கிராம நத்தம், புறம்போக்கு நிலங்களில் அரசின் தீர்வு..அதுவிடுங்க, திருவள்ளூரில் மனை பட்டா கிடைச்சிடுமா
சென்னை: கிராம நத்தம் அரசு புறம்போக்கு நிலங்களில் வீட்டுமனை பட்டா இல்லாமல் வசித்து வருவோர் மிக முக்கிய கோரிக்கையை திருவள்ளூர் மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து விடுத்துள்ளனர்.. ஆய்வு ஒன்றுக்காக கலெக்டர் வந்திருப்பதாக தகவல் அறிந்ததுமே பாதிக்கப்பட்ட கிராம மக்கள் நேரடியாகவே சென்று கலெக்டரை சந்தித்து தங்கள் புகார்களை கூறி உள்ளார்கள்.. இதுகுறித்து விரிவாக பார்ப்போம்,.
கிராம நத்தம் நிலம் என்பது என்ன? இந்த நத்தம் புறம்போக்கு நிலங்கள் யாருக்கு சொந்தம்? அரசு செய்து தந்துள்ள வசதிகளை பற்றி முதலில் சுருக்கமாக இங்கே தெரிந்து கொள்வோம்...

கிராம நத்தம் புறம்போக்கு நிலங்கள்
கிராமங்களில் குடியிருப்பு பகுதிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிலங்கள் 'கிராம நத்தம்' என வகைப்படுத்தப்படுகின்றன. இந்த நிலங்கள் அடிப்படையில் அரசு கட்டுப்பாட்டில் உள்ள புறம்போக்கு நிலங்களாக கருதப்பட்டாலும், பல ஆண்டுகளாக வீடு கட்டி தொடர்ந்து வசித்து வருபவர்களுக்கு உரிமை ஏற்படும் வகையில், வருவாய் துறை மூலம் நத்தம் பட்டாக்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
ஒருமுறை நத்தம் பட்டா வழங்கப்பட்டால், அந்த நிலம் அந்த நபரின் தனியார் சொத்தாகக் கருதப்படுகிறது... இதுவரை கிராம நத்தம் நிலங்களுக்கு பட்டாக்கள் பெரும்பாலும் கையேடு முறையிலேயே வழங்கப்பட்டு வந்தன.
இதனால், ஒரே சர்வே எண் நத்தம் நிலத்திற்கும், அதே நேரத்தில் வேறு ஒரு பட்டா நிலத்திற்கும் பயன்படுத்தப்பட்டதால், நில உரிமை தொடர்பான குழப்பங்கள் மற்றும் சட்ட சிக்கல்கள் ஏற்பட்டு வந்தன. குறிப்பாக நில வாங்கல்-விற்பனை, கட்டுமான அனுமதி போன்ற நேரங்களில் இந்த குழப்பம் பெரும் பிரச்சனையாக இருந்து வந்தது.
நத்தம் நில ஆவணங்கள்
இதற்கு தீர்வு காணும் வகையில், நத்தம் நில ஆவணங்களை ஆன்லைன் முறைக்கு மாற்ற வருவாய் துறை சமீபத்தில் நடவடிக்கை எடுத்தது.. இதன் ஒரு பகுதியாக, தேவையான இடங்களில் நத்தம் நிலங்களுக்கு புதிய சர்வே எண்களை ஒதுக்க வேண்டும் என உத்தரவிட்டது. இதன் மூலம், அனைத்து நிலங்களுக்கும் தனித்தனி சர்வே எண்கள் உறுதி செய்யப்பட்டு, நில ஆவணங்களை எளிதாகவும் தெளிவாகவும் நிர்வகிக்க முடியும்.
"தமிழ் நிலம்" என்ற ஒருங்கிணைந்த தகவல் தொகுப்பின் கீழ், பட்டா, சிட்டா உள்ளிட்ட அனைத்து நில ஆவணங்களும் தற்போது ஆன்லைனில் இணைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் தங்களது நத்தம் நிலம் உட்பட அனைத்து வகை நில ஆவணங்களையும் இணையதளத்தில் பார்வையிடவும், பதிவிறக்கம் செய்து கொள்ளவும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் அரசு அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டிய அவசியமில்லை.. வெளிப்படைத்தன்மையும் அதிகரிக்கும் என்பதே அதிகாரிகளின் நம்பிக்கையாகும்..
திருவள்ளூர் கலெக்டர் - வீட்டுமனை பட்டா
இப்படிப்பட்ட சூழலில்தான், திருவள்ளூர் மாவட்டம், நேமளூர் ஊராட்சியில் புதிய நில உரிமை சிக்கல் முளைத்துள்ளது. நேமளூர், என்.எஸ்.நகர், வில்லியர் காலனி, செக்கிலிப்பாளையம், சரஸ்வதி நகர் உள்ளிட்ட 12 கிராமங்களை சேர்ந்த 320 குடும்பங்கள், வீட்டுமனை பட்டா வழங்க கோரி கலெக்டரிடம் மனு அளித்தனர்.
இந்த ஊராட்சியைச் சேர்ந்த 308 குடும்பங்களுக்கு 2008ஆம் ஆண்டில் வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டிருந்தாலும், பெரும்பாலான ஆவணங்கள் ஆன்லைனில் பதிவாகாததால், இப்போது வரை பட்டா கிடைக்கவில்லை என்று கிராம மக்கள் குறைகின்றனர். மேலும், கிராம நத்தம் மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களில், ஏராளமானோர் வீட்டுமனை பட்டா இல்லாமல் வசித்து வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.
கிராம நத்தம் மற்றும் அரசு புறம்போக்கு நிலங்கள்
கிராம மக்கள், தமிழக அரசு நடத்திய சிறப்பு முகாம்களில் மனு அளித்தும் இதற்கான தீர்வு கிடைக்காததால், நேற்று கும்மிடிப்பூண்டியில் ஆய்வு பணிகளில் ஈடுபட்ட திருவள்ளூர் கலெக்டர் பிரதாப்பை நேரில் சந்தித்து, உடனே வீட்டுமனை பட்டா வழங்குமாறு கோரிக்கை விடுத்தனர்.
அவர்களின் கோரிக்கையை பரிசீலித்த கலெக்டரும், "உடனே ஆய்வு செய்து, தீர்வு காணப்படும்" என உறுதி தந்துள்ளார்.. இதன் மூலம், நீண்ட காலமாக நில உரிமை தொடர்பான குழப்பம் நீங்கும் என்று கிராம மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்...!!!
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications