இதென்ன புதுசா.. நிர்மலா சீதாராமனுக்கு எதிராக ஜிஎஸ்டி துணை கமிஷ்னர் உண்ணாவிரதம்.. ஷாக்கிங் காரணம்
சென்னை: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதவி விலகக்கோரி சென்னையில் ஜிஎஸ்டி மற்றும் கலால் துறை துணை ஆணையர் பாலமுருகன் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இதற்கு அவர் முக்கியமான காரணம் ஒன்றையும் தெரிவித்துள்ளார்.
2 ஏழை விவசாயிகளுக்கு எதிராக அமலாக்கத்துறையில் பதிந்த வழக்கை ரத்து செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜாதி பெயருடன் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பிய நிலையில் சர்ச்சை ஆனது. சம்மன் அனுப்பியது தொடர்பாக பல சர்ச்சைகள் எழுந்த நிலையில் அமலாக்கத்துறை புது முடிவு எடுத்துள்ளதாம். அமலாக்கத்துறையில் பதிந்த வழக்கை ரத்து செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

முன்பே இந்த வழக்கை கைவிட அமலாக்கத்துறை முடிவு செய்து இருந்தாலும்.. இன்னும் அது தொடர்பான வெளிப்படையான அறிவிப்பு வரவில்லை.
சர்ச்சை: விவசாயிகள் கண்ணையன் மற்றும் கிருஷ்ணன் ஆகியோருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பிய விவகாரம் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள அப்பம்மா சமுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கண்ணையன் மற்றும் கிருஷ்ணன். இவர்களுக்குத்தான் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது.
என்ன நடந்தது?: இவர்களின் நிலத்தை அபகரிக்கும் நோக்கில் பாஜகவின் சேலம் கிழக்கு மாவட்ட இலக்கிய அணி செயலாளர் குணசேகரன் என்பவர் தொடர்ந்து அச்சுறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து குணசேகரனுக்கு எதிராக இவர்கள் புகார் கொடுத்தனர். இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு நீதிமன்றத்திலும் வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த வழக்கிற்கு இடையேதான் இரண்டு விவசாயிகளுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது.
அமலாக்கத்துறை சம்மன்: சென்னை அமலாக்கத்துறை அலுவலகத்தில் வந்து ஆஜராகும்படி, விவசாயிகள் கண்ணையன் மற்றும் கிருஷ்ணனுக்கு கடந்த ஜூன் மாதம் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது . ஜூன் மாதம் அனுப்பப்பட்ட இந்த சம்மன் சர்ச்சையாக காரணம்.. அந்த சம்மனில் வீட்டு எண் உள்ளிட்ட விவரங்களுடன் ஜாதி பெயரும் இருந்தது.
வங்கி கணக்கில் 500 ரூபாய் கூட இல்லாத விவசாயிகளுக்கு சம்மன் அனுப்பப்பட்டது பெரிய அளவில் சர்ச்சசையானது. உணவிற்கே கஷ்டப்படும் இவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டது பெரிய பிரச்சனை ஆனது. அப்போது ஜாதி பெயர் கூறி சம்மன் அனுப்பப்பட்டதுதான் இத்தனை நாட்கள் கழித்து இந்த விவகாரத்தில் சர்ச்சை ஏற்பட காரணம்.
ராஜினாமா: இந்த நிலையில்தான் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதவி விலகக்கோரி சென்னையில் ஜிஎஸ்டி மற்றும் கலால் துறை துணை ஆணையர் பாலமுருகன் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
சாதிப் பெயரைக் குறிப்பிட்டு விவசாயிகளுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பிய விவகாரம்; மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதவி விலகக்கோரி சென்னையில் ஜிஎஸ்டி மற்றும் கலால் துறை துணை ஆணையர் பாலமுருகன் உண்ணாவிரதம் செய்து வருகிறார்.
சம்மன் அனுப்பியதில் சர்ச்சை: இரண்டு ஏழை விவசாயிகள் கண்ணையன் (வயது 72), கிருஷ்ணன் (67) சேலம் மாவட்டம் ஆத்தூரில் விவசாய நிலம் வைத்துள்ளனர். 6.5 ஏக்கர் விவசாய நிலம் இவர்களிடம் உள்ள நிலையில் அமலாக்கத்துறை உதவி இயக்குனர் ரித்தேஷ்குமார் சார்பாக இவர்களுக்கு சம்மன் கடந்த ஜூன் மாதம் 26-ந்தேதி அனுப்பப்பட்டு உள்ளது.
இந்த 2 விவசாயிகள் காட்டு எருமையை கொன்றதாக அதற்கு முன் சேலம் வனத்துறை அதிகாரிகள் பதிவு செய்த புகாரின் அடிப்படையிலேயே வழக்குப்பதிவு செய்யப்பட்டது என்று ஒரு பக்கம் கூறப்பட்டாலும்.. அதிகாரபூர்வமாக அமலாக்கத்துறை சம்மனில் என்ன வழக்கிற்காக சம்மன் அனுப்பப்பட்டது என்று கூறப்படவில்லை. தடைசெய்யப்பட்ட பட்டியலில் உள்ள காட்டு விலங்குகளை கொன்று விட்டதாக வனத்துறையினர் வழக்கு ஏற்கனவே முடிந்துவிட்டது. அதில் அவர்கள் குற்றம் செய்தது நிரூபிக்கப்படவில்லை என்று ஆத்தூர் கோர்ட் கூறிவிட்டது. இவர்கள் மீதான புகார் நிரூபிக்கப்படவில்லை. அப்படி இருக்க.. குற்றம் இல்லை என்று தீர்ப்பு வழங்கப்பட்ட ஒரு விவகாரத்தில் எப்படி அமலாக்கத்துறை சம்மன் அனுப்ப முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications