சென்னை அம்பத்தூர் கூட்டுறவு வங்கியில் சுற்றிவளைக்கப்பட்ட கிருஷ்ணமூர்த்தி.. அந்த டம்ளர் தான் மேட்டரே
சென்னை: சென்னை அம்பத்தூர் கூட்டுறவு சங்க அதிகாரி, கடன் பத்திரத்தை ரத்து செய்ய விவசாயியிடம் ரூ.40 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போது கையும் களவுமாக சிக்கினார். டம்ளரில் வைத்து கொடுத்தபோது லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கைது செய்தனர்.
சென்னை அம்பத்தூர் கூட்டுறவு சங்கத்தின் செயலாளராக ஆறுமுகம் (வயது 50) பணியாற்றி வந்தார்.இங்கு திருவள்ளூர் மாவட்டம் திருமழிசையை சேர்ந்த 52 வயதாகும் கிருஷ்ணமூர்த்தி என்ற விவசாயியின் தந்தை பூந்தமல்லி வட்ட கூட்டுறவு வீட்டுவசதி சங்கத்தில் வீட்டு பத்திரத்தை அடமானம் வைத்து வாங்கிய கடன் வாங்கி உள்ளார். அந்த கடனை முறையாக திருப்பி செலுத்தி விட்டார்.

ஆனால் கடன் பத்திரத்தை ரத்து செய்வதற்குள் கிருஷ்ணமூர்த்தியின் தந்தை இறந்துவிட்டார். இதனால் அந்த கடன் பத்திரத்தை ரத்து செய்யக்கோரி கிருஷ்ணமூர்த்தி மனு கொடுத்து இருந்தார். அம்பத்தூர் கூட்டுறவு சங்க செயலாளரான ஆறுமுகம்தான் பூந்தமல்லி வட்ட கூட்டுறவு வீட்டுவசதி சங்கத்துக்கும் கூடுதல் பொறுப்பு வகித்து வந்திருக்கிறார்.
இதனால் அவர், ரூ.50 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் கடன் பத்திரத்தை ரத்து செய்வதாக கூறியிருக்கிறார். ஆனால் அவ்வளவு பணம் கொடுக்க முடியாது என கிருஷ்ணமூர்த்தி கூறியதால் ரூ.40 ஆயிரம் ரூபாயாவது தரும்படி ஆறுமுகம் கேட்டாராம். ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத கிருஷ்ணமூர்த்தி, இதுகுறித்து திருவள்ளூர் லஞ்ச ஒழிப்புத்துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார்.
அதேநேரம் டிஎஸ்பி ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார், ஆறுமுகத்தை கையும் களவுமாக பிடிக்க ரசாயன பொடி தடவிய ரூ.40 ஆயிரத்தை கிருஷ்ணமூர்த்தியிடம் கொடுத்து அதனை லஞ்சமாக கொடுக்கும்படி அறிவுறுத்தி அனுப்பி உள்ளார்கள்.
அதன்படி நேற்று காலை விவசாயி கிருஷ்ணமூர்த்தி, ரசாயன பொடி தடவிய லஞ்சப் பணத்துடன் அம்பத்தூர் கூட்டுறவு சங்க அலுவலகத்துக்கு போயிருக்கிறார். பின்னர் வெளியே நின்றபடி கூட்டுறவு சங்க செயலாளர் ஆறுமுகத்தை செல்போனில் தொடர்பு கொண்டு பணம் கொண்டு வந்துள்ளதாக கூறியுள்ளார்.
அப்போது ஆறுமுகம், டீ கொடுப்பது போல் டம்ளரில் பணத்தை வைத்து கொண்டு வந்து தருமாறு கூறியிருக்கிறார். அதன்படி கிருஷ்ணமூர்த்தி, லஞ்சப் பணத்தை டம்ளரில் வைத்து அதனை ஆறுமுகத்திடம் கொடுத்திருக்கிறார். அப்போது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், பாய்ந்து சென்று ஆறுமுகத்தை கையும் களவுமாக பிடித்து கைது செய்தார்கள்.
தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார், கைதான கூட்டுறவு சங்க செயலாளர் ஆறுமுகத்தை திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அந்த சம்பவம் அம்பத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆயிரம் பாதுகாப்பு கொடுத்தாலும்.. 'இது' மட்டும் குறையவேயில்லை.. RBI வெளியிட்ட பகீர் ரிப்போர்ட்! -
மத்திய அரசின் புதிய சேவை.. உங்கள் பணம், உங்கள் கையில்.. இனி ஒரு ரூபாய் கூட மிஸ் ஆகாது! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications