சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கருணாநிதி வீட்டு வாசலில்.. "இசையும், செல்வியும்".. அப்படியே பார்த்த தயாளு.. உருகிய உள்ளம்.. என்னாச்சு

கோபாலபுரத்தில் தயாளு அம்மாள் உடல்நலம் விசாரித்தார் பாஜகவின் தமிழிசை சவுந்தராஜன்

Google Oneindia Tamil News

சென்னை: கருணாநிதி வீட்டு வாசலில் தமிழிசை வந்ததுமே, ஓடோடி சென்று, அவரது கையை அழுத்தமாக பிடித்துக் கொண்டுள்ளார் கருணாநிதி மகள் செல்வி..!

Recommended Video

    சீமான், ஸ்டாலின் : கொள்கை வேற ; கார் ஒண்ணுதான் *politics

    பாஜகவின் தமிழிசை சவுந்தராஜனுக்கும், திமுகவின் கருணாநிதி குடும்பத்துக்கும் நீண்ட நெடிய சிநேகம் ஒன்று பயணித்து கொண்டே வருகிறது.

    அந்த சிநேகம் இன்றுவரை தொடர்ந்தும் வருகிறது.. 1961- ம் ஆண்டு நாகர்கோவிலில், ஒரு பாரம்பரிய காங்கிரஸ் குடும்பத்தில் பிறந்தவர் தமிழிசை...

    1957க்கு முன்பே கார், வீடு வைத்திருந்த தலைவர் கருணாநிதி.. நெகிழ்ச்சியுடன் பேசிய கரு.பழனியப்பன்!1957க்கு முன்பே கார், வீடு வைத்திருந்த தலைவர் கருணாநிதி.. நெகிழ்ச்சியுடன் பேசிய கரு.பழனியப்பன்!

    குமரியார்

    குமரியார்

    முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவரும், அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான குமரி அனந்தனின் மகளும் ஆவார்.. தமிழிசையின் அப்பா குமரி அனந்தன், பாரம்பரிய காங்கிரஸ்காரர் என்ற போதிலும், யாரும் எதிர்பாராமல் தனது விருப்பத்திற்கேற்ப பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டார் தமிழிசை.. இதனால் அப்பாவின் கோபத்துக்கு பலகாலம் இவர் ஆளானார் என்பதும், நீண்ட வருடங்களாகவே தமிழிசையுடன் அவர் அப்பா பேசாமல் இருந்தார் என்பதும் வேறுவிஷயம்..

     குமரியார் மகள்

    குமரியார் மகள்

    ஆனால், 1980களில் நடந்த தமிழிசையின் திருமணத்தில் கட்சி வேறுபாடுகளை கடந்து முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், கருணாநிதி ஆகிய இருவருமே கலந்து கொண்டனர்.. எத்தனையோ முறை தன்னுடைய திருமணத்தை நடத்தி வைத்ததே கருணாநிதிதான் என்று பலமுறை நெகிழ்ந்து கூறியுள்ளார் தமிழிசை.. "குமரியார் மகள் என் மகள் போல" என்று கருணாநிதி வாழ்த்தியதும் இங்கு நினைவுகூரத்தக்கது. பாஜகவில் தீவிரமாக இருந்தபோதிலும், "குமரியார் மகள் எப்போதும் அரசியல் நாகரீகம் தவறாதவர்" என்று மேடையிலேயே தமிழிசையை கருணாநிதி புகழ்ந்ததும் உண்டு.. காரணம், குமரியாரின் வளர்ப்பு அப்படி.

    கோபாலபுரம்

    கோபாலபுரம்

    அதேபோல தமிழிசை மகனின் திருமணத்திலும் கருணாநிதி மிகுந்த மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டார்.. இப்படி அரசியலில் வெவ்வேறு துருவங்களாக இருந்தபோதிலும், விமர்சனங்களை தாண்டி, இரு குடும்பமும் நட்புடன் பயணித்து வருகிறது என்பதையும் மறுக்க முடியாது. கருணாநிதிக்கு ஒருமுறை உடம்பு சரியில்லாமல் போனபோது, காரை எடுத்துக் கொண்டு கோபாலபுரம் ஓடினார் தமிழிசை.. பிறகு செய்தியாளர்களிடம் பேசும்போது, எனது திருமணத்தை நடத்தி வைத்தவர் கருணாநிதி' என்று நெகிழ்ச்சியாக பலமுறை தமிழிசை குறிப்பிட்டுள்ளார்.

