தமிழ்நாட்டில் நகராட்சிகளாக மாறப்போகும் 10 பேரூராட்சிகள்.. வெளியாக போகும் சூப்பர் அறிவிப்பு
சென்னை: தமிழ்நாட்டில் வளர்ந்து வரும் பேரூராட்சிகள், நகராட்சிகளாக தரம் உயர்த்தப்படுகிறது. அதன்படி மாமல்லபுரம், ஸ்ரீபெரும்புதூர், அவிநாசி, கோத்தகிரி, ஆலங்குளம் உள்ளிட்ட 10 பேரூராட்சிகள் விரைவில் நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. வரும், 30-ம் தேதி சட்டப்பேரவையில் இதுகுறித்து அறிவிக்கப்படவுள்ளதாகவும் அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.
தமிழகத்தில், மாநகராட்சிக்கு அடுத்த நிலையில் அதிகமான மக்கள் தொகையுடன் உள்ள நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் பரப்பளவு மற்றும் ஆண்டு வருமானத்தின் அடிப்படையில், முறையே மாநகராட்சி, நகராட்சியாக தரம் உயர்த்தப்படுகிறது.
நகராட்சி மற்றும் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டால், மத்திய, மாநில அரசுகள் அறிவிக்கும் திட்டங்களின் கீழ், சாலைகள், குடிநீர் திட்டம், பாதாள சாக்கடை, மழைநீர் கால்வாய், திடக்கழிவு மேலாண் மற்றும் இதர கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த முடியும்.

மாநகராட்சிகள்
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகள் தற்போது நகரமயமாகி வருகிறது. நாளுக்கு நாள் வளர்ச்சியடையும் உள்ளாட்சிகளை பேரூராட்சிகளாகவும், பேரூராட்சிகளை நகராட்சிகளாகவும், நகராட்சிகளை மாநகராட்சிகளாகவும் நிலை உயர்த்தப்படுகின்றன.

நகர வளர்ச்சி
அப்படி அமைக்கப்படும் புதிய உள்ளாட்சி அமைப்புகளின் மக்கள்தொகை, நகர வளர்ச்சி, அதன் உட்கட்டமைப்பு வசதி களுக்கேற்ப, மாநிலங் களுக்கு, மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்கின்றன. கடந்த ஆண்டு பல நகராட்சிகள், மாநகராட்சிகளாகவும், 29 பேரூராட்சிகள், நகராட்சிகளாகவும் தரம் உயர்த்தப் பட்டன.

அவிநாசி ஸ்ரீபெரும்புதூர்
இந்நிலையில் தமிழ்நாட்டின் 10 பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட உள்ளன. அதன் விவரத்தை இப்போது பார்ப்போம். சேலம் மாவட்டத்தில் வாழப்பாடி, ஈரோடு - பெருந்துறை, திருப்பூர் - அவிநாசி, உதகை- கோத்தகிரி, நெல்லை மாவட்டத்தில் வடக்கு வள்ளியூர், சங்கர் நகர், நாராணம்மாள்புரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூர், தென்காசி - ஆலங்குளம் என 10 பேரூராட்சிகள், நகராட்சிகளாக தரம் உயர்த்தப்படலாம் என்று தகவல்கள் வொளியாகி உள்ளது.

எப்போது அறிவிப்பு
இந்த 10 பேரூராட்சிகளையும் நகராட்சியாக தரம் உயர்த்துவதற்கான சாத்தியக்கூறு விவரங்களை நகராட்சி நிர்வாக ஆணையரகம், பேரூராட்சி அதிகாரிகளிடம் கேட்டிருக்கிறது. வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில், 30-ம் தேதி மானிய கோரிக்கையின்போது பேரூராட்சிகள் நகராட்சிகளாக மாற்றும் அறிவிப்புகள் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பேரூராட்சிகள்
இதனிடையே பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்துவதற்கு எதிர்ப்பும் எழுந்துள்ளது. பேரூராட்சி செயல் அலுவலர்கள் இது பற்றி கூறும் போது, தரம் உயர்த்துவதால் பேரூராட்சி நிர்வாக துறை பாதிக்கப்படுகிறது. இதனை சரிசெய்ய வளர்ந்த ஊராட்சிகளை, பேரூராட்சியாக மாற்றி அமைக்கலாம் என யோசனை தெரிவித்தனர்.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications