சைலன்ட் ஆபரேஷன்.. ஸ்டாலினின் கனவு திட்டம்.. வேலையை காட்டியவர்கள் மீது.. பட்டென பாய்ந்த ஆக்சன்!
இந்த திட்டம் இவ்வளவு சிறப்பாக பயன் அளித்தும் கூட இதை சிலர் தவறாக பயன்படுத்த முயன்று இருக்கின்றனர்.
சென்னை: முதல்வர் ஸ்டாலினின் கனவு திட்டமான சென்னை வெள்ள நீர் வடிகால் வாரிய திட்டத்தை தவறாக பயன்படுத்த முயன்ற சிலர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
கடந்த நவம்பர் - டிசம்பர் மழையின் போது சென்னை மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பெரிதாக தண்ணீர் தேங்கவில்லை. சென்னை சிட்டிக்கு உள்ளே வளசரவாக்கம், கத்திப்பாரா உள்ளிட்ட சில இடங்களில் மட்டுமே தண்ணீர் தேங்கியது.
தண்ணீர் தேங்கும் இடங்களிலும் வேகமாக தண்ணீர் வடிந்து உள்ளது. அதன்படி பொதுவாக மழை பெய்தால் 2 - 3 மணி நேரம் தண்ணீர் தேங்கும் சாலைகளில் உடனே மழை நீர் வடிந்துவிட்டது. தி நகர், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், அண்ணாசாலையை சுற்றி உள்ள பகுதிகளில் தண்ணீர் நினைத்ததை விட வேகமாக வடிந்துவிட்டது என்று மக்கள் தெரிவித்து உள்ளனர். பொதுவாக தண்ணீர் அதிக நேரம் தேங்கி இருக்கும்.

கனவு திட்டம்
சென்னையில் எப்போதும் மழை பெய்தால் வெள்ளம் ஏற்படுவது வழக்கம். ஆனால் இந்த முறை வெள்ளம் ஏற்படுவதை தவிர்க்க சென்னையில் வெள்ள நீர் வெளியேற்ற குழாய்கள் அமைக்கப்பட்டு உள்ளன. தற்போது பலன் அளிக்க தொடங்கி உள்ளது. பெரிய அளவில் அமைக்கப்பட்டு இருக்கும் இந்த குழிகளில் நீர் வெளியேறுவதற்கான கால்வாய் போன்ற வசதியை ஏற்படுத்தி உள்ளனர்.முதல்வர் ஸ்டாலினின் உத்தரவின் பெயரில் இந்த வெள்ள நீர் வடிகால் அமைப்பு சென்னை முழுக்க 90% நிறைவேற்றப்பட்டு உள்ளது.

கழிவு நீர்
கடந்த மழையின் போது இந்த திட்டம் இவ்வளவு சிறப்பாக பயன் அளித்தும் கூட இதை சிலர் தவறாக பயன்படுத்த முயன்று இருக்கின்றனர். அதாவது இந்த மழைநீர் குழாய்களில் கழிவு நீரை வெளியேற்ற முயன்று உள்ளனர். மழை நீர் குழாய்களில் நைசாக கழிவு நீர் செல்லும் குழாய்களை மாட்டி வீடு, அலுவலகங்களில் இருக்கும் கழிவு நீர்களை வெளியேற்றி உள்ளனர். ஒரு இடம், இரண்டு இடம் என்று இல்லை. மொத்தம் 1470 இடங்களில் இப்படி செய்துள்ளனர்.

சென்னை மாநகராட்சி
சென்னை மாநகராட்சி இந்த கழிவு நீர் குழாய்களை அமைத்ததோடு மட்டுமின்றி அதை பராமரித்தும் வருகிறது. சைலண்ட்டாக குழாய்களில் சோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன. மாதம் 2 -3 முறை குழாய்களை சோதனை செய்தும் வருகிறது. குழாய்களில் அடைப்பு ஏற்பட்டால் மழை காலங்களில் அதில் தண்ணீர் செல்வது சிக்கல் ஆகும். அதனால் குழாயில் கழிவு நீர் கலக்கிறதா என்று மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்தும் வருகின்றனர். மழை நீர் குழாயில் கழிவு நீர் கலந்தால் அந்த பகுதியும் சாக்கடை ஆகும். எனவே இதில் அடைப்பு ஏற்படும். அதோடு சாக்கடை கலந்தால் இந்த நீரை ஏரிகளுக்கு அனுப்ப முடியாது.

ஆய்வு நடவடிக்கை
அந்த வகையில் அவர்கள் நடத்திய ஆய்வில்தான் இந்த மழை நீர் குழாய்களில் கழிவு நீர் கலக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 1470 இடங்களில் கழிவு நீர் குழாய்களை கலந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இந்த குழாய்களும் துண்டிக்கப்பட்டு மழை நீர் வடிகால் அமைப்பு சுத்தம் செய்யப்பட்டு உள்ளது. இவர்கள் மீது 5.10 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications