தமிழிசை சொன்னது பாயும் புலியை.. எச். ராஜா அதை சாப்பாட்டு புளியாக்கிட்டாரே.. ஏன் இந்த குழப்பம்??
முக ஸ்டாலினின் பேச்சுக்கு எச்.ராஜா ட்வீட் போட்டு பதிலளித்துள்ளார்
Recommended Video
சென்னை: புளி பழுப்பது சாம்பாருக்குத்தான் என்று எச்.ராஜா ஒரு ட்வீட் போட்டு தமிழிசை சவுந்தராஜனுக்கு ஆறுதலும், முக ஸ்டாலினுக்கு பதிலடியும் தந்துள்ளார்.
சமீப காலமாகவே திமுக தலைவர் முக ஸ்டாலின் ஆட்சி கவிழ்ப்பு விரைவில் நடக்கும் என்று சொல்லி வருகிறார். நேற்றும்கூட விக்கிரவாண்டி எம்எல்ஏ ராதாமணியின் படத்திறப்பு விழாவில் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது, சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை வலியுறுத்தாமல் விட்டிருப்பது, புலி பதுங்குவது பாய்வதற்காக தான், ஓடி ஒளிவதற்காக இல்லை என்றும் ஸ்டாலின் சொன்னார்.
ஸ்டாலின் எந்த கருத்தை, எங்கிருந்து பேசினாலும், முதல் ஆளாக வந்துபதிலடி தருவது அநேகமாக தமிழிசையாகத்தான் இருக்கும். அந்த வகையில் நேற்றைய பேச்சுக்கும் கேகே நகரில் செய்தியாளர்களிடம் பேசும்போது, "மு.க.ஸ்டாலின் புலியா? இல்லை பூனையா? என்பதை நினைத்தால், கவலையாக உள்ளது" என்று தெரிவித்திருந்தார்.
தமிழிசையின் கவலையை அறிந்த பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா ட்வீட் போட்டு பதிலளித்துள்ளார். அதில், "புளி பழுப்பது சாம்பாருக்குதான்" என்று ஒத்தை வரியை குறிப்பிட்டு தமிழிசைக்கு ஆறுதலும், முக ஸ்டாலினுக்கு பதிலடியும் தெரிவித்துள்ளார்.
புளி பழுப்பது சாம்பாருக்குதான் https://t.co/lUQYirOaoM
— H Raja (@HRajaBJP) June 30, 2019
எல்லாம் சரிதான்.. ஆனால் தமிழிசை குறிப்பிட்டுச் சொன்னது பாயும் புலியா இல்லை பதுங்கும் பூனையா என்றுதான். ஆனால் "லி"யை "ளி"யாக்கி.. புலியை புளியாக்கி .. சாம்பார் சட்டிப் பக்கம் போய் விட்டார் எச்.ராஜா.
கொஞ்சம் குழம்பித்தான் போயிட்டார் போல.!
-
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications