தொடக்க பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு மறுத்த விவகாரம்: சென்னை ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
சென்னை: 1995 ஆம் ஆண்டுக்கு பிறகு துவக்க பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்றவர்களுக்கு சிறப்பு நிலை ஊதிய உயர்வு வழங்க முடியாது என்றும், அதனை மறுப்பதற்கு அரசுக்கு அதிகாரம் உள்ளது எனவும் சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளது.
தமிழகம் முழுவதும் 1988 ஆம் ஆண்டுக்குப் பின் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு, சிறப்பு நிலை ஊதியம் வழங்கப்படும் என்று கடந்த 2011 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது.

இந்த அரசாணையின் படி தங்களுக்கும் சிறப்பு நிலை ஊதியம் வழங்க வேண்டும் எனக் கோரி 1995 ஆம் ஆண்டுக்கு பின் துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்று தற்போது ஓய்வு பெற்றவர்கள் அரசுக்கு கோரிக்கை மனு அளித்து இருந்தனர். இவர்களது கோரிக்கையை அரசு நிராகரித்து விட்டதால், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை நீதிபதிகள் டி. கிருஷ்ணகுமார், கே. குமரேஷ் பாபு ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்தது. இந்த விசாரணையின் போது, மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ''1988 ஆம் ஆண்டுக்குப் பின் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்றவர்களுக்கு வழங்கும் சலுகையை 1995 ஆம் ஆண்டு தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்றவர்களுக்கும் வழங்கவேண்டும்'' என்ற வாதத்தை முன்வைத்தார்.
தமிழ்நாடு அரசு தரப்பில் முன்வைத்த வாதத்தில், ''1988 ஆம் ஆண்டு முதல் 1995 ஆம் ஆண்டு வரை பதவி உயர்வு பெற்றவர்களுக்கு மட்டுமே இந்த அரசாணை பொருந்தும். எனவே, இந்த காலவரம்பு இல்லாமல், துவக்க பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பணப் பலன்கள் வழங்குவதாக இருந்தால், ஓய்வு பெற்ற துவக்க பள்ளி தலைமை ஆசிரியர்கள் 11 ஆயிரத்து 239 பேருக்கு ஓய்வூதியம் வழங்கும் போது, அரசுக்கு சுமார் 278 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும்" என்ற வாதம் முன்வைக்கப்பட்டது.
இந்த வழக்கில் அரசுத் தரப்பு வாதங்களை ஏற்றுக் கொண்ட உயர் நீதிமன்றம், ''1995 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்கு பின் துவக்க பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்றவர்களுக்கு சிறப்பு நிலை ஊதிய உயர்வு வழங்க முடியாது என்று மறுக்கவும், இதற்காக காலவரம்பை நிர்ணயிக்கவும் அரசுக்கு அதிகாரம் இருக்கிறது.
இந்த கால வரம்புக்கு பிறகு பதவி உயர்வு பெற்றவர்களுக்கு பணப்பலன்கள் பெற உரிமையில்லை. எனவே, 1995 ஆம் ஆண்டுக்கு பின் பதவி உயர்வு பெற்ற தலைமை ஆசிரியர்களுக்கு பணப்பலன்கள் வழங்க மறுத்த அரசு உத்தரவு செல்லும். எனவே இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது" என்று உத்தரவிட்டது.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications