ப்ராஜெக்ட் "CSCP".. 5250 கேமரா.. 1750 இடங்கள்.. சென்னை மக்களே உஷாரா இருங்க.. போலீஸ் அதிரடி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களை, குற்றம் செய்பவர்களை கண்டுபிடிப்பதற்காக மாநகர போலீஸ் புதிய முறை ஒன்றை கையில் எடுத்துள்ளது.

சென்னையில் "பாதுகாப்பான சென்னை சிட்டி திட்டம்" அதாவது Chennai Safe City Project (CSCP) அமலுக்கு வந்துள்ளது. இதற்கான கட்டுப்பாட்டு அறை சென்னை கமிஷ்னர் அலுவலகத்தில் திறக்கப்பட்டு உள்ளது. இத்திட்டத்தின் கீழ், கிரேட்டர் சென்னை போலீஸ் (ஜிசிபி) எல்லையில் உள்ள 1,750 முக்கிய இடங்களில் 5,250 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.

Greater Chennai Coporation police brings AI camers helps to check on the citizens

இந்த கண்ட்ரோல் மையத்தில் இருந்து அனைத்து கேமராக்களின் நேரடி ஊட்டங்களும் கண்காணிக்கப்படும். அதன்படி, 1,336 இடங்களில் பொருத்தப்பட்டுள்ள 4,008 சிசிடிவி கேமராக்களின் லைவ் ஒளிபரப்பு முதல் கட்டமாக ஐசிசியில் உள்ள கண்காணிப்பு அறையில் பார்க்கப்படும். மேலும், சிசிடிவி கேமராக்களை வேப்பேரியில் உள்ள ஆணையர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் பார்க்க முடியும். இது ஐசிசியில் உள்ள பணியாளர்களால் கண்காணிக்கப்படும்.

சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களை, குற்றம் செய்பவர்களை கண்டுபிடிப்பதற்காக மாநகர போலீஸ் புதிய முறை ஒன்றை கையில் எடுத்துள்ளது. உலக தரத்தில் இந்த மாபெரும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு உள்ளது. செயின்/கைப்பை/மொபைல் பறிப்பு, பெண்களைத் துன்புறுத்துதல், பெண்களுக்கு எதிரான வன்முறை, கடத்தல், வாகனத் திருட்டு போன்ற குற்றங்கள் குறித்த வீடியோ சோதனைகள் இந்த அமைப்பு மூலம் செய்யப்படும்.

ஏஐ தொழில்நுட்பம் மூலம் இது செயல்படும். AI-சார்ந்த மென்பொருள் மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய உதவும்,. னெனில் கேமரா ஃபீட்கள் AI மென்பொருள் மூலம் ஆய்வு செய்யப்படும். குற்றங்கள் நடக்கிறதா என்று ஏஐ கண்டுபிடித்து தகவல் தெரிவிக்கும். கேமராவில் SOS சைகைகள், அதாவது கையை அசைத்தல், ஓடுதல் போன்ற நடவடிக்கைகள் செய்யப்பட்டால், இந்த ஏஐ உடனே தகுந்த நடவடிக்கை எடுக்க ICCC-ஐ எச்சரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கேமரா பைன்: இந்த கேமரா மூலம் போக்குவரத்து விதிமீறல் செய்பவர்களை பிடித்து அவர்களிடம் அபராதம் வசூலிக்க நேரம் செலவழிக்காமல், அவர்களை போட்டோ எடுத்து நேரடியாக அவர்களின் வாகன எண்ணில் இணைக்கப்பட்டு இருக்கும் விலாசத்திற்கும், போன் எண்ணிற்கும் அபராதம் அனுப்பப்படும் முறை கொண்டு வரப்பட்டு உள்ளது.

உதாரணமாக நீங்கள் வேகமாக ஹெல்மெட் போடாமல் பைக்கில் செல்கிறீர்கள். போலீசால் உங்களை பிடிக்க முடியவில்லை என்றாலும், அவர் போட்டோ எடுத்தால் போதும் அபராதம் உங்களை தேடி வருகிறது

முன்னதாக அபராத வீதிகளிலும் சில நாட்களுக்கு முன் மாற்றம் செய்யப்பட்டது. உதாரணமாக ஆம்புலன்சுக்கு வழிவிடவில்லை என்றால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. ஆம்புலன்சுக்கு வழிவிடுவது மிகப்பெரிய குற்றம்.

இது எந்த வாகனமாக இருந்தாலும் அந்த அபராதம் பொருந்தும். முக்கியமாக டிடிஎப் வாசன் போன்றவர்கள் சாலைகளில் அபாயகரமாக ஸ்டண்ட்களை செய்வதாகவும் புகார்கள் வைக்கப்பட்டு வந்தது. சாலை போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்று சமீபத்தில் தமிழ்நாடு போக்குவரத்து துறை போலீசாரும் எச்சரிக்கை விடுத்து இருந்தனர்.

தீயணைப்பு வண்டி, அவசர வாகனங்களுக்கு வழிவிடவில்லை என்றாலும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். தேவையின்றி ஹார்ன் அடித்தால் 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். ஆபத்தான முறையில் வண்டி ஓட்டினால் 10000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக சரக்கு ஏற்றிக்கொண்டு செல்லும் வாகனங்களுக்கு 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றெல்லாம் கடந்த சில தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் தற்போது இன்னொரு விதிமீறல் ஒன்றிற்கான அபராத தொகையும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+