இனி அதிர்ஷ்ட மழை கொட்டும்! தங்கத்தை போலவே வெள்ளியில் வந்த மேஜர் மாற்றம்! இதுக்கு தானே காத்திருந்தோம்
சென்னை: இப்போது நமது நாட்டில் பொதுமக்கள் பலரும் தங்கத்தில் நம்பி முதலீடு செய்கிறார்கள். தங்கத்தில் போட்ட பணத்திற்கு ஆபத்து இல்லை, சீரான லாபம் வருவது என பல காரணங்கள் இருப்பதால் மக்கள் தங்கத்தில் ஆர்வமாக முதலீடு செய்கிறார்கள். அதேநேரம் இப்போது தங்கம் விலை எக்குத்தப்பாக அதிகரித்துவிட்ட நிலையில், மக்களில் சிலர் வெள்ளியில் முதலீடு செய்யவும் ஆர்வம் காட்டுகிறார்கள். ஆனால் அதில் ஒரு மேஜர் சிக்கல் இருந்த நிலையில், மத்திய அரசின் ஒரு முடிவால் அந்த சிக்கல் தீரப்போகிறது.
நமது நாட்டில் ஏழை மற்றும் மிடில் கிளாஸ் மக்களின் பிரதான முதலீடாகத் தங்கம் தான் இருந்து வந்தது. 2000க்கு முன்பு வரை தங்கத்திற்கு ஹால்மார்க்கிங் என்பது இல்லை. இதனால் பொதுமக்களுக்கு தாங்கள் வாங்கும் தங்கத்தின் தரம் குறித்து எதுவும் தெரியாமல் இருந்தது. இதனால் மக்கள் தங்க நகையை வாங்கும்போது ஏமாறும் சம்பவங்களும் நடந்தன.

ஹால்மார்க்
இதைத் தடுப்பதற்காகவே மத்திய அரசு தங்க நகைகளுக்கு ஹால்மார்கிங்கை கொண்டு வந்தது. ஹால்மார்கிங் வந்த பிறகு எந்த தூய்மையான தங்கத்தை வாங்குகிறோம் என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள முடிந்தது. முதலில் ஹால்மார்கிங் தானாக முன்வந்து செய்யக்கூடிய ஒன்றாக இருந்த நிலையில், பிறகு அது கட்டாயமாக்கப்பட்டது. இப்போது 24k, 22k, 18k, 16k என பல்வேறு நிலைகளிலும் ஹால்மார்கிங் செய்யப்படுகிறது. சமீபத்தில் தான் 9k தங்கத்திற்கும் கூட ஹால்மார்க் செய்யப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. இது ஹால்மார்கிங் மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையையே காட்டுவதாக இருக்கிறது.
வெள்ளி
அதேநேரம் தங்கம் விலை தாறுமாறாக அதிகரித்துவிட்ட நிலையில், பொதுமக்களால் தங்கத்தை வாங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்களில் பலரும் தங்கத்திற்குப் பதிலாக வெள்ளியை வாங்கலாமா என யோசித்து வருகிறார்கள். இருப்பினும், அதில் ஒரு சிக்கல் இருந்தது. அதாவது தங்கத்தைப் போல வெள்ளியில் கட்டாய ஹால்மார்க் இல்லை. இதனால் தூய்மையான வெள்ளியைத் தான் வாங்குகிறோமா என்பதில் குழப்பம் இருந்தது.
வெள்ளிக்கு ஹால்மார்க்
இந்தச் சூழலில் தான் வெள்ளி நகைகள் மற்றும் பொருட்களுக்குத் தானாக முன்வந்து ஹால்மார்க்கிங் செய்யலாம் என மத்திய அரசு அறிவித்தது. அதாவது ஹால்மார்கிங் கட்டாயமில்லை என்றாலும் அந்த நிறுவனங்கள் தாங்களாகவே முன்வந்து ஹால்மார்க் செய்து கொள்ளலாம். இது கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது. இதற்கிடையே அடுத்த கட்டமாகத் தங்கத்தை போலவே வெள்ளி ஹால்மார்க் செய்வதையும் கட்டாயம் என அறிவிக்க இந்தியத் தர நிர்ணய அமைப்பு திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக இந்தியத் தர நிர்ணய அமைப்பின் (BIS) தலைமை இயக்குநர் பிரமோத் குமார் திவாரி கூறுகையில், "இப்போது தான் வெள்ளி ஹால்மார்க் பணிகள் ஆரம்பித்துள்ளது. இதை மதிப்பிட எங்களுக்குச் சிறிது காலம் தேவை. ஆறு மாதங்கள் போதுமானதாக இருக்கும் என நினைக்கிறோம். இந்த ஆறு மாத காலத்திற்குப் பிறகு, இதைக் கட்டாயமாக்குவது குறித்துப் பரிசீலிப்போம்" என்று தெரிவித்தார்.
ஹால்மார்க் மையங்கள்
இப்போது இந்தியாவில் 87 மாவட்டங்களில் பரவியுள்ள 230 BIS அங்கீகரிக்கப்பட்ட மதிப்பீடு மற்றும் ஹால்மார்க்கிங் மையங்கள் உள்ளன. இந்த மையங்கள் அனைத்தும் வெள்ளி நகைகளைப் பரிசோதனை செய்து, சான்றளித்து வருகின்றன. வெள்ளி ஹால்மார்க் கட்டாயமானால் பொதுமக்களுக்கும் தாங்கள் ஏமாற்றப்பட மாட்டோம் என்ற ஒரு நம்பிக்கை இருக்கும். இதன் காரணமாகவே ஹால்மார்க்கிங் முறையை பல்வேறு தரப்பினரும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். அடுத்த 6 மாதங்களில் வெள்ளிக்கும் ஹால்மார்க் கட்டாயமாக்கப்பட்டால் அது வெள்ளியில் முதலீடுகளை மேலும் அதிகரிக்கவே செய்யும் என்பதில் சந்தேகம் இல்லை.












Click it and Unblock the Notifications