சென்னை, புறநகர் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு ரூ.3,24,000 கடன் தரும் அரசு.. 50 சதவீத மானியம்
சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் எஸ்சி, எஸ்டி பிரிவினர் வாகனங்கள் மூலம் காய்கறி விற்பனை செய்ய கடன் வழங்கப்படும் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவித்துள்ளார்.
சுய தொழில் செய்யும் ஆர்வம் பலருக்கும் இருக்கும்.ஏழை எளியோர், தொழில் செய்து முன்னேற சிரமப்படுகிறார்கள். அதற்கு முக்கிய காரணம் தொழில் தொடங்க பணம் இல்லாதது தான். இன்றைக்கு சென்னை போன்ற பெருநகரங்களில் கடை வைக்க வேண்டும் என்றால் லட்சங்களில் அட்வான்ஸ் தொகை கொடுக்க வேண்டும். மாதம் மாதம் கணிசமாக வாடகை கொடுக்க வேண்டும். இதுதவிர தொழில் தொடங்க உபகரணங்கள் வாங்க வேண்டும். இதனால் கடை வைப்பது போன்ற தொழில்கள் ஏழைகளுக்கு கானல் நீராக உள்ளது.

அதேநேரம் தள்ளுவண்டி மூலம் உணவுப்பொருட்கள் விற்பனை செய்வது, காய்கறிகள் விற்பனை செய்வதற்கு பெரிய அளவில் மூலதனம் தேவையில்லை. ஆனால் அதற்குமே வண்டி வாங்க கணிசமாக தொகை தேவைப்படுகிறது. இந்நிலையில் தான் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் எஸ்சி, எஸ்டி பிரிவினர் வாகனங்கள் மூலம் காய்கறி விற்பனை செய்ய கடன் வழங்கப்படும் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவித்துள்ளார்.
சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: "ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தை சார்ந்த தொழில்முனைவோர்களின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த வாகனங்கள் மூலமாக காய்கறி விற்பனை செய்யும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
இத்திட்டத்தில் பயன்பெற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 18 முதல்55 வயது வரையிலும், குடும்ப ஆண்டு வருமானம், ரூ.3,00,000 மிகாமலும் இருக்க வேண்டும்.
சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் வசிப்பவராக இருக்க வேண்டும். வாகனங்கள் மூலம் காய்கறி விற்கும் தொழிலுக்கு திட்ட தொகையாக ரூ.3,24,000 கடன் வழங்கப்படும். இதில் ஆதிதிராவிடர்களுக்கு 30 சதவீதம் மானியமும், பழங்குடியினருக்கு 50 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது.
எஞ்சிய தொகை வங்கி கடன் தொகையாக பெற வழிவகை செய்யப்படும். இத்திட்டத்தில் பயன்பெற www.tahdco.com என்ற இணையதள முகவரியில் புகைப்படம் மற்றும் உரிய ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்ய வேண்டும்" இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
இதேபோல் ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினர்கள் தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்த புதிதாக தொழில் தொடங்குவதற்கு வசதியாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பில்டர் காபி நிலையம் அமைக்க மானியத்துடன் கூடிய கடனுதவி பெற விண்ணப்பிக்க முடியும்.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கடந்த வாரம் வெளியிட்ட அறிவிப்பில், "இந்த தொழில் தொடங்க காலியிடமோ அல்லது கட்டிடங்கள் வைத்திருப்பவர்களுக்கு பில்டர் காபி நிலையம் அமைக்கவும், தொழில் முனைவோர்கள் அல்லது அவர்களின் ஊழியர்களுக்கு தேவையான பயிற்சியும், உரிமையாளர் கட்டணம் ரூ.2 லட்சம் முற்றிலும் விலக்கு அளிக்கப்படும். விற்பனை செய்ய வாங்கும் பொருட்களுக்கு 5 சதவீதம் வரை சிறப்பு தள்ளுபடியும் பில்டர் காபி நிறுவனத்தின் மூலம் அளிக்கப்படும். மேலும் மாதாந்திர பில்லிங் மென்பொருள் கட்டணம் விலக்கு அளிக்கப்படும். இந்த தொழிலை செயல்திட்ட அறிக்கை தயார் செய்ய இலவச ஆலோசனைகள் அந்த நிறுவனத்தின் மூலம் அளிக்கப்படும்.
18 வயது முதல் 40 வயதுக்கு உட்பட்ட ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினர்கள் தாட்கோ மூலம் மானியத்துடன் கூடிய கடனுதவி பெற புகைப்படம் மற்றும் குறிப்பிட்ட சான்றுகளுடன் www.tahdco.com என்ற இணையதளத்தில விண்ணப்பிக்கலாம். இந்த தொழிலுக்கு ரூ.6½ லட்சம் முதல் ரூ.7½ லட்சம் வரை திட்டத்தொகையை நிர்ணயித்து இதற்குரிய மானியமாக ஆதிதிராவிடர்களுக்கு 30 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.2¼ லட்சம் எனவும், பழங்குடியினருக்கு 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.3¾ லட்சம் வரை வழங்கப்படும். பயனாளி 5 முதல் 10 சதவீதம் சொந்த முதலீடு வங்கியில் செலுத்தி மீதம் உள்ள தொகை வங்கி கடனுதவி பெற்றுக் கொள்ளலாம்" என்று அறிவித்துள்ளார்.
-
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க












Click it and Unblock the Notifications