“உலகத்திலேயே இதான் ஃபர்ஸ்ட்” அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு - தடை பட்டு ஒருவழியா வந்தாச்சு..!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கிண்டியில் உள்ள கொரோனா மருத்துவமனை முதியோர் மருத்துவமனையாக மாற்றப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

கிண்டி மருத்துவமனை, 60 வயதை கடந்த முதியோருக்கான சிறப்பு மருத்துவமனையாக ஒரு மாதத்தில் மாற்றப்படும் என மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

கொரோனா நோயாளிகள் இல்லாததால் முதியோருக்கான மருத்துவமனையாக மாற்றப்பட உள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா மருத்துவமனை

கொரோனா மருத்துவமனை

சென்னை, கிண்டி கிங்ஸ் ஆய்வக வளாகத்தில், ரூ.127 கோடி மத்திய அரசு நிதியின் கீழ் தேசிய முதியோர் நல மருத்துவமனைக்கான கட்டடம் கட்டப்பட்டது. இந்த மருத்துவமனை பயன்பாட்டுக்கு வருவதற்குள், 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் கொரோனா தொற்று பரவல் தொடங்கியதால் இது கொரோனா சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்பட்டது. அங்கு, ஆக்சிஜன் வசதியுடன் 750 படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டு, கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

முதியோர் மருத்துவமனை

முதியோர் மருத்துவமனை

தற்போது கொரோனா தொற்று குறைந்து வருவதால் அந்த மருத்துவமனை பயன்பாட்டில் இல்லாமல் உள்ளது. இந்த மருத்துவமனையை முதியோருக்கான சிறப்பு மருத்துவமனையாக மாற்ற அரசு திட்டமிட்டுள்ளது.

இன்று செய்தியாளார்களிடம் பேசிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை கிண்டியில் உள்ள கொரோனா மருத்துவமனை, முதியோருக்கான மருத்துவமனையாக மாற்றப்படும் என்று தெரிவித்துள்ளார்.

ஒரு மாதத்தில்

ஒரு மாதத்தில்


மேலும் இன்னும் ஒரு மாதத்தில் இந்த மருத்துவமனை செயல்பாட்டுக்கு வரும் என்றும், கொரோனா நோயாளிகள் இல்லாத நிலையில், புதிய வசதிகளுடன் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கான மருத்துவமனையாக இது ஒரே மாதத்தில் மாற்றப்படும் எனவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

முதல் மருத்துவமனை

முதல் மருத்துவமனை

உலகிலேயே முதல்முறையாக முதியோருக்கான மருத்துவமனையாக இது அமையவிருக்கிறது என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கொரோனாவால் முதல் முதியோர் மருத்துவமனை அமைவது தற்காலிகமாக தடைபட்ட நிலையில் இன்னும் ஒரே மாதத்தில் இந்த மருத்துவமனை செயல்பாட்டுக்கு வரவிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+