Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வளைகுடா போரும் இந்தியாவின் சாட்டிலைட் புரட்சியும்.. 1990களில் சதாம் ஹுசைனால் என்ன நடந்தது தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: 1990-ம் ஆண்டு ஆகஸ்டில் ஈராக் அதிபர் சதாம் ஹுசைன் தலைமையில் ஈராக் படைகள் குவைத் நாட்டை ஆக்கிரமித்தது. உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்தச் சம்பவம், "வளைகுடா போர்" என அழைக்கப்பட்ட பெரும் சர்வதேச மோதலைத் தூண்டியது. குவைத் மீது ஈராக் படையெடுப்பை தொடர்ந்து, அமெரிக்கா தலைமையிலான 42 நாடுகள் கொண்ட கூட்டணி உருவாக்கப்பட்டது. இந்த கூட்டணி, "ஆபரேஷன் டெசர்ட் ஸ்டார்ம்" என்ற பெயரில் ஈராக் படைகளை குவைத் நாட்டிலிருந்து விரட்டும் நடவடிக்கையை ஆரம்பித்தது.

இந்தப் போர், இருபது நாட்களுக்கு மேல் நீடித்தது. ஈராக் படைகள், கூட்டணி விமானப்படை தாக்குதல்களுக்கு எதிராக நிலைநிறுத்த முடியாமல், இறுதியில் குவைத் விடுவிக்கப்பட்டது. போர் முடிவில் சதாம் ஹுசைன் தோற்கடிக்கப்பட்டார். இந்தப் போர் உலக அரசியல், பொருளாதாரம் மற்றும் ராணுவ துறைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. எண்ணெய் விலை உலகளவில் பறக்க, மத்திய கிழக்கு பகுதியில் புதிய பாதுகாப்பு பார்முலாக்கள் உருவாகின.

Iran Gulf Television Doordarshan

இந்தியாவில் நேர்மறை தாக்கம்

இந்தப் போர், இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளில் ஒரு புதிய ஊடக புரட்சிக்கு துவக்கமாக அமைந்தது. அந்த காலத்தில் இந்தியாவில் ஒரே தொலைக்காட்சி சேனல் - தூர்தர்ஷன் மட்டுமே இருந்தது. அரசியல் செய்திகள், விவசாயம், கலாச்சாரம் ஆகியவற்றையே பெரும்பாலும் ஒளிபரப்பும் இந்த அரசு சேனல், உலக நிகழ்வுகளை நேரடியாக, விரிவாக வழங்குவதில் பலவீனமாக இருந்தது.

ஆனால் வளைகுடா போர் நேரத்தில், அமெரிக்காவின் CNN, உள்ளிட்ட சர்வதேச சேட்டிலைட் சேனல்கள், நேரடி போர் காட்சிகளை ஒளிபரப்பத் தொடங்கின. பாக்தாத் நகரில் குண்டுவீச்சு, விமானப்படை தாக்குதல், ஸ்மார்ட் குண்டுகள் போன்றவை இந்தியர்களுக்கு முதன்முறையாக நேரடி காட்சிகளாக வந்தன. இந்தியாவில் பெரும்பாலானோர், முதலில் பெரிய டிஷ் ஆண்டெனாக்கள் மூலம், பின்னர் கேபிள் ஆபரேட்டர்கள் வழியாக, இந்த சர்வதேச நிகழ்வுகளை வீட்டிலிருந்தபடியே பார்த்தனர்.

Iran Gulf Television Doordarshan

சாட்டிலைட் சேனல் புரட்சி

இந்த அனுபவம், இந்தியர்களின் ஊடக பார்வையை முற்றிலும் மாற்றியது. தூர்தர்ஷனின் ஒரே மாதிரியான செய்தி, அரசியல் கட்டுப்பாடு ஆகியவற்றிலிருந்து மக்கள் வெளிவந்து, உலகம் முழுவதும் நிகழும் சம்பவங்களை நேரடியாகப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அது மட்டுமல்ல, அவற்றின் சர்வதேச ஒளிபரப்பு துல்லியத்தன்மையும், தொழில்நுட்ப தரமும் இந்திய மக்களை உலக பார்வையாளர்களாக மாற்றியது. உடனுக்குடன் ஒரு செய்தியை பார்ப்பதே புதிய அனுபவமாக இருந்தது.

உலகமயமாக்கலும் அதே நேரத்தில் இந்தியாவில் துவங்கியதால், இதைத் தொடர்ந்து, 1991-ல் ஸ்டார் டிவி, 1992-ல் ஜீ டிவி, M டிவி, பிபிசி உள்ளிட்ட சேனல்கள் இந்தியாவில் அறிமுகமானன. மக்கள் சாட்டிலைட் டிவி சேனல்கள் மீது ஆர்வம் காட்டினர். கேபிள் ஆபரேட்டர்கள் வீடுகளுக்கு நேரடி சேனல்கள் கொண்டு வந்து, இந்திய ஊடக வரலாற்றில் ஒரு புதிய யுகத்தைத் தொடங்கினார்கள்.

Iran Gulf Television Doordarshan

இந்த சேட்டிலைட் தொலைக்காட்சி புரட்சி, இந்திய கலாச்சாரம், பொழுதுபோக்கு, செய்தி பார்வை, வணிகம் என அனைத்திலும் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியது. மேற்கத்திய தொடர்கள், இசை நிகழ்ச்சிகள், 24x7 செய்தி சேனல்கள் ஆகியவை இந்தியர்களின் வாழ்வை மாற்றின. தூர்தர்ஷனின் காலமும் முற்றிலும் முடிவுக்கு வந்தது.

இன்றைய டிஜிட்டல் இந்தியா, ஓடிடி சேனல்கள், உலகளாவிய தகவல் பரிமாற்றம் ஆகியவற்றுக்கு அடித்தளமாக, வளைகுடா போர் காலத்தில் தொடங்கிய சேட்டிலைட் தொலைக்காட்சி புரட்சி முக்கிய பங்கு வகித்தது என்பதில் சந்தேகம் இல்லை. அதேநேரம், இப்போது தூர்தர்ஷன் காலம் மாதிரியே சேனல்கள் இருந்திருக்கலாமே, என்று புலம்பும் அளவுக்கு சில நியூஸ் சேனல்கள் கொண்டு போய்விட்டுவிட்டன என்பதையும் மறுக்க முடியாது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+