Population Census: தமிழகத்தில் ஜூலை 17 முதல், மக்கள்தொகை கணக்கெடுப்பு! அரசிதழில் அறிவிப்பு
சென்னை: தமிழகத்தில் ஜூலை 17 ஆம் தேதி முதல், மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என தமிழக அரசு அரசிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு நடத்தப்பட வேண்டிய மக்கள்தொகை கணக்கெடுப்பு தற்போது தொடங்கவுள்ளது.
ஆகஸ்ட் 30ஆம் தேதி வரை 45 நாட்களுக்கு முதல்கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நடத்தப்படும். வீடுகளில் யார் யார் வசிக்கிறார்கள், எத்தனை வாகனங்கள் உள்ளன, வீட்டில் உள்ள வசதிகள் குறித்தும் கேள்விகள் கேட்கப்படும். அது போல் குடும்பத்தினர் உட்கொள்ளும் பிரதான உணவு குறித்த கேள்வியும் இடம் பெற்றுள்ளது. இது போல் 33 கேள்விகள் கேட்கப்படும்.

10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2011 ஆம் ஆண்டில் நாடு தழுவிய அளவில் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன் பிறகு 2021 ஆம் ஆண்டு நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் கொரோனா பெருந்தொற்று காரணமாக அந்த மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகள் தள்ளி வைக்கப்பட்டது.
இந்த நிலையில்தான் நாடு முழுவதும் இரு கட்டங்களாக மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என மத்திய அரசு கடந்த ஆண்டு அறிவித்தது. அதன்படி ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை வீடுகள், கட்டடங்கள், வீட்டில் உள்ள வசதிகள் குறித்து தகவல்கள் சேகரிக்கப்படவுள்ளன.
அதன்பிறகு அடுத்த ஆண்டு பிப்ரவரியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடங்கப்படும். அப்போது ஒவ்வொருவரின் சமூக, பொருளாதார தகவல்கள் சேகரிக்கப்படவுள்ளன. இந்த நிலையில் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான டிஜிட்டல் தளங்கள், சின்னங்களை மத்திய அரசு டெல்லியில் நேற்று அறிமுகம் செய்தது.
முதல்முறையாக டிஜிட்டல் முறையில் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இதற்காக 4 டிஜிட்டல் தளங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த தளங்களை மக்கள் 16 மொழிகளில் பயன்படுத்த முடியும்.
சுதந்திர இந்தியாவிலேயே முதல் முறையாக மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் அனைத்தும் டிஜிட்டல் முறையில் நடத்தப்படுகிறது.
ஹவுஸ் லிஸ்ட்டிங் பிளாக் கிரியேட்டர், எச்எல்ஓஏ மொபைல் போன் செயலி, செல்ஃப் எனுமரேஷன் போர்ட்டல், சென்செஸ் மேனேஜ்மென்ட் அன்ட் மானிட்டரிங் சிஸ்டம் ஆகிய 4 தளங்கள் உள்ளன. இந்த கணக்கெடுப்பு பணிகளை மேற்கொள்ள அரசு அலுவலர்கள் பயன்படுத்தப்படுகிறார்கள்.
அந்த வகையில் தமிழகத்தில் வரும் ஜூலை 17ஆம் தேதி முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளன. அது போல் ஜாதிவாரி கணக்கெடுப்பு பணிகளும் விரைந்து நடத்தப்பட வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன.
-
தர்மத்திற்காக கொடுத்தாரா.. தவறாக கொடுத்தாரா.. பாஜகவின் 27 தொகுதிகள்... எடப்பாடி தப்புக்கணக்கு! -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்படும் 234 வேட்பாளர்கள்! ஃபயர் மோடில் விஜய்! தயாரான தவெக! -
இன்னொரு ரவுண்டு மழை.. இந்த மாவட்டங்களுக்கு ஜில் அப்டேட்! குட் நியூஸ் சொன்ன வானிலை மையம் -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
சிலர் சிரிப்பார்! சிலர் அழுவார்! நாங்கள் சிரித்துக் கொண்டே அழுகின்றோம்! திமுகவால் புலம்பும் மதிமுக -
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
ஈரோட்டில் வெளுத்த வெயில்.. 100 டிகிரியை தாண்டியது! வேலூருக்கு இரண்டாவது இடம் -
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்!












Click it and Unblock the Notifications