Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

புட்டுபுட்டு வைத்த ஆசிரியர்.. மாணவர்களுக்கு ஷாக்! தமிழ்நாடு அரசு பள்ளிகளில் தேசிய கல்விக்கொள்கையா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: அரசு பள்ளிகளில் உள்ள நிர்வாக குளறுபடிகள், கற்றல், தேர்வு முறையில் உள்ள பிரச்சனைகள் குறித்து விரிவாக விளக்கி இருக்கிறார் அரசு பள்ளி ஆசிரியரும் எழுத்தாளருமான உமா மகேஷ்வரி.

இதுகுறித்து முகநூலில் அவர் வெளியிட்டு இருக்கும் பதிவில், "தேசியக் கல்விக் கொள்கை 2020 ஐ நாங்கள் ஏற்க மாட்டோம். ஆனால் மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான பொதுத்தேர்வு மாடலில் முதல் வகுப்பிலிருந்தே அரையாண்டுத் தேர்வையே (அதாவது ஏழாம் வகுப்பு வரை அதற்குப் பெயர் இரண்டாம் பருவத் தேர்வு) நடத்துவோம் என்கிறது தமிழ்நாடு. அது கல்வித்துறையா அல்லது அரசா என்பது இதைப் படிக்கும் உங்களின் முடிவுக்கே விட்டு விடுகிறேன். தொடங்க உள்ள அரையாண்டுத் தேர்வும், தேர்வுக்கான கால அட்டவணையும் பேசு பொருளாக மாறியுள்ளன.

Govt school teacher complaint that New educational policy in TN govt schools

பொதுத்தேர்வு எழுதப் போகும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு உடற்கல்வி தேர்வு எதற்கு? இதை யார் முடிவு செய்கின்றனர் எனக் கோபப்படும் ஆசிரியர்கள் ஒரு புறம். போன டைம் டேபிளில் அதாவது வெள்ள பாதிப்புக்கு முன்பு வெளிவந்த தேர்வு கால அட்டவணை யில் எங்களுக்கு பி.டி ( PE.T) பரீட்சை இல்லை, ஆனால் புதிய டைம் டேபிளில் உடற்கல்வி ஏன் வைத்தார்கள் என்று கேட்கும் மாணவர்கள் ஒருபுறம். ஏற்கனவே முதல் ஐந்து வகுப்புகளுக்கு எண்ணும் எழுத்தும் திட்டம் வழியாக ஆன்லைன் தேர்வு தொடர்ச்சியாக நடந்து வந்தது‌.

ஆன்லைனில் இடைப்பருவத் தேர்வுகள் (Mid -Term) நடத்துவதில் மிகப் பெரிய சிக்கல்கள் இருந்தன என்றும் பெரும்பாலும் நாங்களே தான் அந்தத் தேர்வுகளையும் மாணவர் பெயரில் செய்ய முடிந்தது என்பதெல்லாம் ஆசிரியர்கள் வருத்தமுடன் பகிர்ந்து கொண்டவை.

தற்போது அவர்கள் சொல்வது, தமிழ்நாடு முழுமைக்கும் ஒரே மாதிரியான கேள்வித் தாள்கள் தான். அவர்கள் சொல்லும் நேரத்தில் கணினியிலிருந்து பதிவிறக்கம் செய்ய வேண்டும். நாளைக்குத் தேர்வு என்றால் இன்று மதியம் 2 மணிக்கு தான் வினாத்தாளைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

தமிழ்நாட்டின் எல்லாப் பள்ளிகளும் ஒரே நேரத்தில் பதிவிறக்கம் செய்தால் சர்வர் பிரச்சனை என்று வருகிறது என்கிறார்கள். அது மட்டுமல்ல, தொடக்க வகுப்புகளுக்கு அரும்பு, மொட்டு, மலர், வகுப்பு நிலைக்கு ஏற்ற வகை என்று 4 நிலைகளில் வினாத் தாள்கள் பதிவிறக்கம் செய்ய வேண்டும். ஒரு பக்கம், இரு பக்கம், மூன்று பக்கம், நான்கு பக்கம் மற்றும் ஐந்து பக்கங்களில் வினாத்தாள் என்பதெல்லாம் பயங்கரவாத செயல்கள். இது நல்லது என்று எடுத்துக் கொண்டாலும், இவற்றை இன்னும் நாங்கள் நடத்தவே இல்லை, இதுதான் உண்மை என்கின்றனர் ஆசிரியர்கள்.

நடத்தாத பாடப் பகுதிகளுக்கு தேர்வு என்பதெல்லாம் எத்தகைய வன்முறை என்று ஆசிரியர்கள் மீது நாம் உணர்ச்சி வசப்படக்கூட முடியாது. பாவம் ஒரு தலைமை ஆசிரியர் கூறும் போது, இன்று கூட மூன்றாம் பருவம் புத்தகங்களை எடுத்து வரச் சென்று விட்டோம்‌ . மதியம் வந்த உடன் தேர்வுக்காக கூகுள் மீட். பாடம் எங்கே நடத்தினோம் !? என்கிறார் ‌ . புயல் வெள்ளம் பாதிக்காத மாவட்டத்திலேயே இந்த நிலை என்றால் பாதிப்புக்கு உள்ளான இந்த நான்கு மாவட்டக் குழந்தைகளின் நிலை என்னவாக இருக்கும்?

