முல்லை பெரியாறு அணை உடைவது போன்ற கிராபிக்ஸ் காட்சி! கேரளாவில் மீண்டும் சேட்டையை காட்டும் விஷமிகள்!
சென்னை: முல்லை பெரியாறு அணை பலவீனமாக உள்ளது போன்ற கிராபிக்ஸ் காட்சிகளை விஷம எண்ணம் கொண்ட சிலர் கேரளாவில் மீண்டும் பரப்ப ஆரம்பித்துள்ளனர்.
தமிழகமும் கேரளமும் நட்புறவுடன் திகழ்ந்து வரும் நிலையில் முல்லை பெரியாறு அணையை மையப்படுத்தி அரசியல் ஆடு புலி ஆட்டம் ஆட முயல்கிறார்கள் விஷம எண்ணம் கொண்ட சிலர்.

முல்லை பெரியாறு அணை பலவீனமாக இருக்கிறது என்று கேரளாவில் உள்ள விஷமிகள் சிலர் தொடர்ந்து கட்டுக்கதையை கட்டி வருகின்றனர். தெரிந்தோ தெரியாமலோ விஷமிகளின் பொய்கூச்சலை கருத்தில் ஏற்ற கேரள அரசு சில ஆண்டுகளுக்கு முன்னர் அனையின் நீர்மட்டத்தை குறைப்பது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது.
வழக்கின் முடிவில் மூன்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் கொண்ட அமர்வு, முல்லைப் பெரியாறு அணையில் முதலில் 142 அடி வரை தண்ணீரை உயர்த்திக் கொள்ளலாம் என்றும், அதன் பின்னர் 145 அடி உயர்த்தலாம் என்றும், பின்னர் பேபி அணையை வலுப்படுத்திய பிறகு 152 அடி வரை உயர்த்திக்கொள்ளலாம் என்றும் தீர்ப்பு கொடுத்தது.
இதனை எதிர்த்து கேரள அரசு உச்ச நீதிமன்றத்திற்குச் சென்றது. அணையின் வலிமையைச் சோதிப்பதற்காக உயர் நீதிமன்றம் ஏற்கெனவே ஒரு நிபுணர் குழு அமைத்திருந்தது. அந்தக் குழு அணை வலுவாக இருக்கிறது என்று அறிக்கை கொடுத்தது.
முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி வரை நீரை தேக்கி வைக்க உச்சநீதிமன்றம் வழங்கிய அனுமதியின் படியும், மத்திய நீர்வளக் குழுமம் ஒப்புதலுடன் மாதவாரியான அணையின் நீர்மட்ட அட்டவணைப்படியும் முல்லைப் பெரியாறு அணைக்கு வரும் நீர், தேக்கப்படும் நீர், மழைப் பொழிவு ஆகியவைகளை தொடர்ந்து தமிழக அரசின் நீர்வளத்துறை கண்காணித்து வருகிறது.
இந்தச் சூழலில் நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குவதால் திமுகவும், கம்யூனிஸ்டும் ஒரே கூட்டணியில் இருப்பதால் அதில் சிண்டுமுடிந்துவிடும் நோக்கில் முல்லை பெரியாறு அணை பலவீனமாக உள்ளது என்ற பழைய பல்லவியை பாட ஆரம்பித்துள்ளதோடு மீண்டும் முல்லை பெரியாறு அணை உடைவது போன்ற கிராபிக்ஸ் காட்சிகளை பரப்பும் பணியை தொடங்கியுள்ளது.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
Kerala: கேரளா காருண்யா லாட்டரி டிக்கெட்.. ரூ.1 கோடியை தட்டி தூக்கிய பாலக்காடு அதிர்ஷ்டசாலி! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications