Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னையில் இரவில் நடக்கும் தரமான சம்பவம்.. வாகன ஓட்டிகளுக்கு பெரிய நிம்மதி! மாஸ் காட்டும் மாநகராட்சி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் பழுதடைந்த சாலைகளை மறு சீரமைக்கும் பணிகளை முழு வீச்சில் மாநகராட்சி மேற்கொண்டுள்ளது. வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் இரவில் இந்த பணிகளை பணியாளர்கள் மேற்கொண்டுள்ளனர். சாலைகள் மட்டும் இன்றி நடைபாதை சேதம் அடைந்து இருந்தாலும் அதையும் சீர் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. சென்னையில் பழுதடைந்த சாலைகளை சீரமைக்கும் பணிகள் முழு வீச்சில் நடப்பதால வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னையில் வாகன போக்குவரத்து நெரிசல் என்பது எப்போதும் அதிகமாக காணப்படும். சென்னை முழுக்கவே எங்கு பார்த்தாலும் பகல் நேரங்களில் வாகனங்கள் அணி வகுத்து செல்லும். அதிலும் பீக் நேரங்களில் சொல்லவே தேவையில்லை. சாலைகளில் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை வாகனங்கள் வரிசையாக சீறி செல்வதை பார்க்கலாம்.

chennai corporation roads

இப்படி எந்த பக்கம் பார்த்தாலும் பிசியாக காணப்படும் சென்னை சாலைகளில் சில இடங்களில் குண்டு குழியுமாக சேதம் அடைந்து கூட காணப்படுகிறது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்திக்க வேண்டியுள்ளது. சாலைகளில் சில இடங்களில் காணப்படும் திடீர் பள்ளத்தில் வாகன ஓட்டிகள் கவனிக்காமல் ஏற்றி இறக்கி செல்வதையும் பார்க்க முடியும். இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் சிலர் இந்த பள்ளங்களில் தவறி விழுந்து அடிபட்டுக்கொள்வதையும் பார்க்க முடிகிறது.

இத்தகைய சூழலில் தான் சென்னையில் சேதம் அடைந்த சாலைகளை சீர் செய்யும் பணிகளை சென்னை மாநகராட்சி முழு வீச்சில் மேற்கொண்டுள்ளது. சாலைகளை செப்பனிடும் பணிகளால் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படக் கூடாது என்பதால் பகல் நேரத்தில் இல்லாமல் இரவில் இந்த பணிகளில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். சாலைகள் மட்டும் நடைபாதைகள் சேதம் அடைந்து இருந்தாலும் அதையும் சீர் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

வீடியோவை வெளியிட்ட சென்னை மாநகராட்சி

இது தொடர்பான தகவலை வீடியோவாக பகிர்ந்துள்ள சென்னை மாநகராட்சி தரப்பில் கூறும் போது, சென்னை மாவட்டத்தில் உள்ள பழுதடைந்த சாலைகளை சீர் செய்யும் நோக்கத்தொடு நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சென்னை பெருநகர மாநகராட்சி நடவடிக்கையை எடுத்து வருகிறது. அதன்படி மோசமாக சேதம் அடைந்த சாலைகளில் அடிப்பகுதிகளில் சீர் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

நடைபாதை அடையாளங்களை சரி செய்வது, சாலைகளில் வேகத்தடை போடுவது உள்ளிட்ட பணிகள் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருவதாக கூறப்படுள்ளது. சென்னையில் சில இடங்களில் வேகத்தடைகள் அடையாளங்கள் மறைந்து போயிருப்பதால் வாகன ஓட்டிகள் கவனிக்காமல் வேகத் தடைகளில் ஏறி இறங்கும் நிலை உள்ளது. எனவே, வேகத்தடைகளுக்கு வெள்ளை பெயிண்ட் பூசுதல் போன்ற பணிகள் நடப்பது வாகன ஓட்டிகளுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வாகன ஓட்டிகள் கருத்து:

இது தொடர்பாக வாகன ஓட்டிகள் தரப்பில் கூறுகையில், "சென்னையில் பெய்த மழையினால் பல்வேறு இடங்களிலும் சாலைகள் சேதம் அடைந்து காணப்படுகிறது. தற்போது பழுதடைந்த சாலைகளை சீர் செய்யும் பணிகள் நடைபெற்று வருவதால் வாகன ஓட்டிகள் சிரமம் இன்றி பயணிக்க முடியும். வாகனங்கள் பழுதடைவது, பயணிகளுக்கு ஏற்படும் அசவுகரியம் ஆகியவை குறையும்.

பிரதான சாலைகள் மட்டும் இன்றி உட்புற சாலைகளிலும் சேதம் அடைந்த பகுதிகளை உடனடியாக சீர் செய்ய மாநகராட்சி நிர்வாகம் முழு வீச்சில் செயல்பட வேண்டும்" என்று வலியுறுத்தினர். தற்போது சாலைகளை சீர் செய்யும் பணி நடைபெற்று வருவது வாகன ஓட்டிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+