செந்தில் பாலாஜி கைதாகிறாரா? தவெக கடிதத்திற்கு ஓகே சொன்ன ஆளுநர்! மறுபடியும் முதல்ல இருந்தா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான மோசடி வழக்கை தொடர்ந்து நடத்த அமலாக்கத் துறைக்கு ஆளுநர் (பொறுப்பு) ராஜேந்திர அர்லேகர் அனுமதி கொடுத்துள்ளார். இதனால் அவர் மீண்டும் கைது செய்யப்படுகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

கடந்த 2011 ஆம் ஆண்டு 2016 ஆம் ஆண்டு வரை, அதிமுக ஆட்சிக் காலத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. இவர் போக்குவரத்து துறையில் டிரைவர், கண்டக்டர் உள்ளிட்ட பணிகளை வாங்கித் தருவதாக கூறி பலரிடம் கோடிக்கணக்கில் பணம் பெற்றதாக புகார் எழுந்தது.

senthil balaji

அதன்படி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கடந்த 2015, 2017, 2018 ஆகிய காலகட்டத்தில் 4 மோசடி வழக்குகளை பதிவு செய்தனர். எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்குகளின் விசாரணை நடைபெறுகிறது.

இந்த வழக்குகளை ஆதாரமாக வைத்து செந்தில் பாலாஜி சட்டவிரோத பணவர்த்தனையில் ஈடுபட்டதாக அவரது வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத் துறை கடந்த 2023-ஆம் ஆண்டு ரெய்டு நடத்தியது. இந்த ரெய்டை தொடர்ந்து அவரை இரவோடு இரவாக கைது செய்தது.

இதையடுத்து பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியதை அடுத்து அமைச்சர் பதவியை செந்தில் பாலாஜி ராஜினாமா செய்தார். சுமார் 15 மாதங்கள் புழல் சிறையில் இருந்த அவர் உச்சநீதிமன்றத்தால் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இதை தொடர்ந்து இந்த வழக்கை தொடர்ந்த அமலாக்கத் துறை அரசிடம் அனுமதி பெற வேண்டிய கட்டாயம் இல்லை. ஆனால் அண்மையில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி குற்றச்சாட்டில் சிக்கியவர் பொது ஊழியர் என்றால் அவர் மீதான வழக்கை தொடர்ந்து நடத்த சம்பந்தப்பட்ட மாநில அரசிடம் அனுமதி பெற்றாக வேண்டும்.

அதன்படி செந்தில் பாலாஜி வழக்கை தொடர்ந்து நடத்தக் கோரி தமிழக அரசுக்கு அமலாக்கத் துறை கடிதம் அனுப்பியது. அவர் தற்போது திமுகவில் இருப்பதால் முந்தைய ஸ்டாலின் தலைமையிலான அரசு அதன் மீது முடிவெடுக்காமல் தாமதப்படுத்தியது.

தற்போது தவெக ஆட்சி அமைந்துள்ளதால் அமலாக்கத் துறை கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு, அது தொடர்பாக பொறுப்பு ஆளுநர் அர்லேகருக்கு கடிதம் அனுப்பியது. இதற்கு ஆளுநரும் ஒப்புதல் அளித்துள்ளார். இதனால் பரபரப்பு எழுந்துள்ளது. எனவே செந்தில் பாலாஜி கைது செய்யப்படுவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+