அவரே ஒரு பீஹாரி ... எச்.ராஜாவை "அந்த" வார்த்தை சொல்லி விமர்சித்த சீமான்.. சரமாரி பேச்சு!
சென்னை: இந்துவும் தமிழும் ஒன்று என்று கூறிய பாஜக மூத்த தலைவர் எச். ராஜாவின் கருத்துக்கு நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் பதில் அளித்துள்ளார்.
Recommended Video
கடந்த சில நாட்களுக்கு முன் ருத்ரதாண்டவம் படம் பார்த்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்த எச். ராஜா நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமானை கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார். சீமானின் பூர்வீகம் குறித்து கேள்வி எழுப்பி அவரையும், ஊடகத்தினரையும் கடுமையாக பேசி இருந்தார்.
எச். ராஜா தனது பேச்சில், தமிழையும் இந்துவையும் பிரிக்க முடியாது. தமிழ் வேற இந்து வேறன்னு பேசக்கூடிய அளவுக்கு நீங்கள் செல்ல கூடாது. அது மத மாற்றம் செய்பவர்கள் வேலை. நீங்க வேணும்னே மத மாற்றத்துக்கு துணை போக வேண்டாம்னு உங்களை கேட்கிறேன் என்று குறிப்பிட்டார்.

எச். ராஜா
மேலும் எச். ராஜா பேசுகையில், என்னை தமிழர் இல்லை என்று சொல்கிறார்கள். நான் சுத்தமான தஞ்சாவூர் காரன். உங்க எல்லாருக்கும் தமிழ் முழுசா தெரியுமா? ஒழுங்காக உங்களுக்கு ழவை உச்சரிக்க தெரியுமா ? இந்துவும் தமிழரும் வெவ்வேறுன்னு சொன்னது யாரு? நீங்கள் எல்லாம் என்னதான் பேசிகிட்டு இருக்கீங்க.. நீங்கள் எல்லாம் பிரெஸ்ட்டிடியூட்ஸ்.. இந்த மீடியா பீப்பிள் எல்லாருமே பிரெஸ்ட்டிடியூட்ஸ்தான்.

சீமான்
சீமான் அம்மா தமிழச்சியா? அவர் தமிழரா சொல்லுங்கள். அவர் தமிழரே கிடையாது. அவர் ஒரு மலையாளி.. என்று கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி எச். ராஜா நேற்று பேட்டி அளித்து இருந்தார். எச். ராஜாவின் இந்த பேட்டி கடும் சர்ச்சசையானது. நாம் தமிழர் தரப்பினர் எச். ராஜாவிற்கு எதிராக கடும் விமர்சனங்களை வைத்து இருந்தனர். இந்த நிலையில் எச். ராஜாவின் பேச்சுக்கு சீமான் தற்போது பதில் அளித்துள்ளார்.

பேட்டி
செய்தியாளர் சந்திப்பில் இந்துவும் தமிழும் ஒன்று என்று எச். ராஜா சொல்கிறாரே என்ற கேள்விக்கு பதில் அளித்த சீமான், இந்துவிற்கும் தமிழிற்கும் எதாவது சம்பந்தம் இருக்கிறதா? அவரே ஒரு.....(குறிப்பிட்ட வார்த்தையை கூறி எச். ராஜாவை விமர்சிக்கிறார்). இங்க பாருங்க.. சைவத்தையும் தமிழையும்தான் பிரிக்க முடியாது. சைவமும் தமிழும்தான் ஒன்று. 63 நாயன்மார்களும், 12 ஆழ்வார்களும் இந்துக்களா? எச், ராஜா என்னோடு பேசுவாரா? விவாதிக்க தயாராக இருக்கிறாரா? நான் ரெடி?

இந்து தமிழ்
இந்துவிற்கும் தமிழுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது. அவர் ஒரு பீகாரி. அவர் இந்து. அவருக்கும் தமிழுக்கும் சம்பந்தம் இருக்கிறதா? 63 நாயன்மார்களும், 12 ஆழ்வார்களும் தமிழ்நாட்டை தாண்டி எங்காவது இருக்கிறார்களா? வேறு ஏதாவது மாநிலத்தில் இருக்கிறார்களா? ஏன் இல்லை. அவர் பாடிகாட்டிய பாடலே இந்து பாடல் கிடையாது. அது சைவ பாடல்.

தமிழ்நாடு இந்து மதம்
சும்மா அவர் ஏதாவது பேசுவார். அவரை யாரும் கண்டுகொள்ளவில்லை. எச். ராஜாவை அடைத்து போட்டு வைத்து இருக்கிறார்கள். இதனால் என்ன பேசுவது என்று தெரியாமல் இப்போது வெளியே வந்து சீமான் மலையாளி, கொலையாளி என்று எச். ராஜா பேசிக்கொண்டு இருக்கிறார். தன்னுடைய இருப்பை காட்டிக்கொள்ள இப்படி பேசுகிறார். நம்மை யாராவது கவனிக்க மாட்டார்களா என்று கடுமையாக எதையாவது பேசுபவர்தான் எச்.ராஜா.

உள்ளாட்சி
உள்ளாட்சி அமைப்பில் நாங்கள் நேர்மையான ஆட்சியை செய்வோம். நாங்கள் கடந்த முறை 100 இடங்களில் உள்ளாட்சி தேர்தலில் உள்ளாட்சி தலைவராக வெற்றிபெற்றோம். அவர்கள் எல்லோரும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றனர். நேர்மையாக உள்ளாட்சி பகுதிகளில் ஆட்சி செய்தோம். உள்ளாட்சி அமைப்பில் நாம் தமிழர் நல்ல நிர்வாகத்தை மேற்கொள்ளும்.

திராவிடம்
ஆனால் இதன் மூலம் பெரிய அரசியல் மாற்றங்களை செய்ய முடியாது.அதற்கு சட்டசபை தேர்தலில் மக்கள் எங்களுக்கு ஆதரவு தர வேண்டும். திராவிட கட்சிகளுக்கு இடையில் வேறுபாடு கிடையாது. கடந்த ஆட்சியில் நிலவிய அதே டாஸ்மாக், மக்கள் பிரச்சனைதான் இப்போதும் நிலவுகிறது. இரண்டு கட்சியும் ஒரே விஷயத்தைதான் மாற்றி மாற்றி செய்து வருகிறது.

திமுக
கட்சியின் பெயர், கொடி மட்டும்தான் வித்தியாசம். நீட்டை ரத்து செய்வோம் என்று திமுக கூறியது.. ரத்து செய்து விட்டார்களா? வாக்குறுதிகளை நிறைவேற்றினார்களா?ஏற்கனவே திராவிட கட்சிகள் பாதி நூற்றாண்டுக்கு மேல் ஆட்சி செய்துவிட்டனர். உங்களால்தான் இப்போது எல்லா பிரச்சனையும் நிலவுகிறது, என்று சீமான் குறிப்பிட்டுள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications