கிராம நத்தம் நிலம்.. சர்வே எண், மனைப்பிரிவு.. சார் பதிவாளர்களுக்கு தமிழக பத்திரப்பதிவு துறை உத்தரவு
சென்னை: நத்தம் நிலம், மனை விற்பனை தொடர்பாக பத்திரங்களை தாக்கல் செய்வது தொடர்பாக, சார் பதிவாளர்களுக்கு முக்கிய உத்தரவு ஒன்றினை பிறப்பித்திருக்கிறது தமிழக பதிவுத்துறை. அது என்ன?
பொதுமக்களின் வசதிக்காக பல்வேறு வசதிகளை தமிழக பதிவுத்துறை ஏற்படுத்தி தந்து வருகிறது.. சமீபத்தில்கூட, பொதுமக்களுக்காகவே, ஆன்லைன் பத்திரப்பதிவுக்கான, ஸ்டார் 2.0 சாப்ட்வேரில் உரிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கடந்த வாரம் இதுகுறித்து முக்கிய உத்தரவு ஒன்றினை பதிவுத்துறை ஐஜி வெளியிட்டிருந்தார்.

அதன்படி, "வங்கி மற்றும் நிதி நிறுவனங்களிடம் இருந்து பெறப்படும் ஆவண ஒப்படைப்பு, அடமானம், கடன் முடிந்த பிறகு மேற்கொள்ளப்படும் ரத்து மற்றும் ரசீது, பொது அதிகார ரத்து, குடும்ப நபர்களிடையே மேற்கொள்ளப்படும் பாகப்பிரிவினை பத்திரங்கள் தாக்கலாகும் போது, டி.ஐ.ஜி., அலுவலகத்தில் இருந்து ஒப்புதல் பெற வேண்டியதில்லை.
நத்தம் நிலம்: இது தொடர்பான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகின்றன. இவை தவிர, பிற ஆவணங்களுக்கு இந்த கட்டுப்பாடுகள் தொடரும். இதற்கான சுற்றறிக்கை அடிப்படையில், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில், இன்னொரு அறிவிப்பினை பதிவுத்துறை ஐஜி பிறப்பித்திருக்கிறார்.. அதன்படி, தனியார் பெயரில் உள்ள நத்தம் நிலம், மனை விற்பனை தொடர்பாக பத்திரங்களை தாக்கல் செய்வோரை பொதுமக்களை அலைக்கழிக்கக் கூடாது என்று பதிவுத்துறை ஐ.ஜி., தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவிட்டுள்ளார்.
வழிகாட்டி மதிப்பு: காரணம், தமிழகத்தில் ஒவ்வொரு கிராமத்திலும், குடியிருப்பு பயன்பாட்டுக்காக, நத்தம் நிலங்கள் உள்ளன. இந்த நிலங்கள், தனியார் அளவை செய்யப்பட்டு, சர்வே எண்கள் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், அனைத்து உரிமை ஆவணங்களும் இதற்காக வழங்கப்பட்டிருக்கின்றன. ஆனாலும், கிராம நத்தம் நிலங்களுக்கு மனை பட்டா வழங்கப்பட்ட பிறகு, அதுகுறித்து மறு நில அளவை செய்து, புதிய சர்வே எண்கள் ஒதுக்கப்பட்டு வருகின்றன.
இப்படி வழங்கப்படும் புதிய சர்வே எண்கள் அடிப்படையில், வழிகாட்டி மதிப்புகளை நிர்ணயித்து, அதை பதிவுத்துறை இணைய தளத்தில் பதிவேற்ற வேண்டும்... ஆனால், பல இடங்களில் வழிகாட்டி மதிப்பு குழப்பத்தை சுட்டிக்காட்டி, நத்தம் மனைகள் தொடர்பான பத்திரங்களை, சார் - பதிவாளர்கள் பதிய செய்ய மறுக்கிறார்களாம்.
வழிகாட்டுதல்கள்: இதுதொடர்பாக புகார்கள் கிளம்பிய நிலையில், பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் புதிய உத்தரவு பிறப்பித்திருக்கிறார். அத்துடன், வருவாய் துறை மற்றும் நீதிமன்ற உத்தரவுகள் அடிப்படையில், பதிவுத்துறை இதற்கான வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டுள்ளன. அவை இவைகள்தான்:
- புதிதாக மதிப்பு நிர்ணயம் செய்ய வேண்டிய தேவை எழுந்துள்ள, நத்தம் நிலங்களின் சர்வே எண் விபரங்களை, வருவாய் துறையிடம் இருந்து பெற வேண்டும்.
- மாவட்ட பதிவாளர்கள், வருவாய் துறையை அணுகி, உரிய விபரங்களை பெற்று, வழிகாட்டி மதிப்பு பதிவேட்டில் சேர்க்க வேண்டும்
இதன் அடிப்படையில், அனைத்து நத்தம் நிலங்கள், மனைகளுக்கு உரிய முறையில் மதிப்பு நிர்ணயிக்க வேண்டும். நத்தம் சர்வே எண்கள் உள்ள நிலங்கள் பெரும்பாலும் குறைந்த பரப்பளவு மனைகளாக தான் உள்ளன
- இந்த நிலங்கள் தொடர்பான பத்திரங்கள் பதிவுக்கு வரும் போது, மனைப்பிரிவு அங்கீகாரம் தொடர்பான கேள்விகள் எழுப்பி, மக்களை அலைக்கழிப்பதாக புகார் வருகிறது.
இந்த விஷயத்தில் ஏற்கனவே பதிவுத்துறை, 2020ல் வழங்கிய வழிகாட்டுதல்களை கடைப்பிடித்தால் போதும். இந்த தெளிவுரைகளை புரிந்து செயல்பட வேண்டும்
- நத்தம் நிலம், மனை தொடர்பான பத்திரங்கள் தாக்கல் செய்யப்படும் போது, அதை நிராகரிக்காமல், மக்களை அலைக்கழிக்காமல், சார் - பதிவாளர்கள் செயல்பட வேண்டும்.
- வேண்டுமென்றே தாமதம் செய்வது தெரிந்தால், சார் - பதிவாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து மண்டல டி.ஐ.ஜி.,க்கள், மாவட்ட பதிவாளர்கள் உரிய சோதனை செய்து, இதை உறுதிபடுத்த வேண்டும்" என்று பதிவுத்துறை ஐஜி தன்னுடைய உத்தரவில் தெரிவித்திருக்கிறார்.
ஆன்லைனிலேயே நத்தம் பட்டா மாறுதல் செய்ய வசதியை தமிழக முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் கொண்டு வந்திருந்தார்.. இதனால், கிராம நத்தம் மற்றும் நகரப்புற நத்தம் நிலத்தில் வசிக்கும் மக்களின் நீண்ட நாள்ஆசை நிறைவேறியிருப்பதுடன், அரசு வழங்கிய பட்டா அடிப்படையில், நில உரிமையை முழுமையாகப் பெற வாய்ப்பும் ஏற்பட்டிருக்கிறது. எனவே, பட்டா மாறுதல் செய்வது மட்டுமின்றி, உட்பிரிவு செய்வது உட்பட எல்லாவற்றையுமே ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications