"இந்தி தெரியாது போடா"ன்னா படிக்காம போங்க".. திராவிட இயக்கங்களின் அடித்தளமே பொய்தான்: எச்.ராஜா பளிச்
"இந்தி தெரியாது போடா என்றால் படிக்காதே என்று எச். ராஜா தெரிவித்துள்ளார்
சென்னை: திராவிட இயக்கங்களின் அடித்தளமே பொய்யும் பித்தலாட்டமும்தான்.. இவர்கள் இதுவரை பேசியது எதுவாவது உண்மையா இருக்கா? இந்தி தெரியாது போடா என்றால் படிக்காமல் போங்க.. நீ படிக்காதே போடான்னு நான் சொல்றேன். எம்மதமும் சம்மதம் என்பது ஏற்க வேண்டியது என்று சொன்னால், எம்மொழியும் நம் மொழி என்பதுதான் சரியான சிந்தனை.. இல்லேன்னா கிறுக்கு பிடிச்சு போச்சுன்னுதான் அர்த்தம்" என்று பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களை பாஜக தேசிய செயலாளரும், அக்கட்சியின் மூத்த தலைவருமான எச்.ராஜா சந்தித்து பேசினார்.. அப்போது பல்வேறு விஷயங்கள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு எச்.ராஜா அளித்த பதில்தான் இது:
"அனைத்து ஏழை மக்களுக்கும் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடித்த பின்பு இலவசமாக வழங்கப்படும்..
தமிழகத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகள் கொரோனா தொற்றை பயன்படுத்தி பொதுமக்களிடம் பல லட்ச ரூபாய் ஊழலில் ஈடுபடுகின்றன.

மருத்துவமனைகள்
அத்தகைய பிரைவேட் மருத்துவமனைகள் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.. எந்தவித மதரீதியான பாகுபாடும் இன்றி பிரதமர் மோடி திட்டங்களை கொண்டு வருகிறார்.. இது மக்களிடையே நம்பிக்கையையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறது. இதுக்கு அங்கங்கே முட்டுக்கட்டைகள் நடக்குதுன்னு கேள்விப்பட்டேன்.. இனிமேல் அப்படி நடக்காதுன்னு எதிர்பார்க்கிறேன்.

சனாதன இந்து தர்மம்
திருமாவளவனை போன்ற சமூக விரோத தீய சக்திகள், சனாதன தர்மத்தை வேரறுப்போம்னு மாநாடு போட்டிருக்கார்... அன்னைக்கு சனாதன இந்து தர்மத்தை வேருடன் அறுக்க போனவங்க யாரு, இந்த இந்து விரோத ஸ்டாலின், வைகோ இவங்க எல்லாம்தான்.. அதுக்கு அனுமதி தரப்பட்டதா இல்லையா?

பித்தலாட்டம்
திராவிட இயக்கங்களின் அடித்தளமே பொய்யும் பித்தலாட்டமும்தான்.. இவர்கள் இதுவரை பேசியது எதுவாவது உண்மையா இருக்கா? இந்தி தெரியாது போடா-ன்னு சொன்னால், நீ படிக்காதே போடான்னு நான் சொல்றேன்.
யார் உங்களை இந்தி படிக்கணும்னு சொன்னது? தேசிய கல்வி கொள்கையின்படி, எந்த பாடத்திட்டமாக இருந்தாலும் எல்லாருக்கும் சமம்தான்.

பன்முகத்தன்மை
போடா.. வாடான்னு சொல்ற இந்த அநாகரீக ஜந்துக்களை பார்த்து கேக்கறேன், எம்மதமும் சம்மதம் சொல்றீங்க, அதுதானே சரி.. தேசிய கல்விக் கொள்கையில் எல்லா மொழிகளும் இருப்பதனால், அது பன்முகத் தன்மை கொண்டதாக உள்ளது.. எல்லா மதங்களும் இருப்பது பன்முகத்தன்மையின் அடையாளம் என்று சொன்னால், எல்லா மொழிகளும் இருப்பதும் பன்முகத் தன்மையின் அடையாளம்தான்.

சரியான சிந்தனை
எம்மதமும் சம்மதம் என்பது ஏற்க வேண்டியது என்று சொன்னால், எம்மொழியும் நம் மொழி என்பதுதான் சரியான சிந்தனை.. இல்லேன்னா கிறுக்கு பிடிச்சு போச்சுன்னுதான் அர்த்தம். பிரதமரின் கிஸான் சம்மான் திட்டத்தில் முறைகேடு செய்தவர்கள் கழுத்தில் ஊழல்வாதி என்று போர்டு தொங்கவிட வேண்டும்" என்றார்.
-
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல்












Click it and Unblock the Notifications