நச்னு சொன்ன குருமூர்த்தி.. கப்சிப் விஜய்.. திருச்சியில் தவறவிட்ட கடமை.. தொண்டர்களுக்கு அட்வைஸ் எங்கே
சென்னை: கரூர் விவகாரத்தில் சிபிஐ விசாரிக்க வேண்டும் என்ற உத்தரவால், திமுகவுக்கு எந்த பின்னடைவும் கிடையாது.. விஜய்யை எப்படியாவது சிக்க வைக்க வேண்டுமானால், இந்த அரசு எப்போதோ விஜய்யின் பெயரை எஃப்ஐஆரில் சேர்த்திருக்குமே? இதுவரை விஜய் பெயரை சேர்க்கவில்லையே.. எனவே, நடந்த சம்பவத்தை சிபிஐ கொண்டு விசாரிக்குமாறு கூறியிருப்பது, வழக்கமான சட்ட நடவடிக்கை" என்கிறார் அரசியல் விமர்சகர் லட்சுமணன்.
Tamil Niram என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள அரசியல் விமர்சகர் லட்சுமணன், ஒவ்வொரு மாதமும் விசாரணையை அறிக்கையை சிபிஐ வசம் தர வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள்.. எனவே குறைந்தது இந்த விசாரணை 3 மாதங்களுக்கு நீடிக்கும்..

அப்படியானால் இந்த 3 மாதத்துக்கு விஜய் அரசியலே செய்ய மாட்டாரா? விஜய்யை இழுக்க நினைக்கிற அதிமுக, பாஜகவும் அதுவரை வாய் திறக்க மாட்டார்களா?
இனி அடுத்தடுத்த நகர்வை நோக்கி இவர்கள் நகர வேண்டியிருக்கிறது.. அதிலும், இதுவரை ஏற்பட்ட தவறு இனிமேல் நடந்துவிடாமல் தடுப்பதில் விஜய்க்குதான் அதிக பொறுப்பு உள்ளது..
தவெக தொண்டர்கள் - ரசிகர்கள்
மற்ற கட்சிகளுக்கு இல்லாத அளவுக்கு கட்டுப்பாடுகள் தவெகவுக்கு மட்டுமே இருப்பதால், பொறுப்புகளும் விஜய்க்கு மட்டுமே அதிகம்.. இதற்கெல்லாம் விஜய் என்ன செய்ய செய்யணும்?
முதலில் தொண்டர்களுக்கு ஒரு அறிக்கையை விஜய் வெளியிட்டிருக்க வேண்டும்.. குறைந்தபட்சம் ஒரு ட்வீட் போட்டு, "கொஞ்சம் கட்டுப்பாடுடன் நடந்து கொள்ளுங்கள்"
என்று அறிவுறுத்த வேண்டும்.
வெளிமாநில நபர்கள்
கரூரில் 40 பேர் இறந்த சம்பவ எதிரொலியால்தான், அந்த கூட்டத்துக்கு வந்தவர்கள் பல மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்ற உண்மையே தெரியவந்தது.. ஒருவேளை துயர சம்பவம் நடக்காமல் போயிருந்தால், "செந்தில் பாலாஜி மாவட்டத்தில் எங்களுடைய கூட்டம்" என்று கெத்து காட்டி பேசியிருப்பார்கள்.
எனவே இனிமேலாவது விஜய் தன்னுடைய தொண்டர்களிடம், "உங்கள் ஊரிலேயே இருங்கள்,.. நான் எல்லா ஊருக்கும் வருகிறேன்" என்று அறிவுறுத்த வேண்டும்.. தொண்டர்களாக மாறாத, இன்னமும் ரசிகர்களாகவே தொடர்கின்றவர்களை, கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள சொல்ல வேண்டும்..
அறிவுறுத்தல் இல்லை
திருச்சி விமான நிலைய சம்பவத்தை பார்த்த பிறகாவது அறிக்கை வெளியிட்டிருக்கணும்.. இதில் எதுக்கு வெட்கம்? அப்படி ஒரு அறிக்கை அன்றையதினம் திருச்சியிலேயே வெளியாகியிருந்தால், விஜய் நிஜமாகவே ஒரு முன்னுதாரண நபராக திகழ்ந்திருப்பார். ஆனால் இந்த நிமிஷம்வரை தன்னுடைய தொண்டர்களுக்கு விஜய் எதையுமே சொல்லாமல் இருக்கிறார்.
பழிவாங்குவதாக இருந்தால் என்னை பழிவாங்குகள் என்று பத்தோடு பதினொன்றாக சராசரி அரசியல்வாதியாக நடந்து கொள்கிறாரே தவிர, எந்த வகையிலும் மாற்றான, புதுமையான, புது சிந்தனையுடைய தலைவராக விஜய்யை பார்க்க முடியவில்லை.. அதற்கான சந்தர்ப்பத்தையும் நமக்கு தர மாட்டேங்குறாரு..
திருப்பி திருப்பி ஒரே மாதிரி
திருப்பி திருப்பி எல்லாரையும் போலவே இவரும் நடந்து கொள்கிறார்.. கொள்கை எதிரி என்கிறார், ஆனால் பாஜக கிட்ட போய் மறைமுகமாக நிற்கிறார்.. ஆனால் வெளியில் வந்து என்ன சொல்ல போகிறார் தெரியவில்லை.. அதற்காக பொதுவான திறமையான வக்கீல் கூடவா கிடைக்கவில்லை.
குருமூரூத்தியை விஜய் சந்தித்து பேசியதாக தகவல் வெளியானபோது, அதை குருமூர்த்தி மட்டுமே மறுத்தார்.. ஆனால், விஜய் தரப்பிலிருந்து இதுவரை எந்தவிதமான மறுப்பும் வரவில்லை.. ஒரு சட்ட உதவிக்காக சென்று பார்ப்பதில் தவறில்லை.. ஆனால், எந்த நபர்களை, எப்படியெல்லாம் விஜய்யால் வர்ணிக்கப்பட்டார்கள் என்பது அனைவருக்குமே தெரியும்..
திமுகவுக்கு பின்னடைவு இல்லை
இன்று சிபிஐ விசாரணை கிடைத்ததையே வெற்றி, தோல்வி என்று தவெக, திமுக தரப்பில் பேசிக்கொள்கிறார்கள்..ஆனால் இறந்துபோன 41 பேரை பற்றி யாருமே கவலைப்படலையா?
சட்டரீதியான ஒரு சடங்கு முடிவுக்கு வந்துள்ளது.. இனி குறிப்பிட்ட திசையில் அந்த வழக்கு விசாரணை பயணிக்கும்.. இனி கரூர் சம்பவத்தை சிபிஐ விசாரிக்க போகிறது.. அதற்காக அந்த தீர்ப்பு, தமிழக அரசியலையே புரட்டி போடப்போகிறதா? யாருடைய தலையெழுத்தையாவது மாற்ற போகிறதா? நிச்சயம் கிடையாது.
எனினும் சிபிஐ விசாரணை உத்தரவால், திமுகவுக்கு பின்னடைவு கிடையாது.. விஜய்யை எப்படியாவது சிக்க வைக்க வேண்டுமானால், இந்த அரசு எப்போதோ விஜய்யின் பெயரை எஃப்ஐஆரில் சேர்த்திருக்குமே? இதுவரை விஜய் பெயரை சேர்க்கவில்லையே.. எனவே, நடந்த சம்பவத்தை சிபிஐ கொண்டு விசாரிக்குமாறு நீதிமன்றம் சொல்லியிருக்கிறது.. அவ்வளவுதான்" என்று தெரிவித்துள்ளார்.
-
விஜய்யால் தாமதமாகும் சிபிஎம்-திமுக தொகுதி பங்கீடு! பெ.சண்முகம் டிமாண்ட்! யோசிக்கும் ஸ்டாலின் -
“ ஹோட்டல் சாப்பாடு நடிகையைப் போல”.. சிவகுமார் சொன்ன உவமை.. பின்னணியில் இப்படி ஒரு சம்பவம் இருக்கா? -
வேல்முருகனின் மெகா பிளான் இதுவா? வன்னியர் சமூக வாக்குகளை வளைக்க பார்க்கிறாரா? -
மும்பை பயணம் முடிந்த கையோடு விஜய் எடுத்த முடிவு! புதுவை தவெக வேட்பாளர்கள் பட்டியல் நாளை ரிலீஸ் -
நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. மும்பைக்கு பறந்த விஜய்! பைனான்ஸ் செய்யும் அரசியல் புள்ளியின் வாரிசு -
பச்சை துண்டு போட்டு விஜய் கத்துனா விவசாயி ஆயிடுவாரா? சூட்டிங் வைத்து 50 பேரை கொன்னுட்டாரு! ஜூலி வீடியோ -
“திமுக தீயசக்தி”! கோஷம் போட்ட சிறுவர்கள்! த.வெ.க ராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் மீது பாய்ந்தது வழக்கு -
விஜயால் மது குடிக்காமல் இருக்க முடியாதா? யாரு சொன்னது? கண்முன்னே நடந்த சம்பவம்! சர்ச்சைக்கு அனு மோகன் பதிலடி -
Velmurugan: அதிமுகவில் 3 சீட்? பாஜக கூட்டணிக்கு செல்லமாட்டேன்! தவாக வேல்முருகன் உறுதி! -
TVK Vs AVK.. விஜய்க்கு எதிராக புதிய கட்சி தொடங்கிய பவர் ஸ்டார்.. ஆரம்பத்திலேயே தடாலடி சவால் -
"எம்ஜிஆர் போல இன்னொருவர் வர வாய்ப்பில்லை.." சிவகுமார் திட்டவட்டம்.. பாய்ந்து வரும் விஜய் ரசிகர்கள் -
சொதப்பும் ஸ்டாலின்.. திமுகவுக்கு எதிராக திரும்பும் வன்னியர் வாக்கு! தலித் வாக்குகளை பிரிக்கும் விஜய்












Click it and Unblock the Notifications