கொல்கத்தாவில் ஸ்டாலின் பேசிய பேச்சால், எச்.ராஜாவிற்கு கடும் கோபம் பாருங்க!
Recommended Video

சென்னை: கொல்கத்தாவில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி நடத்திய, எதிர்க்கட்சிகள் பேரணியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். அப்போது பிரதமர் மோடி பல்வேறு பொய் வாக்குறுதிகளை அளித்து ஆட்சியை பிடித்துள்ளதாக அவர் விளாசினார்.
பாஜக அரசை வீழ்த்துவோம் என்று அரைகூவல் விடுத்தார் ஸ்டாலின்.

இந்த பேச்சை பார்த்த பாஜக தேசிய பொதுச்செயலாளர்களில் ஒருவரான எச்.ராஜாவிற்கு கோபம். அதை தனது ட்வீட்டில் இப்படி வெளிப்படுத்தியுள்ளார்:
"1967ல் ரூபாய்க்கு மூன்று படி அரிசி லட்சியம் ஒரு படி நிச்சயம் என்று பொய்யான வாக்குறுதி கொடுத்து தமிழர்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த ஊழல் திமுக பாஜக வை விமர்சிப்பது யாரை ஏமாற்ற. சாமானியர் வேஷம் போட்டு இன்று தமிழகத்திலேயே மிகப்பெரிய கார்ப்பரேட் முதலாளி மு.க.ஸ்டாலினை வீழ்த்துவோம்". இவ்வாறு எச்.ராஜா தெரிவித்தார்.
1967ல் ரூபாய்க்கு மூன்று படி அரிசி லட்சியம் ஒரு படி நிச்சயம் என்று பொய்யான வாக்குறுதி கொடுத்து தமிழர்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த ஊழல் திமுக பாஜக வை விமர்சிப்பது யாரை ஏமாற்ற. சாமானியள் வேஷம் போட்டு இன்று தமிழகத்திலேயே மிகப்பெரிய கார்ப்பரேட் முதலாளிமு.க.ஸ்டாலினை வீழ்த்துவோம்
— H Raja (@HRajaBJP) January 19, 2019


Click it and Unblock the Notifications
