மா.சுப்பிரமணியன் எங்க ஓடி முடிச்சாலும், இங்க ஓடிக்கிட்டே தான் இருக்கணும்.. உதயநிதி ஸ்டாலின் கிண்டல்!
சென்னை : அமைச்சர் மா.சுப்பிரமணியன் குறித்துப் பேசிய உதயநிதி ஸ்டாலின், அனைத்து நாடுகளிலும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஓடி விட்டாலும் அவரது சொந்த தொகுதியான சைதாப்பேட்டையில் ஓடிக்கொண்டே தான் இருக்க வேண்டும் என கிண்டலாகக் கூறினார்.
சென்னை கோடம்பாக்கத்தில் 1.6 கோடி ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்ட கோதண்டராமன் கோவில் குளம் திறப்பு விழாவில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலிn, மா.சுப்ரமணியன், சென்னை மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்வில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, "திமுகவில் இளைஞர் அணி செயலாளராக நான் பதவியேற்ற பின் இளைஞர் அணியின் முதல் பணியாக தமிழ்நாடு முழுவதும் நீர்நிலைகளை மீட்கும் பணிகளை மேற்கொண்டோம். திமுக இளைஞரணி சார்பில் 1,000 குளங்களை சீர்செய்துள்ளோம். பொதுமக்கள் நீர் நிலைகளை பாதுக்காப்பதை இயக்கமாக முன்னெடுத்து அரசிற்கு தோளோடு தோள் கொடுக்க வேண்டும்" என்றார்.

மேலும், அமைச்சர் மா.சுப்பிரமணியன் குறித்துப் பேசிய உதயநிதி ஸ்டாலின், அனைத்து நாடுகளிலும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஓடி விட்டாலும் அவரது சொந்த தொகுதியான சைதாப்பேட்டையில் ஓடிக்கொண்டே தான் இருக்க வேண்டும்" என கிண்டலாகக் கூறினார்.
இந்த நிகழ்வில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் கொரோனா பரவலால் உலகம் முழுவதும் மூன்று ஆண்டுகளாக கடைபபிடிக்கப்பட்டு வந்த பொதுச் சுகாதார அவசரநிலை பிரகடனம் விலக்கி கொள்ளப்படுவதாக உலக பொது சுகாதாரத்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார். அதனால் இனி அச்சம் அவசியம் இல்லை என்றாலும் கூட்டம் கூடும்போது முகக்கவசம் அணிவது தனிமனித பாதுகாப்பை கடைப்பிடித்தல் முக்கியமானது என்றார்.
-
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான்












Click it and Unblock the Notifications