கிராம நத்தம் பட்டா மாறுதல்.. இனி ஆன்லைனில் இந்த சான்றிதழை ஈஸியாக பெறலாம்! தமிழக அரசு சூப்பர் ஏற்பாடு
சென்னை: பட்டா உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்களை பெறுவதில் புதிய மாற்றம் வரப்போகிறதாம்.. இதுகுறித்து தமிழக அரசு நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
பொதுமக்களின் வசதிக்காக, தமிழக பத்திரப்பதிவு துறையானது, பல்வேறு வசதிகளையும், அறிவிப்புகளையும் செய்து வருகிறது... குறிப்பாக, தமிழகத்திலுள்ள அனைத்து சார்பதிவாளர் அலுவலகப் பணிகள் அனைத்தும் தற்போது ஆன்லைன்மயமாகிவிட்டது.

பதிவுத்துறை: இதனால், பத்திரப்பதிவு அலுவலகத்தில் பொதுமக்கள் நீண்டநேரம் காத்திருக்க தேவையில்லை. ஜஸ்ட் 15 நிமிடத்திற்குள்ளேயே பதிவு பணிகள் முடிவடைந்து செல்லும் வழியாக சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன..
பத்திரப்பதிவிற்கு வரும்போது, பொதுமக்கள் கையில் பணம் எடுத்துவரவும் தேவையில்லை.. புரோக்கர்களுக்கும் இதில் இடமில்லை. யாருக்கும் எந்த கமிஷன் பணமும் தர வேண்டிய அவசியமில்லை. லஞ்சம் தந்து சான்றிதழ்களை பெற வேண்டிய தேவையுமில்லை.
எதுவானாலும் ஆன்லைன் மூலமே செய்து கொள்ள முடியும்.. அந்தவகையில்தான், பட்டா மாறுதல், பட்டா பெயர் மாற்றம் போன்றவைகளும் ஆன்லைன் மூலமே நடந்து வருகின்றன..
வாரிசு சான்றிதழ்: இதைத்தவிர, வருவாய் துறை சார்பில், பல்வேறு சான்றிதழ்கள், குறிப்பாக, சாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், வருமான சான்றிதழ், வாரிசு சான்றிதழ் இப்படி பல வகையான சான்றிதழ்களும் ஆன்லைன் மூலமே பெற்றுக் கொள்ளலாம். எனினும், ஒருசில அதிகாரிகள், விண்ணப்பதாரரை நேரில் வரவழைத்து பணம் பெறுகிறார்களாம்.
அதாவது ஆன்லைனில் சான்றிதழுக்காக விண்ணப்பிக்கும்போது, சின்ன சின்ன தவறுகள் இருந்தாலும், நேரில் வரவழைத்து குறிப்பிட்ட தொகை பெற்றுக்கொண்டு, மறுபடியும் விண்ணப்பியுங்கள் என்று சொல்லி பொதுமக்களை அலைக்கழிக்கிறார்களாம்... சின்ன சின்ன விஷயங்களுக்குகூட, விண்ணப்பங்களை நிராகரித்து, நேரில் வரும்படி அதிகாரிகள் சொல்கிறார்களாம்.
புகார்கள்: வருவாய்த்துறையில் நிலவும் லஞ்ச புகாரை தடுப்பதற்காகவே, அரசு ஆன்லைன் வழி சான்றிதழ் பெற ஏற்பாடு செய்திருக்கிறது.. அப்படியிருந்தும், இதுபோன்ற புகார்கள் மீண்டும் அரசுக்கு சென்றுள்ளது. இதையடுத்து, இந்த புகார்களை உடனடியாக களையும் முயற்சியில் தமிழக அரசு இறங்கியிருக்கிறது.
அதன்படி ஆன்லைன் வாயிலாக சான்றிதழ் வழங்கும் செயல்பாடு குறித்து, கடந்த 22ம் தேதி, தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா ஆய்வு செய்துள்ளார்.. மேலும், சான்றிதழ்கள் முறையாக வழங்கப்படுகிறதா என ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும் என்பதற்காக, 14 சிறப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்களாம். இந்த சிறப்பு அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களில் ஆன்லைன் சான்றிதழ்கள் குறித்து ஆய்வுகளை மேற்கொள்வார்கள்.
அறிவுறுத்தல்: அதாவது, ஒவ்வொரு மாதமும், ஆன்லைன் வழியே எவ்வளவு சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன? பட்டா பெயர் மாற்றம் எத்தனை பேருக்கு வழங்கப்படுகிறது? என ஆன்லைன் சான்றிதழ்களின் நிலவரங்களை ஆய்வு செய்து, மாதம்தோறும் அரசுக்கு அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாம்.
அதேபோல, விண்ணப்பதாரரையும் செல்போன் மூலம் போனில் தொடர்பு கொண்டு, குறை உள்ளதா? புகார் உள்ளதா? என்றெல்லாம் விசாரிக்க வேண்டுமாம்.
சபாஷ் நடவடிக்கை: இந்த 14 சிறப்பு அலுவலர்கள் நியமனம் குறித்து, அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.. அதேசமயம், வருவாய்த்துறையில் நிலவும் குறைபாடுகளை களைய, தமிழக அரசு முன்னெடுத்துள்ளதாக கூறப்படும் இதுபோன்ற நடவடிக்கைகள் பொதுமக்களுக்கு மிகுந்த ஆறுதலையும், நம்பிக்கையையும், ஏற்படுத்தி வருகிறது..!!
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications