Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருவள்ளூரில் மாந்தோப்பில் 8 வயது குழந்தை.. அந்த நபர் ஹிந்தியில் பேசினாராம்! கும்மிடிப்பூண்டி கொடுமை

Subscribe to Oneindia Tamil

சென்னை: மகிழ்ச்சியுடன் பள்ளிக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்த 8 வயது சிறுமி, இப்போது மருத்துவமனையில் உயிருக்கு போராடி கொண்டிருக்கிறாள்.. சிறுமியை இந்த கதிக்கு ஆளாக்கிய அந்த கொடூரன் எங்கே இருக்கிறான் என்றே தெரியவில்லை.. சம்பவம் நடந்து 5 நாட்கள் ஆகியும், அந்த நபரை போலீசார் இன்னும் கைது செய்யாதது, பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை உண்டுபண்ணி வருகிறது.. சிறுமியை கடத்திய சிசிடிவியும் இணையத்தில் வெளியாகியிருக்கிறது.. என்ன நடந்தது திருவள்ளூரில்?

கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கத்தை சேர்ந்தவர் அந்த சிறுமி.. 8 வயதுதான் ஆகிறது.. அங்குள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வருகிறார்.

Gummidipoondi manthoppu thiruvallur

மாந்தோப்பு

கடந்த 12ம் தேதி வழக்கம்போல் பள்ளிக்கு கிளம்பி சென்றாள் சிறுமி.. 12ம் தேதி சனிக்கிழமை என்பதால், மதியமே பள்ளி முடிந்துவிட்டது.. எனவே, ஆரம்பாக்கத்திலுள்ள தன்னுடைய பாட்டி வீட்டுக்கு செல்வதற்காக, ரயில் நிலையத்தை கடந்து மாந்தோப்பு வழியாக நடந்து சென்றிருக்கிறாள் சிறுமி.. அப்போதுதான் இளைஞர் ஒருவர் பின் தொடர்ந்து வந்து சிறுமியை, கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

சிறுமியை இளைஞர் கடத்தி சென்ற வீடியோவும் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை தந்து வருகிறது.. மதிய நேரம் என்பதால், ரயில் நிலையத்தை ஒட்டியிருக்கும் அந்த சாலை வெறிச்சோடி காணப்படுகிறது.. சிறுமியை தவிர வேறு யாருமே அங்கு தென்படவில்லை..

8 வயது சிறுமி

சிறுமியின் பின்னாலேயே 25 மதிக்கத்தக்க இளைஞர் பின்னாடியே சென்றுள்ளார்.. அங்குமிங்கும் நோட்டமிட்ட இளைஞர், யாருமே அங்கு இல்லை என்பதை அறிந்து, சிறுமியின் வாயை பொத்தி, வலுக்கட்டாயமாக அருகிலிருந்த மாந்தோப்புக்குள் தூக்கி சென்றுவிட்டார்..

ஆள் நடமாட்டமேயில்லாத அந்த மாந்தோப்புக்குள் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.. பிறகு அந்த இளைஞர், தன்னுடைய நண்பருக்கு போனை போட்டு மாந்தோப்புக்கு அழைத்துள்ளார்.. நண்பரிடம் இந்த இளைஞர் இந்தியிலேயே பேசினாராம்.

ஆனால், அதற்குள் சுதாரித்து கொண்ட சிறுமி, இளைஞரின் முகத்தில் மண்ணை வாரி தூவிவிட்டு தப்பியிருக்கிறாள்.. உடல்நிலை மோசமடைந்து, தட்டுத்தடுமாறி, அலங்கோலமாய் வந்து விழுந்தாள் பாட்டியின் வீட்டில்...!!

மருத்துவமனையில் அனுமதி

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பாட்டியும், உறவினர்களும், நடந்தது குறித்து விசாரித்துள்ளனர்.. தனக்கு நேர்ந்த கொடூரத்தை சிறுமி சொல்லவும், ஆவேசமடைந்த் உறவினர்கள், இதுகுறித்து ஆரம்பாக்கம் போலீஸில் புகார் தந்தனர்.. பிறகு சிறுமியை கும்மிடிப்பூண்டி கோட்டக்கரையில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.. ஆனால், அங்கு சிறுமிக்கு சிகிச்சை அளிக்காமல் பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பியதாக தெரிகிறது.

ஏற்கனவே ஆரம்பாக்கம் போலீசில் புகார் தந்தும் போலீசார் நடவடிக்கை எடுக்காததால் உறவினர்கள் அதிருப்தி அடைந்தனர்.. அத்துடன், கும்மிடிப்பூண்டி மருத்துவமனையிலும் சிகிச்சை அளிக்காததால், மேலும் ஆவேசமானார்கள்.. எனவே, நேரடியாகவே கும்மிடிப்பூண்டி டிஎஸ்பி அலுவலகத்துக்கு சென்று இது தொடர்பாக புகார் தந்தனர்..

குற்றச்சாட்டுகள்

இதையடுத்து, டிஎஸ்பி. சிறுமியிடம் தனியாக விசாரணை மேற்கொண்டு, வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளார். அத்துடன், மேல் சிகிச்சைக்காக ராயபுரத்தில் உள்ள அரசு ஆர்.எஸ்.ஆர்.எம். மருத்துவமனையில் சிறுமி அனுமதிக்கப்பட்டார்..

சிறுமி பாலியல் வன்கொடுமை புகார் தொடர்பாக, ஆரம்பாக்கம் போலீசார் அலட்சியம் காட்டுவதாக குடும்பத்தினர் குற்றம் சாட்டுகிறார்கள்.. சம்பவம் நடந்து 5 நாட்களாகியும் குற்றவாளி, இதுவரை கைது செய்யப்படவில்லையே ஏன்? என்றும் கோபத்தில் கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்..

இதனிடையே, சிசிடிவி காட்சியில் சிக்கிய குற்றவாளியை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

போக்சோ சட்டங்கள்

ஆனால், சமீப காலமாகவே சிறுவர்கள், சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகிறது.. போக்சோ சட்டம் இருந்தும்கூட, குற்றங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே தான் இருக்கின்றன. குற்றங்கள் பதிவு செய்யப்படுவது தான் சமீப காலங்களில் அதிகரித்துள்ளதே தவிர, குற்றங்கள் குறையவில்லை.

பாலியல் கொடுமையில் பாதிக்கப்படுவது சிறுவர், சிறுமிகள் என்பதால், அவர்களின் எதிர்காலம் கருதி,. பெற்றோர்கள் பலரும் அச்சத்தினால் தான் புகார் செய்ய முன்வர தயங்குவதாக தெரிகிறது..

ஆனால், போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு உரிய காலத்தில், கடுமையான தண்டனையும் பெற்றுத்தரப்பட்டால் நிச்சயம் எல்லாரும் புகார் செய்ய முன்வருவார்கள்..

அதுமட்டுமல்ல, குற்றவாளிகளுக்கு உடனடியாகவே தண்டனை கிடைக்கும் என்ற நம்பிக்கையையும், போக்சோ வழக்குகள் விரைவாக தீர்க்கப்படுகின்றன என்ற நம்பிக்கையையும், பெற்றோர்களிடம் உறுதிசெய்ய வேண்டிய கடமை நம்முடைய தமிழக அரசுக்கும் இருக்கிறது..!!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+