ஆளுநர் ஆர்.என்.ரவி - டிஜிபி சைலேந்திர பாபு திடீர் மீட்டிங்.. பறந்த முக்கிய உத்தரவு
சென்னை: தனது வாகன கான்வாய் செல்லும்போது, பொதுமக்கள் யாருக்கும் பாதிக்கப்படக் கூடாது என்றும் இதற்குத் தேவையான நடவடிக்கையை எடுக்குமாறும் டிஜிபி சைலேந்திர பாபுவிடம் ஆளுநர் கேட்டுக்கொண்டுள்ளார்.
பொதுவாக முதல்வர், ஆளுநர் போன்ற முக்கிய தலைவர்கள் வரும்போது, சாலையில் வாகனப் போக்குவரத்து நிறுத்தப்படும். பாதுகாப்பு காரணங்களுக்காக இதுபோல வாகனங்கள் நிறுத்தப்பட்டாலும் கூட, சில சமயங்களில் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது.

இதனால், சில சமயங்களில் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இந்நிலையில்,தனது வாகன கான்வாய் செல்லும்போது, பொதுமக்கள் யாருக்கும் பாதிக்கப்படக் கூடாது என்றும் இதற்குத் தேவையான நடவடிக்கையை எடுக்குமாறும் டிஜிபி சைலேந்திர பாபுவிடம் ஆளுநர் ஆர்.என்.ரவி கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், "நேற்றைத் தினம் (நவ. 6) சென்னை ஆளுநர் மாளிகையில் தமிழ்நாடு டிஜிபி சி.சைலேந்திர பாபுவை நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி,தனது வாகனப் பயணத்தின் போது பொதுமக்களுக்கு எவ்வித சிரமமும் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.

மேலும், ஆளுநரின் வாகனம் செல்லும்போது பொதுமக்களுக்கு எந்தவொரு இடையூறும் ஏற்படாத வகையில் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் டிஜிபி-யிடம் ஆளுநர் கேட்டுக் கொண்டுள்ளார்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக முதல்வரின் பாதுகாப்பு கான்வாய் 12 வாகனங்களில் இருந்து 6 வாகனங்களாகக் குறைக்கப்பட்டது. இந்தச் சூழலில் தான் ஆளுநரிடம் இருந்த இதுபோன்ற அறிவிப்பு வந்துள்ளது.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications