ராஜ்பவன் பெயரை மாற்ற முடியுமா?.. சென்னா ரெட்டி மாதிரி செய்ய வேண்டியதுதானே.. தராசு ஷ்யாம் பரபர
சென்னை: ராஜ்பவன் பெயரை லோக் பவன் என மாற்றுவேன் என்று ஆளுநர் சொல்லியிருக்கிறார். இதை விட பெரிய பைத்தியக்காரத்தனம் எது இருக்கிறது. ராஜ்பவன் என்பது முழுமையான ஆட்சி அதிகாரகம் பெற்ற மாநில ஆளுநர்கள் இருக்கும் இடத்திற்கு பெயர் என தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளர்.
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி இன்று நாளிதழ் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசியிருந்தார். குறிப்பாக , ஆளுநர் என்பவர் ராஜா அல்ல. ராஜ்பவன் என்பது ஜனநாயகத்தின் "இவர் எப்படி ராஜ் பவன் பெயரை மாற்ற முடியும்?"- கடுமையாக விமர்சித்த தராசு ஷ்யாம்ஒரு அங்கம் எனவும் அது மக்களுக்கான இடம். 'ராஜ்பவன்' என்ற பெயரை 'லோக் பவன்' ஆக மாற்ற வேண்டும் என நான் யோசித்து வருகிறேன்" என்று கூறியிருந்தார். ஆளுநரின் இந்த கருத்துக்கள் தமிழக அரசியல் களத்தில் விவாதப்பொருளாக மாறியுள்ளது.

இந்த நிலையில், மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம், ஆளுநரின் இந்த கருத்துக்கு கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். தனியார் தொலைகாட்சிக்கு அளித்த பேட்டியில் தராசு ஷ்யாம் கூறியதாவது:-
ஆளுநரின் அறியாமைதான் இதற்கு காரணம். ஆளுநர் கூறுகிற மாதிரி தமிழகத்தில் அமைதி இல்லை என்றால் எதற்காக வட மாநில தொழிலாளர்கள் இங்கு படையெடுக்கிறார்கள். அவர்கள் கூறும் காரணமே தமிழ்நாட்டில் அமைதி நிலவுகிறது, தமிழ்நாட்டில் கல்வி சிறந்த முறையில் உள்ளது.
வட மாநில தொழிலாளர்களுக்கான பிரச்சினை வந்த போது தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்தது. உத்தர பிரதேசத்தில் சிறைக்கைதிகளை கொண்டு வரும் போது பட்டபகலில் துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. உச்ச நீதிமன்றம் அதை கேள்வி கேட்டுள்ளது.
ஆர்.என்.ரவி ஆளுநராக பணியாற்றிய நாகலாந்தில் சட்டம் ஒழுங்கு எப்படி இருந்தது. சட்டம் ஒழுங்கு என்பது இயல்பாக மக்களால் உணரப்படக்கூடியது. ஆளுநரால் கணிக்கப்படுவது இல்லை. ஆளுநர் கொடுக்கும் வழக்கை மறுத்தால் அது உண்மையிலேயே தவறுதான். முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அது வேறு பிரச்சினை.
ஆனால் ஆளுநர் கூறுகிற பல பிரச்சினைகள்...திராவிட மாடல் காலாவதியான ஒன்று. தமிழ்நாடு மீண்டும் தனித்து இயங்க திட்டமிடுகிறது.. இதெல்லாம் மிக பழைய காலத்தில் முடிந்து போன விஷயம்.எங்கள் பள்ளி நாட்களில், கல்லூரி காலங்களில் இது மாதிரியான கான்செப்ட் இருந்தது. அதெல்லாம் பிரிவினை வாத சட்டம் வந்த பிறகு முடிந்து விட்டது. திராவிட நாடு என்ற கொள்கையே திமுக கைவிட்ட பிறகு 1967-ல் நடைபெற்ற தேர்தலில் மக்கள் திமுகவை தேர்வு செய்தார்கள். அதற்கு பல வரலாறுகள்...1967க்கு பிறகு எந்த தேசிய கட்சி இங்கு வந்து கால் பதித்து இருக்கிறது.
திமுக ஆட்சியாக இருந்தாலும் அதிமுக ஆட்சியாக இருந்தாலும்.. இன்னும் சொல்லப்போனால் 1977- ஜூன் 15 ஆம் தேதி முதல்வர் உரைக்கு பதிலளித்து பேசிய எம்.ஜி.ஆர், மூன்று விஷயங்களிலும் திமுகவும் அதிமுகவும் இரட்டை குழல் துப்பாக்கி என்று சொல்லியிருக்கிறார்.
ராஜ்பவன் பெயரை லோக் பவன் என மாற்றுவேன் என்று ஆளுநர் சொல்லியிருக்கிறார். இதை விட பெரிய பைத்தியக்காரத்தனம் எது இருக்கிறது. ராஜ்பவன் என்பது முழுமையான ஆட்சி அதிகாரகம் பெற்ற மாநில ஆளுநர்கள் இருக்கும் இடத்திற்கு பெயர். ராஜ்நிவாஸ் என்பது யூனியன் பிரதேசத்தில் துண நிலை ஆளுநராக இருப்பவர்களின் இருப்பிடத்திற்கு பெயர். இதை எப்படி இவர் மாற்ற முடியும்.
ராஜ்பவன் மக்களுக்கான இடமாக இருக்க வேண்டும் என்றால் சென்னா ரெட்டி செய்தது போல எல்லா கதவுகளையும் திறந்து வைக்க வேண்டும். இரண்டு வருடம் சென்னா ரெட்டி திறந்து வைத்திருந்தார். உள்ளே பல வழிபாட்டு தலங்கள் உள்ளன. ராஜ்பவனின் கதவுகள் திறந்து வைக்கப்பட்டு இருந்தன" என்றார்.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இனி தங்கம் உங்க கையில விளையாடும்! தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு! 5 நாள் ட்ரெய்னிங் போதும்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications