விவாகரத்து கோரி ஜிவி பிரகாஷ்-சைந்தவி மனு! அட இந்த டிவிஸ்ட்ட யாரும் எதிர்பார்க்கலையே!
சென்னை: இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், சைந்தவி, இருவரும் பரஸ்பரம் பிரிவதாக விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராகவும் நடிகராகவும் வலம் வருபவர் ஜி.வி.பிரகாஷ் . இவர், கடந்த 2013 ஆம் ஆண்டு தனது பள்ளித் தோழியும், தமிழ் சினிமா பின்னணிப் பாடகியுமான சைந்தவியை திருமணம் செய்து கொண்டார்.

ஜி.வி.பிரகாஷ் - சைந்தவிக்கு அன்வி என்ற மகள் உள்ளார். கடந்த 12 வருடங்களாக ஒன்றாக இருந்த இருவரும் தங்களது குடும்பத்தாருக்கு இடையே எழுந்துள்ள பிரச்சனையால் ஏற்கனவே சில ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருவதாக தெரிகிறது.
மேலும் இருவரும் பிரிவதாக அறிவித்த சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் பரஸ்பரம் விவாகரத்து கோரி இன்று மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனு சென்னை முதலாவது கூடுதல் குடும்ப நல நீதிமன்ற நீதிபதி செல்வ சுந்தரி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது ஜிவி பிரகாஷ், சைந்தவி, இருவரும் நேரில் ஆஜராகி, இருவரும் மனமுவந்து பிரிவதாக தெரிவித்தனர். இதனையடுத்து வழக்கு விசாரணைக்கு ஒத்தி வைக்கப்பட்ட பின் இருவரும் ஒரே காரில் புறப்பட்டு சென்றனர்.
சமீப காலமாக ஜெயம் ரவி, தனுஷ், ஏ.ஆர்.ரஹ்மான் என திரை நட்சத்திரங்களின் விவாகரத்து விஷயங்கள் பெரியதாக பேசப்பட்டு வருகின்றன. நீதிமன்றங்களை நாடும் இவர்கள் விசாரணையின்போது தனித்தனி காரில் வருகிறார்கள். இப்படி இருக்கையில் ஜிவி பிரகாஷ்-சைந்தவி வழக்கு விசாரணைக்கு பின்னர் நீதிமன்றத்திலிருந்து ஒரே காரில் புறப்பட்டு சென்றிருப்பது கவனம் பெற்றிருக்கிறது.












Click it and Unblock the Notifications