     கனத்த நம்பிக்கை

    கனத்த நம்பிக்கை

    "திமுக தலைவர் கருணாநிதி கூடிய சீக்கிரம் குணமடைந்து வருவார்... என்னுடைய கல்யாணத்தையும், என்னுடைய மகன் கல்யாணத்தையும் திருமணத்தையும் நடத்தி வைத்தவர் அவர் தான்... இனி வரும் காலங்களில் என்னுடைய வீட்டில் நடக்கும் திருமணங்களை அவர் தான் நடத்தி வைக்கணும்... அதனால், அவர் சீக்கிரமாக குணமடைந்து வரவேண்டும், வருவார்" என்று கனத்த நம்பிக்கையுடன் அன்று சொல்லிவிட்டு சென்றார் தமிழிசை..

     தயாளு அம்மாள்

    தயாளு அம்மாள்

    இன்று தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றபோதிலும்கூட, "சகோதரர்" என்ற உரிமையுடனும், பாசத்துடனும் அழைத்து, தன் தரப்பு கோரிக்கையை விடுவது தமிழிசையின் குணாம்சம். இன்றைய தினம் ஒரு போட்டோ வைரலாகி கொண்டிருக்கிறது.. நேற்றைய தினம், கோபாலபுரம் வீட்டுக்கு தமிழிசை சென்றுள்ளார்.. உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள தயாளு அம்மாளை சந்தித்து நலன் விசாரித்துள்ளார்.. இதைப்பற்றி ட்வீட் ஒன்றையும் பதிவிட்டுள்ளார் தமிழிசை.

     ஷேர் போட்டோ

    ஷேர் போட்டோ

    அந்த ட்வீட்டில் சில போட்டோக்களை ஷேர் செய்துள்ளார்.. அதில் உள்ள ஒரு போட்டோதான், திமுக - பாஜகவினரிடையே மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது. தமிழிசை, கருணாநிதி வீட்டு வாசலுக்கு வரும்போதே, ஓடோடி சென்று அவரை கட்டிப்பிடித்து கொள்கிறார், கருணாநிதி மகள் செல்வி.. தமிழிசையும், செல்வியும் இருவரும் கைகளை கோர்த்துக் கொண்டு ஒருவரையொருவர் நலன் விசாரித்து கொள்வதை, அங்கிருந்தோர் வியப்புடன் பார்த்து நிற்கின்றனர்..

    விஜயகாந்த்

    விஜயகாந்த்

    இன்னொரு போட்டோவில், தயாளு அம்மாளின் தோளின் மீது கைபோட்டு, அவரது உடல்நலனை அக்கறையுடன் தமிழிசை விசாரிக்கிறார்.. தயாளு அம்மாள் தோளின் மீது தமிழிசை கைபோட, தமிழிசை மீது செல்வி கைபோட்டுக் கொண்டு நெருக்கமாக நிற்கும் அந்த போட்டோ காண்போரை திகைத்து வைத்து கொண்டிருக்கிறது.. அரசியல் கட்சி தலைவர்கள் குடும்பம் என்பதால், சின்ன வயதில் இருந்தே செல்விக்கும், தமிழிசைக்கும் இணக்கம், இழையோடி வருவதையும் காண முடிகிறது.. அரசியலையும் தாண்டி, அன்பை பொழிவது நம் தமிழ்நாட்டு தலைவர்கள்தான் என்பதை மறுக்க முடியாது.. நம்ம தமிழிசையை போல.. நம்ம விஜயகாந்த்தை போல..!

    English summary
    Great Relationship between Karunanidhi and Tamilisai soundarajans family கோபாலபுரத்தில் தயாளு அம்மாள் உடல்நலம் விசாரித்தார் தமிழிசை சவுந்தராஜன்
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X