய புள்ளியியல் நிறுவனத்திற்கு வழங்கிய தமிழ்நாடு அரசின் அரசாணையை ரத்து செய்கிறோம். இந்திய புள்ளியியல் நிறுவனத்திற்கு மாற்று இடம் ஒதுக்க வேண்டும். ஏற்கனவே வழங்கிய 8 ஏக்கர் சதுப்பு நிலத்தை மீட்டு முறையாக பராமரிக்க வேண்டும். எதிர்காலத்தில் சதுப்பு நிலங்களில் எந்த வித மான ஆக்கிரமிப்புகளையும் அரசு அனுமதிக்க கூடாது" உத்தரவிட்டனர்.
-
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு?












Click it and Unblock the Notifications