கடவுள் இல்லை என்பவர்கள் கையில் கோவில்.. அறநிலையத்துறைக்கு எதிராக இந்துக்கள் வீதிக்கு வாங்க: எச்.ராஜா
சென்னை: கடவுள் இல்லை என்று கூறும் திமுக கையில் கோவில்கள் உள்ளன என்று விமர்சித்துள்ள பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, அறநிலையத்துறைக்கு எதிராக இந்துக்கள் வீதிக்கு வரவேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, "இன்று நம் கோவில்கள் நம்மிடம் இல்லை, திமுக கட்டுப்பாட்டில் உள்ளன. கடவுள் இல்லை என கூறும் திமுக 40,000 இந்து கோவில்களை தன் கையில் வைத்துள்ளது. உண்டியல் பணத்தை மட்டுமே அறநிலையத்துறை எடுத்துச் செல்கிறது. கோவில்களை முறையாக பராமரிப்பதில்லை. கோவிலை பராமரிப்பதற்கு உரிய சம்பளத்தை பூசாரிகளுக்கு கொடுப்பதில்லை.

திமுக ஆட்சியில் இந்துக்களுக்கு பாதுகாப்பு இல்லை. திருச்செந்துார் கோவில் கும்பாபிஷேக பணியில் முறைகேடு நடந்துள்ளது. அங்கு கான்கிரீட் தளங்கள் பெயர்ந்துள்ளன. தமிழகத்தில், 9,500 கோவில்கள் கணக்கே கொடுக்கவில்லை என நீதிமன்றம் சொல்கிறது. திமுக அரசு நடத்திய முருக பக்தர்கள் மாநாடு, இந்துக்களின் காணிக்கை பணத்தில் நடத்தப்பட்டது. அதற்கு இதுவரை கணக்கு கொடுக்கவில்லை. கணக்கு காட்டாத அறநிலையத்துறைக்கு எதிராக இந்துக்கள் வீதிக்கு வரவேண்டும்." எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களின் ஆண்டு வருவாய், செலவினங்கள் தொடர்பான கணக்குகளின் தணிக்கை அறிக்கைகளை, இந்து சமய அறநிலையத்துறை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய உத்தரவிடக்கோரி, மயிலாப்பூரைச் சேர்ந்த இண்டிக் கலெக்டிவ் டிரஸ்ட் தலைவர் டி.ஆர்.ரமேஷ், கடந்த 2023 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட், அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 9,525 கோவில்களின் கணக்குகள் தணிக்கைக்கு உட்படுத்தப்படவில்லை. தணிக்கைக்காக கோவில்களின் கணக்கு விபரங்களை சமர்ப்பிக்காதது ஏன்?
எத்தனை கோவில்களின் கணக்குகள் தணிக்கை செய்யப்பட்டுள்ளன? இன்னும் எத்தனை கோவில்களின் கணக்குகள் தணிக்கை செய்ய வேண்டியுள்ளது? எத்தனை கோவில்களின் தணிக்கை அறிக்கைகள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன? எத்தனை கோவில்களின் தணிக்கை அறிக்கைகள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படவில்லை? தணிக்கை செய்யப்படாததற்கான காரணம் என்ன என்பதை, அறநிலையத்துறை ஆணையர் கண்டறிந்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications