காந்தியின் சுதந்திர போராட்டம் பலனளிக்கவில்லையாம்.. நேதாஜிதான் தேச தந்தை! ஒரே போடாக போட்ட ஆளுநர் ரவி
சென்னை: கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் ஆளுநர் பங்கேற்றிருந்த ஆளுநர் ஆர்.என்.ரவி, “காந்தியின் சுதந்திர போராட்டம் பலன் தரவில்லை” என்று கூறியுள்ளார்.
நாடு முழுவதும் சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 127வது பிறந்த நாள் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னையில் கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றிருக்கிறார். ஆளுநர் பங்கேற்பதால் அனைத்து மாணவர்களும் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்று பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது.

மட்டுமல்லாது, நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களுக்கு மட்டுமே இன்றைய வருகைப்பதிவு செய்யப்படும் என்றும் கூறி சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருந்தது. இது பெரும் சர்ச்சையாக வெடித்தது. இது தொடர்பாக விளக்கமளித்த துணை வேந்தர், நிகழ்ச்சிக்கு எந்தெந்த மாணவர்கள் வந்தார்கள் என்பது குறித்து நாங்கள் எந்த பதிவும் செய்யவில்லை. எனவே பங்கேற்காத மாணவர்களுக்கு ஆப்சென்ட் போடப்படாது" என்று விளக்கமளித்தார்.
இந்நிலையில் மற்றொரு சர்ச்சை வெடித்திருக்கிறது. அதாவது, காந்தியின் சுதந்திர போராட்டம் பலனளிக்கவில்லை என்று ஆளுநர் ரவி கூறியுள்ளார். பல்கலைக்கழகத்தில் பேசிய அவர்,
இந்திய தேசிய ராணுவத்தின் கடற்படை மற்றும் விமானப்படையின் புரட்சியே இந்தியாவின் சுதந்திரத்திற்கு காரணம். கலாச்சார சின்னமாகவும், ஆன்மீக சின்னமாகவும் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்கள் விளங்குகிறார்கள். இந்திய சுதந்திர போராட்டத்தில் நேதாஜியின் இந்திய ராணுவ படையில் தான் தமிழர்கள் அதிகளவு நிறைந்திருந்தனர். வேலு நாச்சியார், வ.உ.சி போன்றவர்களை போல நேதாஜியின் தியாகம் போற்றப்பட வேண்டியவை.
சுதந்திரத்திற்காக போராடிய தமிழ்நாட்டு வீரர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. வேலு நாச்சியார், வ.உ.சி போன்றவர்களை போல நேதாஜியின் தியாகத்தையும் போற்ற வேண்டும். நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தின் பெண்கள் பிரிவு படையின் கட்டமைப்புக்கு பின் பல தலைமுறைகளுக்கு பிறகே இந்திய ராணுவத்தில் பெண்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நாட்டின் சுதந்திரத்தை பொறுத்த அளவில், இந்திய தேசிய காங்கிரஸின் ஒத்துழையாமை இயக்கம் ஆங்கிலேயரை இந்தியாவில் இருந்து வெளியேற்றுவதற்கான காரணமில்லை என இங்கிலாந்து முன்னாள் பிரதமர் அட்லீ பதிவு செய்துள்ளார். மகாத்மா காந்தியின் சுதந்திர போராட்டம் பலன் அளிக்கவில்லை. 1947ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் பெற்றதற்கு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தான் காரணம். நாட்டின் தேச தந்தை நேதாஜிதான்" என்று கூறியுள்ளார்.
ஏற்கெனவே ஆளுநர் பேசிய பல விஷயங்கள் தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த விவகாரமும் விவாதங்களை கிளப்பியிருக்கிறது.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications