GST வரியில் விரிவாக்கப்படும்.. ஜீரோ வரி பிரிவு.. பல பொருட்களின் விலை அடியோடு குறைகிறது!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாடு முழுவதும் பயன்படுத்தப்படும் உணவுப் பொருட்களான UHT பால், முன்பே பேக்கேஜ் செய்யப்பட்ட பன்னீர், பிட்சா ரொட்டி, காக்கரா, சப்பாத்தி மற்றும் ரொட்டி போன்றவற்றுக்கு இனி GST இல்லை. ஜிஎஸ்டி கவுன்சில் தனது பூஜ்ஜிய வரி வரம்பை விரிவுபடுத்துவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதன்மூலம் 5% மற்றும் 18% வரிவிதிப்பில் இருந்த அத்தியாவசியப் பொருட்களுக்கு இனி வரி விலக்கு அளிக்கப்படும்.

இதேபோல், முன்பு 18% வரிவிதிக்கப்பட்ட பராட்டா மற்றும் பரோட்டா ஆகியவையும் பூஜ்ஜிய வரி வரம்பின் கீழ் கொண்டுவரப்பட உள்ளன. வரி விகிதங்களை சீரமைக்கும் அமைச்சர்கள் குழுவின் பரிந்துரையின் பேரில் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கல்வி சார்ந்த பொருட்களும் இந்த வரி குறைப்பினால் பெரிதும் பயனடையவுள்ளன.

GST slabs to have an extended version of the NIL category Prices of many products will go down

GST: ஜிஎஸ்டி வரி சீரமைப்பு

வரைபடங்கள், ஹைட்ரோகிராஃபிக் விளக்கப்படங்கள், அட்லஸ்கள், சுவர் வரைபடங்கள், உலக உருண்டைகள், அச்சிடப்பட்ட கல்வி விளக்கப்படங்கள், பென்சில் ஷார்ப்பனர்கள், அனைத்து வகையான பென்சில்கள் (கிரேயான்கள், பேஸ்டல்கள், டெய்லர் சாக்பீஸ் மற்றும் வரைதல் கரியன்கள் உட்பட), அத்துடன் பயிற்சிக் குறிப்பேடுகள், வரைபடக் குறிப்பேடுகள் மற்றும் ஆய்வகக் குறிப்பேடுகள் ஆகியவற்றுக்கு முன்பு 12% வரி விதிக்கப்பட்டது.

இப்போது இவை அனைத்தும் வரி விலக்கு பெற்றுள்ளன. இது மறைமுக வரி அமைப்பை சீரமைத்து, வரி அடுக்கு எண்ணிக்கையைக் குறைத்து, வகைப்பாட்டு சர்ச்சைகளைத் தீர்ப்பதற்கான அரசின் பரந்த முயற்சியை பிரதிபலிக்கிறது என அதிகாரிகள் தெரிவித்தனர். பூஜ்ஜிய வரி விகிதத்தை விரிவுபடுத்துவது குடும்பங்களுக்கும், மாணவர்களுக்கும் குறிப்பிடத்தக்க நிவாரணம் அளிக்கும். மேலும், வரி அமைப்பை எளிமையாகவும், வெளிப்படையாகவும் மாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இறுதி முடிவு, அடுத்த வாரம் டெல்லியில் நடைபெறவுள்ள 56வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்படவுள்ளது.

அதேபோல் ஜிஎஸ்டி முறையில் கொண்டுவரப்படும் புதிய மாற்றங்கள் இருசக்கர வாகனச் சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். முக்கியமாக பல இருசக்கர வாகனங்களுக்கான விலை கடுமையாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிறிய ரக இருசக்கர வாகனங்களுக்கான வரி 18% ஆக குறைக்கப்படும் நிலையில், பெரிய ரக பைக்குகளுக்கு 40% வரி விதிக்கப்படவுள்ளது.

350 சிசி வரையிலான மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்களுக்கான ஜிஎஸ்டி வரி தற்போதுள்ள 28% இலிருந்து 18% ஆக குறைக்கப்படும். இதனால் இந்த வகை வாகனங்களின் விலை குறையும். இருப்பினும், 350 சிசி மற்றும் அதற்கு மேற்பட்ட திறன் கொண்ட பைக்குகளுக்கு 40% ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும் என்பதால், அவற்றின் விலை அதிகரிக்கும்.

இருசக்கர வாகனங்களுக்கான ஜிஎஸ்டி வரி

மத்திய அரசு 2017 ஆம் ஆண்டில் ஜிஎஸ்டி முறையை அறிமுகப்படுத்தியது. அப்போது 5%, 12%, 18%, 28% என நான்கு அடுக்கு வரி அமைப்பு இருந்தது. இந்த புதிய மாற்றங்கள் ஜிஎஸ்டியை எளிமைப்படுத்தும் ஒரு பெரிய முயற்சியின் ஒரு பகுதியாகும். இதில் 12% மற்றும் 28% வரி அடுக்குகளை நீக்கி, அத்தியாவசியப் பொருட்களுக்கு 5%, வழக்கமான பொருட்களுக்கு 18% என இரண்டு நிலையான விகிதங்களை மட்டுமே கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், "சின் குட்ஸ்" மற்றும் ஆடம்பரப் பொருட்களான பிரீமியம் கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கு 40% சிறப்பு வரி விகிதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

GST: திருத்தப்பட்ட ஜிஎஸ்டி அமைப்பு

இந்த சீர்திருத்தங்கள் இன்னும் அமல்படுத்தப்படவில்லை. ஆனால், வரவிருக்கும் செப்டம்பர் மாத ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இது குறித்து மேலும் விவாதிக்கப்படும். புதிய ஜிஎஸ்டி 2.0 அமைப்பு வாங்குபவரை எவ்வாறு பாதிக்கும்? தற்போதைய நிலையில், 350 சிசி மற்றும் அதற்கு மேற்பட்ட இருசக்கர வாகனங்களுக்கு 28% வரி மற்றும் கூடுதலாக 3% செஸ் சேர்த்து, மொத்தம் 31% வரி விதிக்கப்படுகிறது. சிறிய பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்களுக்கு செஸ் இல்லாமல் 28% வரி விதிக்கப்படுகிறது.

திருத்தப்பட்ட ஜிஎஸ்டி அமைப்பு சிறிய திறன் கொண்ட இருசக்கர வாகனங்களுக்கு வரியை 18% ஆக குறைக்கும். அதேசமயம், 350 சிசி-க்கு மேல் உள்ள பைக்குகளுக்கு 40% சிறப்பு வரி விதிக்கப்படும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+