ஆளுநர் மாளிகை எங்க குடும்பச் சொத்து.. பாபு நடத்திய போராட்டம்.. பரபரப்பான போலீஸ்!

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    ஆளுநர் மாளிகை எங்க குடும்பச் சொத்து.. பாபு நடத்திய போராட்டம்..

    சென்னை: ஆளுநர் மாளிகை தனக்கு சொந்தம் என்று பாபு என்பவர், உரிமை கொண்டாடியதால், பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் அவரை அழைத்து விசாரணை நடத்தியதில், கிறுகிறுத்துப் போயினர்.

    100 ஏக்கருக்கு மேலாக ஆளுநர் மாளிகை செயல்பட்டு வருகிறது. இவ்வளவு பரப்பளவு கொண்ட ஆளுநர் மாளிகையில் புல்வாய் வகை மான்கள், புள்ளி மான், வெள்ளை மான், கீரி, முள்ளம்பன்றி போன்ற விலங்குகள் உள்ளன. மத்திய கைலாஷ் முதல் அண்ணாசாலை வரை நீண்டு இருந்த ஆளுநர் மாளிகை, இந்திய விடுதலைக்கு பிறகு, கொஞ்சம், கொஞ்சமாக சுருங்கி உள்ளது.

    Governors House is My Family Property, a person conducted the dharna

    இந்தநிலையில், சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்த பாபு என்பவர், கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை எதிரே நின்று கொண்டு, அது தன்னுடைய குடும்பத்துக்கு சொந்தமானது என உரத்த குரலில் சத்தமிட்டுக் கொண்டு இருந்துள்ளார்.

    அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பாதுகாப்பு வீரர்கள் பலமுறை எடுத்துக் கூறியும், பாபு அங்கிருந்து செல்ல மறுத்துள்ளார். இதனை தொடர்ந்து பாதுகாப்பு வீரர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    இதனையடுத்து போலீசார் பாபுவை அழைத்து சென்று விசாரணை நடத்தியதில் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரியவந்தது. பின்னர் பாபுவை அரசு மனநல காப்பகத்தில் போலீசார் சேர்த்தனர். ஆளுநர் மாளிகை, தனது குடும்ப சொத்து என்று உரிமை கொண்டாடியதால், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+