Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Vijayakanth Vadivelu: விஜயகாந்த் இறப்புக்கு வடிவேலு போகாததற்கு இதுதான் காரணமா? சொர்க்கத்தில் கேப்டன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்தின் இறப்புக்கு தான் ஏன் செல்லவில்லை என்ற காரணத்தை தன்னிடம் நடிகர் வடிவேலு கூறியதாக "மாரீசன்" படத்தில் நடித்த குரு லக்ஷ்மன் பகிர்ந்துள்ளார்.

Vijayakanth Vadivelu

வைகை புயல் வடிவேலு, நடிகர் பகத் பாசில் உள்ளிட்டோர் நடித்த "மாரீசன்" படத்தில் நடித்தவர் குரு லக்ஷ்மன். இவர் "ஹார்ட் பீட்" எனும் வெப் தொடரிலும் நடித்துள்ளார். அது போல் லவ் ரிட்டர்ன் உள்ளிட்டவைகளிலும் நடித்துள்ளார்.

இவர் அண்மையில் ஒரு சேனலுக்கு பேட்டி அளித்திருந்தார். அப்போது அவர் வடிவேலு குறித்து நிறைய தகவல்களை பகிர்ந்துள்ளார். அவை என்ன என்பதை பார்க்கலாம். குரு லக்ஷ்மன் கூறுகையில், "மாரீசன் படத்தில் வடிவேலு சார் பையனாக நான் நடித்தேன்.

மதுரைக்காரன்

நானும் மதுரைக்காரன் என தெரிந்ததும் வடிவேலு சார் என்னிடம் நிறைய பேசுவார். அப்படி ஒரு முறை பேசிக் கொண்டிருந்த போது திடீரென நான் விஜயகாந்த் சார் குறித்து பேசித் தொடங்கினேன். அப்போது அவர் அமைதியாகிவிட்டார்.

விஜயகாந்த்

பின்னர் வடிவேலு சார் என்னிடம், "மனுஷன் (விஜயகாந்த்) இறந்ததுக்கு கூட என்னால் போக முடியல. நான் போய் இருக்கலாம், போய் இருந்தாலும் அவரை அவ்வளவு திட்டிட்டு எதுக்கு வந்தான்னு தப்பாதான் பேசுவாங்க.

குரு லக்ஷ்மன்

ஆனால் இப்ப மனசார சொல்றேன். விஜயகாந்த் தற்போது சொர்க்கத்தில்தான் இருப்பார்" என கலங்கியபடி சொன்னார் என குரு லக்ஷ்மன் தெரிவித்துள்ளார். வைகைப்புயல் என தமிழக மக்களால் கொண்டாடப்படுபவர் வடிவேலு. இவர் தனக்கென ஒரு காமெடி டிராக்கை உருவாக்கிக் கொண்டார்.

"என் ராசாவின் மனசிலே"

வடிவேலு "என் ராசாவின் மனசிலே" படத்தில் ராஜ்கிரணால் அறிமுகம் செய்யப்பட்டார். ஆனால் அவரை சின்னக்கவுண்டர் படத்தில் அணுகிய போது, அவர் நடிக்கக் கூடாது என கவுண்டமணி நிபந்தனை விதித்ததாகவும் அப்போது வடிவேலுவுக்கு ஆதரவாக விஜயகாந்த் வந்ததால் கவுண்டமணியும் அமைதியாகிவிட்டார் என்றும் சொல்லப்படுகிறது.

தவசி

இதைத் தொடர்ந்து விஜயகாந்துடன் வடிவேல் தவசி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இருவரும் மதுரைக்காரர்கள் என்பதால் நெருக்கமாக இருந்தனர். இப்படிப்பட்ட நிலையில் வடிவேலு நன்கு வளர்ந்ததும் அவரது அலுவலகம் முன்பு நிறுத்தப்பட்டிருந்த விஜயகாந்த் ரசிகரின் காரை எடுக்குமாறு கூறி வடிவேலு சில வார்த்தைகளை விட்டதால் விஜயகாந்துக்கு அவருடன் மனக்கசப்பு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.

பேச்சாளர்

கடந்த 2006ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் திமுக சார்பில் பேச்சாளராக களமிறங்கிய வடிவேலு, அப்போது களத்தில் இருந்த விஜயகாந்தை தனிப்பட்ட முறையில் பல்வேறு விமர்சனங்களை வடிவேலு வைத்திருந்தார். இதனால் வடிவேலு மீது விஜயகாந்த் ரசிகர்களும் தொண்டர்களும் கடும் கோபத்தில் இருந்தனராம்.

வடிவேலு சினிமா

இந்த நிலையில்தான் வடிவேலு சினிமாவில் இருந்து ஒதுக்கப்பட்டார். அப்போது கூட விஜயகாந்த், "நல்ல கலைஞனை ஒதுக்கிவிட்டார்களே" என ஆதங்கத்தை வெளிப்படுத்துவாராம். ஷூட்டிங் முடித்துவிட்டு வீட்டிற்கு வந்ததும் வடிவேலுவின் காமெடிகளை போட்டு விஜயகாந்த் பார்ப்பார் என அவரது இரண்டாவது மகன் சண்முகபாண்டியன் ஒரு நேர்காணலில் தெரிவித்திருந்தார்.

விஜயகாந்துக்கு அஞ்சலி

இந்த நிலையில் விஜயகாந்த் கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதி காலமானார். அவரது இறப்புக்கு அரசியல்வாதிகள், திரை பிரபலங்கள், பொதுமக்கள் என லட்சக்கணக்கான மக்கள் வந்து அஞ்சலி செலுத்தினர். ஆனால் தமிழகத்திலேயே இருந்த வடிவேலு, அவரது இறப்புக்கு வரவில்லை. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+