ஆளுநர் உரையையே ஒழிக்க.. நாடாளுமன்றத்தில் சட்ட திருத்தம் கொண்டு வருவோம்.. ஸ்டாலின் ஆக்ரோஷம்
சென்னை: ‛‛முதலில் தமிழ்நாடு. அதன்பிறகு கேரளா. இப்போது கர்நாடகா. நான் முன்பே குறிப்பிட்டது போல, ஆண்டுதோறும் நடைபெறும் முதல் சட்டசபை கூட்டத்தொடரை ஆளுநர் உரையுடன் தொடங்கும் நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இந்தியா முழுவதும் ஒரே எண்ணம் கொண்ட எதிர்க்கட்சிகளுடன் கலந்தாலோசித்த இந்த முறையை ஒழிப்பதற்காக, அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தொடரிலேயே ஒரு அரசியலமைப்புத் திருத்தத்தைக் கொண்டுவர திமுக முயற்சிக்கும்'' என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் ஒவ்வொரு மாநிலத்திலும் அங்குள்ள ஆளுநர் உரையுடன் தொடங்கும். அந்த வகையில் கடந்த 20ம் தேதி தமிழகத்தில் சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கியது. 2
2026ம் ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் தமிழக ஆளுநர் ஆர்என் ரவி உரையாற்ற வந்தார். ஆனால் வழக்கம்போல் தமிழக சட்டசபை கூட்டத்தொடர் தமிழ்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. ஆளுநர் ஆர்என் ரவி தேசியக்கீதத்துடன் கூட்டத்தொடரை தொடங்க வலியுறுத்தி வரும் நிலையில் அது ஏற்கப்படவில்லை.

இதனால் ஆளுநர் ஆர்என் ரவி சட்டசபையில் உரை நிகழ்த்த மறுத்து வெளியேறினார். இதையடுத்து சபாநாயகர் அப்பாவு ஆளுநர் உரையை முழுவதுமாக வாசித்தார். இது சர்ச்சையை கிளப்பியது.
அதேபோல் அன்றைய தினம் கேரளாவிலும் சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கியது. ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் மத்திய அரசுக்கு எதிராக உள்ள வார்த்தைகளை படிக்காமல் விட்டார். மேலும் கூடுதலாக அவரே சில விஷயங்களை சேர்த்து படித்தார்.
அந்த வரிசையில் இன்று கர்நாடகாவில் சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கியது. கர்நாடகா ஆளுநர் தாவர்சந்த் கெலாட் மாநில அரசின் உரையை வாசித்தார். அவர் வெறும் 3 வரிகளை மட்டும் வாசித்துவிட்டு வெளியேறினார். இதுவும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழ்நாட்டில் திமுக ஆட்சி, கேரளாவில் இடதுசாரிகளின் ஆட்சி, கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி நடக்கும் நிலையில் ஆளுநர்களின் இந்த செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநருக்கும், ஆட்சியாளர்களுக்கும் இடையே மோதலாக வெடித்துள்ளது.
இந்நிலையில் தான் ஆளுநர்களின் இந்த செயல்பாட்டுக்கு முதல்வர் ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதோடு ஆளுநர் உரையையே ஒழிக்க திமுக சட்ட திருத்தம் கொண்டு வர முயற்சி எடுக்கும் என்று சூளுரைத்துள்ளார். இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
‛‛முதலில் தமிழ்நாடு. அதன்பிறகு கேரளா. இப்போது கர்நாடகா. இந்த முறை தெளிவாகவும் திட்டமிட்டபடியும் உள்ளது. மாநில அரசுகளால் தயாரிக்கப்பட்ட உரையைப் படிக்க ஆளுநர்கள் மறுத்து, கட்சி முகவர்களை போல நடந்துகொண்டு, முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை பலவீனப்படுத்துகின்றனர்.
நான் முன்பே குறிப்பிட்டது போல, ஆண்டுதோறும் நடைபெறும் முதல் சட்டசபை கூட்டத்தொடரை ஆளுநர் உரையுடன் தொடங்கும் நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைப்பதே இப்போது ஒரே தீர்வு. இந்தியா முழுவதும் உள்ள ஒத்த எண்ணம் கொண்ட எதிர்க்கட்சிகளுடன் திமுக கலந்தாலோசித்து. இந்த பொருத்தமற்ற நடைமுறையை ஒழிப்பதற்காக, அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரிலேயே ஒரு அரசியலமைப்புத் திருத்தத்தை கொண்டுவர முயற்சிக்கும்'' என்று ஆக்ரோஷமாக கூறியுள்ளார்.
-
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
காவி வண்ணத்தில் வள்ளுவர்., ஆளுநர் செய்தது அயோக்கியத்தனம்! வெடித்துக் கிளம்பிய வைகோ! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
திருவள்ளுவருக்கு மீண்டும் காவி உடை.. ஆளுநர் மாளிகை செய்ததை பாருங்க.. வெடித்த சர்ச்சை -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications