எப்படித்தான் இப்படிலாம் யோசிக்கிறாங்களோ.. வேற லெவல்.. தமிழ்நாடு அரசு எடுத்த முடிவு.. என்னனு பாருங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு அரசின் உத்தரவின் பெயரில் அரசு கட்டுப்பாட்டில் இயங்கி வரும் இணையதள பக்கங்களில் முக்கியமான மாற்றம் ஒன்று செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது.

அதன்படி சென்னை கார்ப்பரேஷன் பக்கத்தில் முதல் கட்டமாக மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. அரசு உத்தரவின் படி ஆண், பெண், என்பதோடு தற்போது மூன்றாவது பாலினம் என்று குறிப்பிடப்படுவது நிறுத்தப்பட்டு உள்ளது.

Great idea from Tamil Nadu government regarding the welfare of the LGBTQ community

அதற்கு பதிலடி LGBTQ ++ என்ற அடையாளம் சேர்க்கப்பட்டு உள்ளது. அதாவது மற்ற பாலினத்தவர்கள் எல்லோரையும் குறிக்கும் விதமாக LGBTQ ++ என்ற அடையாளம் சேர்க்கப்பட்டு உள்ளது.

மாநாட்டில் இதே சம்பவம்: தமிழ்நாடு அரசின் இந்த முன்னெடுப்பு பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. சமீபத்தில் கூட சென்னையில் நடந்த தமிழ்நாடு உலக முதலீட்டாளர் மாநாட்டில் கோத்ரெஜ் நிறுவனம் தொடங்க இருக்கும் light house project நிறுவனத்துக்கான ஒப்பந்தம் முதல்வர் முன்னிலையில் கையொப்பம் ஆனது.

இந்த நிறுவனத்தின் மொத்த பணியாளர்களில் 5% பேர்கள் LGBTQ & Differently Abled ஆக இருக்க வேண்டும் என ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது. முதலீட்டாளர் மாநாட்டில் கோத்ரெஜ் நிறுவனம் தொடங்க இருக்கும் light house project (Global FMCG) நிறுவனத்துக்கான ஒப்பந்தம் முதல்வர் முன்னிலையில் கையொப்பம் ஆனது. இந்த நிறுவனத்தின் மொத்த பணியாளர்களில் 5% பேர்கள் LGBTQ & Differently Abled ஆக இருக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு நிபந்தனை இட்டுள்ளது. இவ்வகையான நிபந்தனை உலகிலேயே முதன்முறை என தொழிற்துறையினர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

அதாவது கோத்ரெஜ் நிறுவனத்தின் சிந்த்தால் சோப் ஆலையில் 5% மாற்றுப் பாலினத்தாருக்கு வேலை அளிக்கப்படும் என்று ஒப்பந்தத்தில் கூறியுள்ளது. செங்கல்பட்டில் சிந்த்தால் சோப் உற்பத்தி ஆலையை கோத்ரெஜ் தொடங்க உள்ளது; செங்கல்பட்டு ஆலையில் 50% பெண்கள், 5% மாற்றுப் பாலின பணியாளர்கள் இருப்பார்கள். சுதேசி இயக்கத்தின் வெளிப்பாடாக தோன்றியது கோத்ரேஜ் நிறுவனம்; இந்தியாவின் பிரீமியம் சோப் விற்பனையில் தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறது கோத்ரெஜ் நிறுவனத்தின் தலைவர் நிஷாபா முதலீட்டாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார்.

மாநாடு: சமீபத்தில் சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் பல்வேறு முதலீடுகள் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகின. அதில், ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் காஞ்சிபுரத்தில் தொழிற்சாலை அமைக்க ₹6,180 கோடிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து செய்யப்பட்டு உள்ளது.

தூத்துக்குடி, திருநெல்வேலியில் JSW நிறுவனம் ₹12,000 கோடிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து செய்யப்பட்டு உள்ளது. ஓசூரில் உள்ள ஐபோன் உதிரி பாக ஆலையில் விரிவாக்கம் செய்ய டாடா நிறுவனம் ரூ.12,800 கோடி முதலீடு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. . கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ₹12,082 கோடி மதிப்பில் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் மொபைல் உதிரி பாகங்கள் தயாரிப்பு தொழிற்சாலை நிறுவ உள்ளது

தூத்துக்குடியில் ₹16,000 கோடி முதலீட்டில் மின்சார வாகனம் மற்றும் பேட்டரி உற்பத்தி ஆலையை அமைக்க, வியட்நாமைச் சேர்ந்த VinFast நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் மூலம் 3,500 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு. இந்த ஆண்டிலேயே உற்பத்தி ஆலையின் கட்டுமான பணிகள் தொடங்கப்பட உள்ளன

அமெரிக்காவின் First Solar நிறுவனம் - ₹5600 கோடி முதலீடு செய்ய உள்ளது. சென்னையில் பெகட்ரான் - ₹1000 கோடி முதலீடு (8000 பேருக்கு வேலைவாய்ப்பு) செய்ய உள்ளது. சென்னையில் மிட்சுபிசி எலக்ட்ரானிக்ஸ் - ₹200 கோடி முதலீடு செய்ய உள்ளது.

தமிழ்நாட்டில் டிவிஎஸ் நிறுவனம் கூடுதலாக ரூ.5,000 கோடி முதலீடு செய்ய உள்ளது. தமிழ்நாட்டில் ஹூண்டாய் நிறுவனம் கூடுதலாக ரூ.6,000 கோடி முதலீடு செய்ய உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+