அதோடு, இத்தனை வகையான கேள்வித் தாள்களை முதல் நாள் பதிவிறக்கினால் சர்வர் பிரச்சனை, ஒரே மாலைப் பொழுதிற்குள் எங்களால் அத்தனையும் பதிவிறக்கம் செய்ய இயலவில்லை, இரவு முழுவதும் இந்த வேலையை செய்வதா? தேர்வுக்கு எப்படித் தயாராவது? எனத் தலைமை ஆசிரியர்கள் கூகுள் மீட்டிங்கில் கேள்வி கேட்டால் சம்பந்தப்பட்ட கல்வி அலுவலர்கள் அதெல்லாம் எங்களுக்குத் தெரியாது. மேலே (Higher level officer) என்ன சொல்கிறாரோ அதைத் தான் நாங்கள் உங்களுக்கு சொல்கிறோம் என்கின்றனராம்.!?!

அதெல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும், இப்படி முதல் நாளே வினாத்தாளைப் பதிவிறக்கி வைக்கும் பள்ளிகளிலிருந்து வினாத்தாள் வெளியாகி விடாதா (Question paper OUT) என்று தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர் கேட்கிறார், நியாயமான கேள்விதானே. நமக்கும் அந்தக் கேள்வி இருந்தாலும், இந்த அளவுக்கு தமிழ்நாட்டில் குழந்தைகளுக்குத் தேர்வு வைப்பதன் நோக்கம் என்ன? கடந்த வாரம் முழுவதும் மழை வெள்ளம் விடுமுறை. அதற்கு முன்னர் learning outcome தேர்வு . அதற்கு முன்னர் இரண்டாம் இடைத்தேர்வு.

அதற்கு முன்னர் High-tech lab வினாடி வினாத் தேர்வு. அதற்கு முன்னர் காலாண்டுத் தேர்வு. இவை அனைத்தும் அடுத்தடுத்த வாரங்களில்... இடையில் ஆசிரியர்கள் பயிற்சி, பல வகையான போட்டிகள், கலைத்திருவிழா (பள்ளி அளவில், கல்வி மாவட்ட அளவு, மாவட்ட அளவு, மாநில அளவு) கொண்டாட்டங்கள். மன்ற செயல்பாடுகள், நூலகப் புத்தகங்கள் வாசிப்பு, தேன்சிட்டு, வாசிப்பு இயக்க செயல்பாடுகள், சிறுவர் திரைப்படங்கள், விளையாட்டுப் போட்டிகள் இப்படி தொடர்ச்சியாக, மாணவர்களைக் கற்றல் கற்பித்தலை விட்டு விலக்கி வைத்திருக்கின்றன அரசுப் பள்ளிகள்.

உண்மை என்னவென்றால் இந்த செயல்பாடுகளிலும் அத்தனை தூரம் குழந்தைகளை உருப்படியாக்கவில்லை. ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒருகால் என்பார்களே அதைப்போல. கற்றல் கற்பித்தல் என்ற நடைமுறையையே இல்லாமல் வெறும் தேர்வுகள் என்ற நடைமுறையை யார் கல்வித் துறையினருக்குப் பரிந்துரை செய்கின்றனரோ தெரியவில்லை. குழந்தைகளது உடல்நலம், மனநலம், பாடச்சுமை, புரியாத மொழி வழிக் கல்வி, கற்றல் குறைபாடுகள் என்று எதைப்பற்றியும் உண்மையான வெளிப்படையான உரையாடலே கிடையாது.

மத்திய அரசு கூட்டாட்சி தத்துவத்துக்கு ஊறு விளைவிக்கின்றது, மாநிலப் பட்டியலுக்கு கல்வி வர வேண்டும் என்று கூறும் பலர் , கல்வித்துறையில் நிகழும் இந்த அதிகார மையத்தின் போக்கைக் குறித்து சிந்திக்க மறுப்பது ஏன்? கல்வி தரும் அதிகாரம் மையப்படுத்தப்படுவதால் அடித்தட்டு மக்களின் குழந்தைகள் அல்லவா கல்வியை இழக்கின்றனர்.

முற்றிலும் தேசியக் கல்விக் கொள்கைக்கு ஆதரவான போக்கு நம் அரசுப் பள்ளிகளில் பின்பற்றப்படுவதை மாணவர் அமைப்புகள், கல்வி அமைப்புகள் , பல இயக்கத் தோழமைகள் கவனம் கொண்டு கற்றல் கற்பித்தலை மாணவர்களிடையே உறுதிப்படுத்த வேண்டும். அதற்கான முயற்சியில் இறங்கவில்லை என்றால் இன்றைய மாணவர்களின் எதிர்காலம் இருண்ட காலம் என்பதை அனைவரும் புரிந்து கொள்ளும் நாள்கள் வெகு தூரத்தில் இல்லை." என்று குறிப்பிட்டு உள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+